இது நாள் வரை நீங்கள் தியானத்தில் அறிந்த மார்க்கம் “ஞானத்தால் அறியும் மார்க்கம்…” நீங்கள் எடுத்துக் கொண்ட பக்தி முறை ஜெபவழி தியான வழி முறையில் ஞானம் கொண்ட ஞான வழித் தொடரினால்
1.உம் எண்ண அலைத் தொடரில்
2.எம் அலைத் தொடரின் தொடர்புடன்
3.ஞானத்தில் அறிந்த உண்மைகள் யாவையும்
4.செயல் முறையில் சித்துடன் காணப்படும் உண்மையையும்
5.செயல்படும் வழித் தொடர் நிலையையும் பாட முறைக்கு அறியுங்கள்.
காட்சி:-
ஒரு புட்டியில் தேன் உள்ளதைப் போன்றும் அத்தேனை உள்ளங்கையில் சிறிது விட்டுச் சுவைப்பதைப் போன்றும் தெரிகின்றது. இதன் விளக்கம் என்ன…?
விளக்கம்:-
பல தேனீக்கள் தன் உழைப்பால் சேமித்ததைச் சேமித்து வைத்த நிலை தான் புட்டியிலுள்ள தேன். அதைப் போன்று… சுவையான ஞானத் தேனின் சேகரிப்பு தான்… சக்தி பூண்ட ஞானிகளின் செயல் சேகரிப்பு…!
1.அவர்களின் ஞான அலைத் தொடரின் எண்ணமுடன்…
2.அவர்களின் அலைசக்தியான ஞான முறையை
3.இந்தத் தொடர் உபதேசத்தில் நீங்கள் அறிந்துள்ள தன்மையில்…
4.சேகரிக்கப்பட்ட இந்த ஞான அலையின் உண்மைதனை
5.புட்டியிலுள்ள தேனைச் சிறுகச் சிறுகக் கையில் ஊற்றிச் சுவைத்துப் பருகும் இனிமையான செயல் தன்மையில்
6.உங்களின் ஞானத்தால் அறிந்த நிலையின் செயல் வழிச் சித்து நிலை இருக்க வேண்டும்.
புட்டியிலுள்ள தேனை அப்படியே பருகினால் அதன் சுவையே தித்திப்பு திகட்டக்கூடிய எதிர்க்கும் தன்மை ஏற்படும். இதை உணர்ந்து ஞானத்தால் அறிந்து உண்மைதனைச் சித்து வழியில் அறிந்திட முதல் நிலை தான் “என்னை நீ காண்…!”
1.உன்னுள் உள்ள இறைவன் யார்…? என்பதை நீ முதலில் அறிந்து கொள்
2.நான் என்பது யார்…?
2.இச்சரீர பிம்பக் கூட்டில் ஒளி அலைகள் மோதலில் காணப்படும் நிழல் பிம்பம் ஒன்று.
3.நீரிலோ நிலைக் கண்ணாடியிலோ காணப்படுவது எதிர்பிம்பம்.
4.செயலாக உண்ணுவது கழிப்பது உறங்குவது செயல் பிம்பம்.
5.இதனை இயக்க்கூடிய ஆத்ம பிம்பம் தான் இப்பிம்பத்தையும் இப்பிம்ப எண்ணத்தையும் வழி நடத்திச் செல்வது…!
இதில் நான் என்பது யார்…?
ஆத்மாவாகித்தான் இச்சரீர பிம்ப எண்ணம் செயல் கொள்கின்றது. இச்சரீர பிம்ப செயலைத்தான் “நான்…” என்று உணர்ந்து நாம் எதனையுமே செயல்படுத்துகின்றோம்.
இச்சரீர பிம்பத்தில் ஓடும் எண்ணங்கள் யாவும் இச்சரீர சுழற்சியின் மோதலின் உணர்வுடனே செல்கிறது. செவி ஈர்த்து… கண் பார்க்கும் ஒளி வட்டத்தின் உணர்வுடனே… இவ்வெண்ணத்தைப் பாய்ச்சி “வாழ்க்கை” என்ற சூழலில் சுழலும் வட்டத்தின் செயலுக்காகவே வாழ்கிறோம்.
1.இச்சரீர பிம்பத்தின் நினைவுக்கும் - பிம்பத்தை அழகுபடுத்த ஆடை அணிகலன்களையும்
2.இப்பிம்பத்தின் வார்ப்பைப் பாதுகாக்க அதற்குகந்த சொகுசு முறையிலும் - பிம்பத்தின் சுவை ருசிக்காகவும்
3.இப்பிம்பத்தின் செயலை ஒத்த எண்ண ஓட்டமும் - பந்த பாசச் சுற்றுபுறச் சூழல் இவற்றின் செயல் வழிக்கொத்த உணர்வையும்
4.அதைப் போன்ற சரீர பிம்பச் செயல்களில் தான் இவ்வெண்ண ஓட்டங்கள் செயல்படுகின்றது.
அதிலிருந்து விடுபட்டு இச்சரீரத்தில் உள்ள உண்மை ஜீவ சக்தியான “ஆதிசக்தியின் உண்மைச் சக்தியை” ஆத்மா பெறவல்ல தன்மைக்கு நம் ஞானங்கள் செயல்பட வேண்டும்.
“ஆதி சக்தியான… நீர் சக்தியின் சக்தித் தொடர்பு தான்… சர்வ சக்தியையும் வளர்க்கவல்ல சக்தி…!”
1.ஆத்ம உயிருக்கு… இவ்வாத்மாண்டவன் வளரவல்ல தொடருக்கு
2.ஜீவத் துடிப்பு இயக்கத்தில் இருந்தால் தான்
3.அதன் வலுத் தன்மை கூட முடியும்.
காட்சி:-
கீழே ஒரு அடுப்பை எரிப்பதைப் போன்றும் பானை ஒன்றை அந்த அடுப்பில் ஏற்றி அந்தப் பானைக்குள் எதுவோ வெந்து கொண்டிருப்பது போன்றும் வேகப்படும் பொருளின் ஆவி வெளிப்படுவதைப் போன்றும் தெரிகின்றது.
விளக்கம்:-
இந்தப் பூமி அடுப்பைப் போன்றது. இச்சரீரம் பாத்திரம் போன்றது. அதில் வேகப்படும் பொருள் எவ்வெண்ணத்தை எல்லாம் கொண்டு இச்சரீரத்தில் நாம் போடுகின்றோமோ… அதன் சுவை தான் சொல்லாகவும் செயலாகவும் வெளிப்படும்.
பாத்திரத்தில் போட்டு வேகப்படுவதைப் போன்று இவ்வெண்ணத்தால் போடப்படும் நிலையின் சுவைதான் “இச்சரீரத்தை இயக்கும் உயிராத்மா பெறுகின்றது...”
பாத்திரத்தில் வேகப்படும் பொருளின் சுவை… மணம்… எப்படி ஆவியான தன்மையில் வெளிப்படுகின்றதோ அதைப் போன்று தான் இப்பால்வெளி மண்டலத்தின் சூரியனின் வளர்ப்புப் பிடியின் மோதலினால் இந்தப் பிம்ப இயக்கம் உள்ளது.
1.நீங்கள் பெற்ற ஞானத்தின் செயல் தொடர்பில்..
2.ஆத்மாவின் உண்மை இயக்கத்தை…
3.“உன்னை நீ காண்…!” என்ற பொருளின் உண்மையை செயல் அறிந்திடுங்கள்…!