ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 4, 2023

“உயிரின் நினைவாகவே… நினைவுகள் அனைத்தும் உயிருடன் ஒன்றியே…” நாம் வாழ்தல் வேண்டும்

ஓ…ம் ஈஸ்வரா…! புருவ மத்தியில் இருக்கும் உயிர்…
1.நாம் பார்ப்பதை… கேட்பதை… நுகர்வதை எல்லாம் ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றிக் கொண்டே உள்ளது..
2.ம்… என்று உடலாக மாற்றிக் கொண்டே உள்ளது.

ஆதிசக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா…! ஆதிசக்தி என்பது விஷம் அந்த விஷத்தின் தாக்குதலால் ஏற்படுவது தான் வெப்பம் அந்த வெப்பத்தின் தாக்குதலால் அணுக்களாகச் சிதறி ஓடுகின்றது.

சிதறி ஓடும் போது அந்த நேரத்தில் ஈர்க்கும் காந்தம் வருகின்றது. அதற்கு லட்சுமி என்று காரணப் பெயர் வைத்துள்ளார்கள்.

1.நமது உயிர் ஆதி சக்தியின் துடிப்பின் இயக்கமாக நம்மை இயக்கிக் கொண்டுள்ளது
2.அதனால் தான் ஆதி சக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா…! என்று சொல்கின்றோம்.

குருதேவா…! நம் உடலுக்குள் இருக்கும் அனைத்து உணர்வுகளுக்கும் குணங்களுக்கும் உடலுக்கும் உயிரே குருவாக இருக்கின்றது ஆகவே நான் நமது உயிரைக் குருவாக எண்ணி ஏங்குகின்றோம்.

நமது குருநாதர் (மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்)
1.எதன் வழியில் இந்த வாழ்க்கையில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றும் அருள் சக்தி பெற்றாரோ அந்தச் சக்திகளையும்
2.அகஸ்தியன் பெற்றதை நமது குரு பெற்று அதன்வழி நமக்குள் உபதேசித்த உணர்வையும்
3.நாம் நுகர்ந்து நமக்குள் பதிவாக்கிக் கொண்ட பின்…
4.அப்படிப் பதிவான அனைத்தையும் நாம் குருவாக மதித்தல் வேண்டும்.

ஒரு மனிதன் கோவிக்கின்றான் என்றால் அந்த கோபத்தின் உணர்வு நமக்குள் பதிவாகி இருக்கும் பொழுது அதை மீண்டும் எண்ணினால் அந்த கோபத்தின் உணர்வே நமக்குள் குருவாக இருக்கும்.

அதே போன்று வேதனையான உணர்வை நுகர்ந்தால் வேதனையை அறிகின்றோம்… அந்த உணர்வு பதிவாகிறது. மீண்டும் அதே வேதனையை எண்ணினால் அதுவே வேதனைப்படுத்தும் உணர்வின் குருவாக நமக்குள் இருக்கும்.

1.ஆனால் நமது குரு மனித வாழ்க்கையில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிடும் அருள் சக்தி பெற்றவர்.
2.அவர் உணர்வுகளை நுகர்ந்து நமக்குள் அதைக் குருவாக உருவாக்க வேண்டும்.

நமது உயிரும் பல கோடிச் சரீரங்களை கடந்து ஈசனாக இருந்து வாழ்க்கையில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிடும் உடலை (மனிதனாக) அமைத்தது… நமக்குக் குருவாக அமைந்திருக்கின்றது அனைத்திற்கும் குருவாக நம் உயிரே இருக்கின்றது.

என் இசையில் நீ இசைப்பாய் என் நினைவில் நீ வருவாய்…! எதை எல்லாம் நாம் எண்ணுகின்றோமோ இந்த உணர்வின் இசையாக சொல்லாகவும் செயலாகவும் நான் நுகர்ந்த உணர்வுக்கொப்ப உடலாகவும் அமைத்துக் கொண்டு இருப்பது நம் உயிர் தான்.

ஆகவே…
1.இயற்கை நிலைகள் என்னை மனிதனாக உருவாக்கிய
2.இந்த உணர்வின் நினைவு எனக்குள் எப்பொழுதுமே வரவேண்டும்.

அதாவது… பல கோடிச் சரீரங்களில் தீமைகளை அகற்றி உணர்வை ஒளியாக மாற்றிடும் மனித சரீரத்தைக் கொடுத்த “உயிரான ஈசனை… நாம் நினைவில் கொள்தல் வேண்டும்…”

இருளை நீக்கி ஒரு பொருளைக் காணச் செய்வதும்… அந்த உணர்வின் உணர்ச்சியின் இயக்கங்களைக் காணச் செய்வதும்… நமது உயிரே. உணர்வை அறிவாக இயக்கி அறிவின் உணர்வாக நம்மை இயக்குவதும் நமது உயிரே. எப்பொழுதுமே உன் நினைவாகவே நான் இருத்தல் வேண்டும்,

என் இசையில் நீ இசைப்பாய் என் நினைவில் நீ வருவாய்…!
1.உயிராக இருந்து நுகர்ந்த உணர்வுகளை எப்படி எனக்கு அறிவிக்கின்றாயோ
2.இதைப் போன்று ஏகாந்த நிலைகள் கொண்டு அருள் ஒளி பெற்று துருவ நட்சத்திரமாக இருக்கும் அந்த அருள் ஒளியைப் பெற்று
3.நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக உருவாக்கும் உணர்வு அந்த நினைவு என்னில் வர வேண்டும் ஈஸ்வரா.

உயிரான உணர்வுகள் ஒளியான உணர்வாக உருவாகி… அனைத்தையும் உணர்வின் அறிவாக இயக்குவதும்… மனிதன் ஆன பின் அனைத்து அறிவையும் இயக்கி
1.அறிவின் ஒளியாக ஒளியின் சரீரமாக உருவாக்கும் அந்த (உன்னுடைய) அருள்…
2.உன் நினைவு எனக்குள் வரவேண்டும் என்று தான் பொருள்.
3.உயிரின் நினைவாகவே… நினைவுகள் அனைத்தும் உயிருடன் ஒன்றியே நாம் வாழ்தல் வேண்டும்.

நாம் எதை எண்ணுகின்றோமோ அதைத்தான் உயிர் இயக்குகிறது என்று அறிகின்றோம். ஆகவே அருள் ஒளி பெறும் உணர்வினை நாம் எண்ணி நம் எண்ணங்கள் அனைத்தும் உயிருடன் ஒன்றி அவனிடம் அதை வேண்டினால்
1.நாம் வேண்டிய உணர்வுகளை ஒளியாக இயக்குகின்றான்
2.இருளை அகற்றிடும் ஒளியாக மாற்றுகின்றான்.

அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் அகஸ்திய மாமகரிஷியின் அருல் சக்தியும் துருவ மகரிஷியின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானிப்போம்.

இந்த உணர்வுகளை உயிர் வழி செலுத்தப்படும் பொழுது
1.அதன் உணர்வைப் பெறும் நிலையாகவும்…
2.அதன் வழி நுகரச் செய்வதும்…
3.அந்த அருள் ஒளியை நமக்குள் இயக்கச் செய்வதும்…
4.அணுவாக உருவாக்குவதும் அதை உடலாக ஆக்குவதும்…
5.“அருள் வழியில் - அதுவே உயிரின் வேலை…!”

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…! ஓம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும் போதெல்லாம் புருவ மத்தியில் நினைவைச் செலுத்தி… உயிரான ஈசனை மதித்து… உடலில் இருக்கும் அனைத்திற்கும் ஈசனும் அவனே…! குருவும் அவனே…! என்று மதிக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் ஈஸ்வரா என்று உயிரான ஈசனை வேண்டுவோம்.

பின் கண்களை மூடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து இரத்தநாளங்களில் கலந்து… இரத்த நாளங்களில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று நாம் ஏங்கித் தியானிப்போம்.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் வாழ்ந்த காலத்தில்
1.தாய் கருவிலே அவன் பெற்ற நஞ்சினை வென்றிடும் உணர்வுகளையும்
2.அவன் பிறந்த பின் சர்வ நஞ்சுகளையும் தனக்குள் ஒடுக்கிடும் சக்திகள் பெற்றதையும்
3.இருளை அகற்றிடும் அருள் சக்திகள் பெற்று மெய்ப் பொருள் கண்டுணர்ந்து வாழ்ந்த… அவனில் விளைந்த உணர்வுகளையும்
4.நாம் நுகர்வோம்…. நம் உடலுக்குள் செலுத்துவோம்
5.அருள் ஒளி பெறும் உணர்வை நமக்குள் உருவாக்குவோம்.

அகஸதிய மாமகரிஷியின் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து ஜீவ அணுக்கள் ஜீவான்மாக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா.