ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 9, 2023

இராமலிங்கம் - உடலற்ற லிங்கம்

தன்னை இயக்குவது யார்…? என்று உயிரின் தன்மையை அறிந்திடும் நிலை பெற்றுத் தன்னில் ஒளியின் உணர்வு பெற்றவர்கள் தான் மகரிஷிகள்.

அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நாம் நுகர்ந்து
1.தன்னில் தான் அறிந்து தன்னை இயக்கும் தீமைகளில் இருந்து விடுபட்டு
2.அருள் வழி கொண்டு தீமைகளைத் தான் கட்டுப்படுத்தி உணர்வுகளை ஒளியாக மாற்றி
3.அருள் ஒளி என்ற உணர்வினை உருவாக்கி அதைப் பிரம்மமாக்கி
4.அருள் சிவமாக நமக்குள் உருவாக்கிடல் வேண்டும் “ஒளியின் சரீரமாக…!”

எண்ணத்தின் உணர்வு கொண்டு உணர்வின் தன்மை ஒளியாக மாற்ற வேண்டும். அதாவது…
1.எண்ணம் இராமன் என்றும்
2.உணர்வின் தன்மை ஒளியாகப் படும் பொழுது இராமலிங்கம் என்றும்
3.உயிரின் தன்மை வரும் பொழுது உடலற்ற லிங்கமாக உணர்வின் ஒளியாக
4.அருள் வழி கொண்டு உலகில் நஞ்சினை வென்றிடும் உணர்வின் ஒளியாக மாறும்.

ஞானிகள் காட்டியது…
1.உணர்வுகள் எண்ணத்தால் தான் வருகின்றது
2.உணர்வும்… உணர்ச்சிகளும்… எண்ணங்கள் வருவதும்…
3.உணர்வுக்கொப்ப உடல் அமைவதும்
4.உணர்வுக்கொப்ப எண்ணங்கள் செயலாக்குவதும்… அதனை உணவாக்குவதும்
5.எதனின் உணர்வைப் பெற்றதோ அதனின் உணர்வினை நுகர்ந்தறிந்து
6.அதன் உணர்வின் எண்ணங்களாகச் செயல்படுவதும் இதுவே.

அணுவின் ஆற்றலைக் கண்டுணர்ந்து… பிரபஞ்சத்தின் இயக்கத்தையும் அகண்ட அண்டத்தையும் தன்னுள் உணர்ந்து… அண்டத்தின் சக்தி பிண்டத்திற்குள் இயக்குகிறது என்ற நிலையைத் தன்னைத் தான் அறிந்தவன் அகஸ்தியன்.

அவன் வாழ்ந்த காலத்தில் உடலில் வளர்த்துக் கொண்ட அந்த அருள் உணர்வுகள் அனைத்தும் இங்கே பரவியுள்ளது. அதை நாம் பெறுவோம்.

அதே சமயத்தில் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக அழியாத நிலைகள் கொண்டு இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளான்.

1.அவன் துருவ நட்சத்திரமாக ஆன நிலைகளை நாமும் பின்பற்றுவோம்.
2.அருள் ஒளி பெறுவோம்… முழுமை பெறுவோம்.
3.நமது எல்லை அந்தச் சப்தரிஷி மண்டலம் தான் என்று உணர்ந்து அதை நாம் அடைந்திடுவோம்.