ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 22, 2023

உயிர் சேர்த்துக் கொண்டது ஆன்மாவாகி… உயிரான்மாவாகிறது - விளக்கம்

உதாரணமாக உடலில் நோயாகி விட்டால் மருத்துவரிடம் செல்கிறோம். அவர் கொடுக்கும் மருந்தைச் சாப்பிட்டு. உடல் சீக்கிரம் நலமாக வேண்டும் என்று விரும்புகின்றோம்.

மருத்துவர் கொடுக்கும் மருந்து இரத்தத்தில் அது கலந்த பின் வேலை செய்கிறது. இருந்தாலும்
1.மருந்துக்கு விஷத்தின் தன்மை கொடுக்கப்படும் பொழுது வேதனை என்று வருகின்றது.
2.ஏனென்றால் மருந்திற்கு அந்த விஷம்தான் வீரியத்தன்மை கொடுக்கின்றது
3.விஷத்தின் தன்மை ஊட்டியபின் உடலுக்குள் ஊடுருவி வேகமாகச் சென்று உற்சாகமும் ஊட்டுகின்றது.
4.சிறுநீரகத்திற்கு வரப்படும் பொழுது இரத்தம் அங்கே வடிகட்டப்படும் போது விஷம் அதிலே மாட்டிக் கொள்கிறது.
5.கிட்னி சரியாக இயங்கவில்லை என்றால் உப்புச் சத்து சர்க்கரைச் சத்து எல்லாம் வந்து விடுகின்றது.

சிறுநீரகம் சரியாக இரத்தத்தைச் சுத்திகரிக்கவில்லை என்றால் வடிகட்டும் தன்மை இழந்து சர்க்கரை உப்பு இவைகளின் அளவு இரத்தத்தில் அதிகமாகி
1.நுரையீரலுக்குச் செல்லும் போது அங்கே வடிகட்டும் நிலைகளீல்
2.பின்னிக் கிளைகளாக வரப்படும் போது… சளியாக அங்கே சேர்ந்து கொள்கின்றது.
3.சளி சேரச் சேர… கட்டியாக உறைந்து நீர் அதிகமாகக் கோர்த்த பின் புஷ்… கிஷ்… என்று மூச்சுத் திணறலாகிவிடும்.

அது மட்டுமல்ல…!

சளியினால் வழுவழுப்பான நிலைகள் அங்கே அதிகமான பின் நாம் உணவாக உட்கொள்ளும் எதையுமே… ஆகாரத்தை வாந்தியாக வெளி தள்ளிக் கொண்டே இருக்கும். உட;ல் எங்கே சௌகரியமாவது…? ஒன்று சரியானாலும் மற்றொன்று இப்படி மாறி வந்துவிடுகிறது.

ஆக… பிறர் செய்யும் தீமைகளை எல்லாம் சந்தர்ப்பவசத்தால் நாம் நுகர… அந்த உணர்வலைகள் நம் இரத்தத்தில் கலக்கக் கலக்க… அதனின் வளர்ச்சி இப்படி ஆகிக் கொண்டே இருக்கின்றது.

இன்று மனிதனாக இருக்கின்றோம் இதை எல்லாம் தெரிந்து கொள்கின்றோம். ஆனால் மற்ற உயிரினங்களோ
1.தன்ன்னைத் தாக்க வரும் எதிரிடமிருந்து “தப்பிக்க வேண்டும்…” என்ற வலுவான உணர்வை நுகர்கின்றது… அறிகின்றது
2.இரத்த நாளங்களிலே அந்த (தப்பிக்கும்) உணர்வுகள் பெருகுகின்றது
3.அதனுடைய உடலில் புதுப்புது வைரஸ்களாக அது மாறுகின்றது
4.அதனுடைய கரு முட்டைகளும் இரத்தத்திலே பெருகுகின்றது.

பின் உடலை விட்டு வெளியே வரும் பொழுது அந்தக் கரு முட்டையுடன் சேர்ந்து தான் உயிர் வெளியே வருகின்றது அதனால் தான் அதை “உயிரான்மா” என்று சொல்வது (இது முக்கியம்). உயிருடன் சேர்த்து இந்த உடலில் விளைய வைத்த அந்த ஆன்மா வெளி வருகின்றது.

1.எந்த உயிரால் அந்த உடலில் வளர்க்கப்பட்டதோ
2.அதனுடைய சத்து அதிலே எது அதிகமோ அதன் வழி இந்த உயிர் வெளியே வரப்படும் பொழுது
3.அந்த உணர்வுக்கொப்ப மாற்று உடலாக உயிர் அமைத்து விடுகின்றது.

ஆனால் இதை யார் செய்தது…? அந்த உடலில் நுகந்த உணர்வுக்கொப்ப எது அதிகமோ அதற்குத் தக்க உறுப்புகளை மாற்றிவிடுகிறது… உறுப்புகளை மாற்றி உடலை மாற்றுகிறது.

இன்று ஆடாக இருப்பதை நாளைக்கு ஓநாயாக மாற்றி விடுகின்றது… ஆடு புலியை உற்றுப் பார்த்தால் புலியாக மாறுகிறது. ஒரு நரியைப் பார்த்து அதனின் உணர்வை எடுத்தால் அதன் நிலைக்குத் தான் அந்த ஆடு மாறுகிறது.

ஆனால் ஆடு ஒன்று தான்…! அதனுடைய வாழ்க்கையில் எந்த மிருகத்தை அதிகமாக உற்று நோக்கி அதனிடமிருந்து தப்பும் நோக்கில் உணர்வுகளைக் கவர்ந்ததோ… அது இரத்தத்தில் கலந்தால் அதிலே அது பெருகி… அதன் வழி கொண்டு எது அதிகமோ அதற்குத்தக்க மாறுகிறது.

1.இப்படி இந்த உயிர் எதை எதை நுகர்ந்ததோ அதற்குத் தக்க ஆத்மாவாகப் பெருக்கி
2.ஆன்மாவிற்குத் தக்கவாறு உடலை அமைத்து
3.அந்த உடலுக்கொப்ப உணர்ச்சிகளாக இயக்கி
4.அதன் வழிகளில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதனை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.