ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 16, 2023

“வாழ்க்கையில் சலிப்படைந்த பின் தான்…” ஞானத்தைத் தேடுகின்றார்கள் இன்றைய மனிதர்கள்

இச்சரீர பிம்ப உடலில் உணர்வின் எண்ணத்தில் காணும் இன்ப நிலை ஒன்றைத்தான் மனிதன் பெரு நிலையாக எண்ணத்தின் ஏக்கத்துடன் வாழ்கின்றான்.

1.உணவின் சுவை…
2.நுகரும் மணத்தின் நிலை…
3.உறக்கத்தின் இன்ப நிலை…
4.உடல் இச்சையின் காதல் களிப்பு நிலை.. இவற்றின் இன்பத்தையும்
5.ஒளி கொண்டு காணும் இயற்கை அழகு… கலை இன்ப நிலை…
6.நகைச்சுவை நிலை… பிள்ளைக் கனியமுதின் வளர்ப்பு நிலை…
7.அன்பு பாசம் பரிவு பரவசச் செயல் நிலை…
8.இவற்றின் தொடரில் எல்லாம் மனித உணர்வின் எண்ணம் இன்பம் கண்டு
9.இவற்றின் தொடரில் கிடைக்கப் பெறும் அமைதிக்காக
10.பொருள் சேர்க்கையின் வரவு நிலையிலும் இன்பம் உள்ளது என்ற தொடர் வாழ்க்கையில் “இன்பம்” அடைகிறான் மனிதன்

ஆனால் அதே சமயத்தில்…
1.உடல் உபாதையில் ஏற்படும் எதிர்ப்பு நிலையில் அவதிக்கும்
2.குடும்ப வாழ்க்கையில் உண்டாகும் மற்றவரின் எதிர்நிலையின் சோர்வுக்கும்
3.இன்ப நிலை என்று உணரும் தன்மையில் எதிர்ப்படும் மோதல் நிலை எதுவாகிலும்
4.”துன்ப வாழ்க்கை” என்ற சோர்வில் எண்ணத்தைச் சோர்வுப்பட்டு
5.முந்தைய நிலையைச் சுட்டிக் காட்டி இன்ப நிலைக்காக எதிர்படும் எவையுமே துன்பம் என்ற அச்ச உணர்வினால்
6.வாழ்க்கையில் ஏற்படும் எதிர்நிலை சோர்வைக் கொண்டு
7.எண்ணத்தின் உணர்வில் (முதலில்) ஏற்றிக் கொண்ட இன்பத்தைத்தான்
8.“மனித வாழ்க்கையின் இன்பமே அடங்கி உள்ளது…!” என்று மனித ஓட்டக் காலங்கள் ஓடுகின்றன இன்று.

ஆத்ம நிலையின் தொடர்பையும் அதில் உள்ள உன்னத நிலையையும் ஞானிகள் உணர்த்தினால்
1.வாழ்ந்த வாழ்க்கையில் சலிப்புற்ற நிலையில்… கடைசியாகத்தான்…
2.வாழ்க்கையிலிருந்து அடையக் கூடிய தெய்வீக பக்தி மார்க்கத்திற்காக
3.ஆத்ம ஞான போதனையைச் செலுத்த வேண்டும் என்ற உணர்வுடன் உள்ளார்கள் இன்றைய மனிதர்கள்.

ஏனென்றால் மனித சக்தியினால் இன்று முன்னேறிய தொழில்நுட்ப வைத்திய முன்னேற்ற செயலின் விஞ்ஞான வளர்ச்சியைக் காட்டிலும்
1.வளரும் இவ்வாத்ம ஞானத்தைக் கொண்டு
2.ஆத்ம ஞானத்தின் ஆற்றலைக் கொண்டு
3.பல உன்னத உணர்வு ஞானத்தையே உருவாக்கலாம்.