மின்னல்கள்
கடலில் தாக்கப்படும்போது மணலாகின்றது. கடல் ஓரங்களில் அது மறைந்து விடுகின்றது. அந்த
மணலுக்குள் இருப்பதைத்தான் யுரேனியமாகப் பிரித்து எடுக்கின்றான் விஞ்ஞானி.
அதிலே பல பல
நட்சத்திரங்கள் எதிர் நிலை கொண்டு கலந்திருப்பதை... அது எதிர்மறையாக எப்படி வெடித்ததோ
(மின்னலாக) அதைப் போல எதிர் மறை கொண்ட உணர்வின் தன்மையைச் சேர்த்து... அதைத் தனித்துப்
பிரித்து.. மீண்டும் எதிர்மறையாக மாற்றப்படும்போது வெடிக்கும் தன்மைக்கு (அணுக் கதிரியக்கம்)
வைக்கின்றான்.
அது வெடித்தால்...
எந்த மின்னலின் தன்மை அந்த நட்சத்திரங்கள் உணர்வுகள் கொண்டு ஊடுருவி...
1.அது இரண்டும்
மோதும்போது இரும்பானாலும் உலோகமானாலும் அதைக் கருக்கிவிட்டு
2.தன் இனத்தின்
தன்மையைப் பிரித்து விடுகின்றது.
இப்படி அதனுடைய
வீரிய உணர்வுகள் அணு குண்டை வெடித்தால் நம் உடலில் இருக்கக்கூடிய அதே நட்சத்திரத்தின்
உணர்வைத் தாக்கித் தன் இனத்தைப் பெருக்கி “இந்த உடலையே அழித்துவிடும்...!”
இப்படி வெடிக்கப்பட்ட
கதிரியக்கங்களின் தன்மை அதிகரித்து சூரியன் பக்கம் போகும்போது... அதனின் எதிர்மறையான
நிலைகள்
1.எலக்ட்ரிக்கை
உருவாக்கிக் கொண்டிருக்கும் சூரியனின் இயக்கத்திற்குள் செல்லும்போது
2.எதிர்மறையான
நிலைகள் அங்கே அதிகரிக்கும்
3.அப்பொழுது
இரு மடங்கான கரண்ட் உற்பத்தியாகும்.
உதாரணமாக இரண்டு
கரண்ட் வயர் ஒன்றுடன் ஒன்று மோதினால் என்ன ஆகும்...?
அதாவது சூரியனின்
காந்தப்புலன் 27 நட்சத்திரங்களின் உணர்வைக் கவர்ந்து அது ஒன்றோடு ஒன்று மோதும் போது
எப்படிச் செயல்படுகின்றதோ இதைப் போலத்தான்
1.இந்த உணர்வின்
தன்மை பாய்ச்சப்படும்போது (அணுக் கதிரியக்கங்களை)
2.அதன் அலைவரிசையில்
மோதப்படும்போது இங்கிருக்கும் பொருளைக் கருக்கிவிட்டு
3.செயலற்ற நிலைகளாக்கி
மற்ற எல்லாவற்றையும் கவர்ந்து கொள்கின்றது.
இந்த உணர்வின்
தன்மை கூடி ஆவி மண்டலங்களாக மாறும்போது இதனைச் சூரியன் எடுத்துச் செல்லுகின்றது. போகும்
பாதையில் பல கோள்கள் எடுக்கின்றது.
அதிலிருந்து
வடித்து மீண்டும் சூரியனுக்கு வரப்படும்போது இதே தீமையின் விளைவுகள் வரப் போகின்றது.
இரண்டு வயர் மோதினால் எப்படி எர்த் (EARTH) ஆகின்றதோ அதைப்போல
1.அந்த அதிர்வின்
தன்மை ஆனபின் நம் உயிரின் துடிப்பு அதிகரித்துவிடும்
2.அந்தத் துடிப்புக்கு ஈடுகட்டும் நிலை நம் உடல் அணுக்களுக்கு
இல்லை
3.அந்த உணர்வுகள்
எல்லாம் செயலிழந்து விடும். (FUSE)
ஒரு பல்பிற்குள்
மின்சாரம் அதிகமாகி விட்டால் அது எப்படி அதனுடைய இயக்கங்களை ஒளி காட்டுவதை இழந்துவிடுகின்றதோ
(FUSE) அதைப்போல மனித அறிவின் தன்மையை இழக்கச்
செய்துவிடுகின்றது.
இதைப்போன்ற
நிலைகளில் இருந்து நாம் மீள்வது எவ்வாறு...?
இன்று விஞ்ஞான
அறிவால் அஞ்ஞான வாழ்க்கை வாழ்ந்து கொண்டுள்ள நிலையில்... எத்தனை கடவுளை வணங்கினாலும்...
எத்தனை பக்தி கொண்டிருந்தாலும்... என்ன ஆகும்..?
நல்ல ஒழுக்கங்களை
எல்லாம் கடைப்பிடிக்கலாம். இருந்தாலும் இத்தகைய தீமை என்ற நிலைகள் நடந்தால் எல்லாமே
பாழடைகின்றது.
ஆகவே... அந்தத்
தீமை என்ற உணர்வை நமக்குள் வளராது தடுக்க வேண்டுமென்றால்
1.துருவ நட்சத்திரத்தின்
உணர்வை எடுத்தே ஆக வேண்டும்
2.அதை எடுத்தால்
நீங்கள் உங்களைக் காக்கலாம்...பிறவியில்லா நிலை அடையலாம்.
3.உங்களை நம்பிப்
பழக வேண்டும்.
இந்தச் சாமியார்
செய்வார்... அந்தச் சாமியார் செய்வார்... அந்தக் கடவுள் செய்வார்... இந்தக் கடவுள்
செய்வார்...! என்ற நிலையை விடுத்துவிடுங்கள்
உங்கள் உயிரே
ஈசனாக இருக்கின்றான்... ஆண்டவனாக இருக்கின்றான்... கர்த்தராக இருக்கின்றான்.... கடவுளாக
இருக்கின்றான்...! ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயரை வைத்துதான் இந்த உயிரை அழைக்கின்றனர்.
அந்த உயிர்
இயக்கும் தன்மை வரப்படும்போதுதான் பல வண்ணங்களில் பல நிலைகளில் பேசி அதைக் கடவுள் என்று
சொல்கின்றனர்.
நாம் நுகரும்
உணர்வுகள் நம் உடலுக்குள் சென்று அதாவது
1.உள் நின்று
இயக்குவதைக் கடவுள் என்றும்
2.அந்த உணர்வின்
தன்மை மீண்டும் இயக்கித் தன் இனத்தை உருவாக்கும் பொழுது ஈசன் என்றும்
3.அது இயக்கும்
தன்மை மீண்டும் உருவாக்கும் போது பிரம்மன் என்றும்
4.அந்த உணர்வின்
தன்மை உடலாக்கும்போது சிவன் என்றும்
5.இப்படித்
தெளிவான நிலைகளை நம் சாஸ்திரங்களில் காட்டப்பட்டுள்ளது.
நம் உடலுக்குள்
இயக்கும் நிலையே கடவுள். உள் நின்று இயக்கும் உணர்வுகள் எதுவோ அதன் வழி தான் செயல்படுகின்றது
என்ற உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்.
எந்த நேரமும்
அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் சக்திகளை நீங்கள் பெற முடியும். அதைப் பெற்று
“உயிரின் துடிப்பைச் சீராக்க முடியும்...!”