இன்று எலெக்ட்ரானிக்
கடிகாரத்தின் மூலம் மணிகளைக் காட்டுகின்றார்கள். “அதில் உள்ள எலக்ட்ரானிக்” அதன் குறித்த
நிலைகள் வரப்படும்போது அது வந்தவுடனே மணிகளையும் தேதிகளையும் மாற்றி மாற்றிக் காட்டுகின்றது.
1.ஆனால் அதில்
சிறிது நீர் பட்டுவிட்டால் எல்லாம் மறைந்து விடுகின்றது.
2.எதிர்மறையான
உணர்வுகளை அங்கே பதியச் செய்யும்போது அது தாறுமாறாக வேலை செய்துவிடும்.
3.அதில் உள்ள
பேட்டரி சார்ஜ் கம்மியாகி விட்டாலோ தப்பான கணக்கைக் கொடுக்கின்றது.
இதைப் போலத்தான்
நம் உயிரின் இயக்கமும்…!
நாம் எண்ணும்
சோர்வு சங்கடம் வேதனை போன்ற எண்ண அலைகள் அதிகமாகச் சேர்த்த பின்…
1.நமது உயிர்
அந்த உணர்வின் தன்மைகளை இயக்கப்படும்போது
2.இயக்கத்தின்
துடிப்பு கம்மியாகின்றது.
அப்படிக் கம்மியாகும்போது
உடலின் சுருக்க… அந்த உணர்வுகள் குறையத் தொடங்கி விடுகின்றது. அந்த நேரத்தில் சீரான
நிலைகளிலே கணக்கைப் பார்க்க முடியாது. நம்முடைய சொல்லும் சீராகச் சொல்ல முடியாது.
ஏனென்றால் நமது
உயிர் “எலெக்ட்ரிக்காக” இருந்து… நுகரும் உணர்வுகளை “எலக்ட்ரானிக்காக (உணர்ச்சிகளாக)”
அது உற்பத்தி செய்து கொண்டே இருக்கும்.
1.அதில் எந்த
உணர்வின் தன்மை அதிகரிக்கின்றதோ
2.அந்த உணர்வின்
தன்மையைத் தனக்குள் மாற்றி மாற்றிக் கொடுத்துக் கொண்டே இருக்கும்.
3.அந்த உணர்வுகளில்
மாற்றங்கள் எதுவோ கண் விழி கொண்டு கலர்கள் மாறும்.
4.வெளி வரும்
சொற்கள் கொண்டு உணர்ச்சிகள் மாறும்.
5.அந்த உணர்வின்
சத்து கொண்டு உடலில் நிறங்கள் மாறும்.
இந்தத் தியான
வழியில் சீராக இருந்தால் நீங்கள் ஒருத்தரைப் பார்த்தவுடனே ஜோசியம் சொல்லி விடலாம்.
ஆனால் இதைத் தெரிந்து நீங்கள் ஜோசியம் சொல்லத் தொடங்கி விடாதீர்கள்.
ஏனென்றால் இதை
“அங்கக்கலை…!” என்று சொல்வார்கள். பார்த்து ஒரு சொல்லைச் சொல்லிவிட்டால் எலலா உண்மைகளும்
வெளியில் வரும்.
உங்களிடம் நான்
(ஞானகுரு) சில நேரம் கேள்விகளையும் கேட்பேன். அப்பொழுது பதிலாக உங்களிடம் இருந்து என்னென்ன
வருகின்றது…? என்றும் பார்ப்பேன்.
அதைத் தெரிந்து
கொண்ட பின் உங்களுக்கு என்ன நல்ல மாற்றங்களைக் கொடுப்பது…? என்ற நிலையில் சிலதுகளை
இணைத்துக் கொடுப்பேன்.
அதாவது உங்கள்
சொல்லுக்குள் வேறு ஏதாவது நாம் மாற்றிச் சொல்லும் பொழுது… இந்த உணர்வு வந்தவுடன் உங்களுக்குள்
இருப்பதை எல்லாம் கக்கிக் கொண்டே இருப்பீர்கள்.
இந்த அலைகளை
தொடர்ந்தவுடன் எந்த அருள் உணர்வை எதை எதை இணைத்து உங்களுக்குள் கலக்க வேண்டும் என்று
சொல்லி யாம் கொடுக்கின்றோம்..
1.தமாஷாகச்
சொல்வது போல் இருக்கும்…
2.ஆனால் அதற்குள்
ரொம்ப விஷயம் இருக்கும்.
அதாவது உங்களுக்கு
எந்த அறிவைக் கொடுக்க வேண்டும்…? என்ற வகையில் கொடுக்கின்றோம். ஆகையினால் இது “குரு
வழி…!”
பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் படிக்கின்றார்கள் என்றால்
வாத்தியாருக்கு ஒருத்தர் மேல் வெறுப்பாகி விட்டது என்றால் அந்த வெறுப்பின் தன்மையினால்
அவர் பாடத்தைக் கொஞ்சம் அழுத்தமாகச் சொல்லுவார்.
வாத்தியார்
அழுத்தமாகச் சொன்னவுடன் அந்த மாணவனுக்குப் பயத்தின் உணர்வு வந்தது…! என்றால் வாத்தியார்
என்ன சொன்னாலும் இங்கே அவனுக்குள் பதிவாகாது. ஏனென்றால் அந்த உணர்வின் இயக்கத்தின்
நிலைகள்.
1.அதே சமயத்தில்
பார்வையின் நிலைகள் என்னவாகும்…? இருட்டாகும்… கலர் கறுப்பாகும்.
2.எந்த நல்லதையும்
பார்க்க முடியாது.
3.இருள் சூழ்ந்த
நிலையாகும். உடலுக்குள் அது நஞ்சாகும்.
ஏனென்றால் நல்ல
பொருளுக்குள் நஞ்சு கலந்தால் எப்படியோ அது போல் நல்ல சிந்தனை வராது. விஷத்தின் தன்மை
கொண்ட உணர்வாக மாறிவிடும்.
அச்சமயம் பதிவு
செய்த நிலைகள் அது சீராக வராது. சொல்வது அர்த்தமாகின்றதல்லவா…!
இது எல்லாம்
நமக்குள் மோதும் எதிர்மறையான இயக்கங்களால் வரும் போது ஏற்படும் நிலைகள் தான்…!