ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 28, 2020

நாம் உயர்ந்த நிலையில் நினைப்பவர்களை… மற்றவர் குறையாகச் சொன்னால் நம்மால் தாங்க முடிகின்றதா…?


உபதேசம் எல்லாம் கேட்போம்…! கேட்டுக் கொண்டிருக்கும்போது அந்த உயர்ந்த நிலைகளில் நாம் இருக்கின்றோம்…! என்கிற பொழுது என்ன அவர் பெரிய சாமியா…? என்று (ஞானகுருவை) யாராவது சொன்னால் உடனே அந்த உயர்ந்ததை விட்டுவிடுவோம்.

சாமிக்கு என்னய்யா தெரியும்…? என்று சொன்னால் உடனே கோபம் பொத்துக் கொண்டு வந்துவிடும். ஆனால் சமாளிக்கக்கூடிய திறன் வராது.  அவர்களுடைய உணர்வுகள் நம்மை மாற்றிவிடுகிறது.

அப்பொழுது என்ன செய்ய வேண்டும்…?

ஞானிகள் கொடுத்த உணர்வின் வலுக் கொண்டு…
1.அவர் அறியாமை நீங்க வேண்டும் என்று “மௌனம் சாதித்து…”
2.அந்த மகரிஷிகளின் அருள் ஒளி அவர் பெற வேண்டும்.
3.உண்மையை நிச்சயம் அவர் உணர்வார்… உணரும் பருவம் வரும் என்ற
4.இந்த உணர்வை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த உணர்வின் பலனை நீ சிக்கிரம் உணர்வாய்… பாரப்பா…! என்று இந்த உணர்வை அங்கே பதிவு செய்யுங்கள்.

அப்புறம் அப்படி…இப்படி.. என்பார்…! திரும்பித் திரும்பிப் பார்ப்பார்…! இந்த உணர்வுகள் உள்ளே போனவுடனே அவருக்குள் இருக்கக்கூடிய துன்பங்களை நிச்சயம் உணர்த்திக் காட்டும்.

1.நீ புரிந்து கொள்வாய்… புரிந்து கொள்ளக்கூடிய காலம் வரும்
2.நீ நிச்சயம் புரிவாய்… உன்னை நீ அறிவாய்
3.இந்த உலக இருளைப் போக்குவாய்…
4.உண்மை நிலையை நீ அறிவாய் என்று மட்டும் நீங்கள் சொல்லிவிடுங்கள்.

அப்படி இல்லாமல் அவரிடம் கடைசியில் எங்கள் சாமியைப் பற்றி இப்படிச் சொல்கிறாயா…? இரு நான் உன்னைப் பார்க்கின்றேன்…! என்று சொன்னால் அவர் உணர்வு தான் உங்களைப் பார்க்கும்.

இதை எல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். ஏனென்றால் அந்த உணர்வின் சக்தியை நாம் அறிந்திடல் வேண்டும்.

இதே மாதிரி வேறு சில நிலைகளையும் சொல்வார்கள். ஆனால் பற்று இருக்கும். நான்கு பேர் அப்படிச் சொன்னவுடனே அவர்கள் கோபம் குறைகளை எல்லாம் எடுத்துக் கொள்வார்கள்.

கடைசியில் போகும் பாதையை விட்டுவிட்டு என்ன சொல்வார்கள்..?

செ…! எங்கே பார்த்தாலும் அவன் இப்படிப் பேசுகிறான்.. இவன் இந்த மாதிரிப் பேசுகின்றான் என்று அந்தச் சண்டைகளை எல்லாம் கொண்டு வந்து வீட்டிலே விடுவார்கள்…  தொழிலிலேயும் விடுவார்கள்.

அப்புறம் நல்ல சிந்தனை செய்யும் நம் நிலையே மாறி நமக்கு நாமே தண்டனைக் கொடுக்கும் நிலை ஆகிவிடும்.

நம் உடல் உணவாக உட்கொண்ட உணவில் கலந்துள்ள நஞ்சினை மலமாக மாற்றி… நல்ல உணர்வை உடலாக மாற்றுகின்றது ஆறாவது அறிவின் மணம் கொண்டு…!

அத்தகைய தீமைகளை அகற்றிடும் நிலைகள் கொண்ட நாம் கேள்விப்பட்ட தீமையான நஞ்சினை நீக்கி… நல்ல உணர்வினைப் படைத்திடும் ஆற்றலைத் தான் நமக்குள் பெருக்க வேண்டும்.

அப்படிப் படைக்க வேண்டும் என்றால்…
1.அந்த மகரிஷிகளின் உணர்வை நுகர்ந்து உங்களுக்குள் இணைத்திட வேண்டும் என்பதற்குத்தான்
2.பல வட்டங்களை எழுப்பி இங்கே உபதேசிக்கின்றோம்.

உங்கள் உணர்வின் நினைவாற்றலை விண்ணிலே செலுத்தச் செய்து… அந்த மகரிஷிகளின் பால் இணைத்து உங்களுக்குள் அதைப் பெறும் தகுதியை தாவர இனங்களுக்கு உரம் கொடுப்பது போல் ஏற்படுத்துகின்றோம்.

ஆனால் நீங்கள் அதை நினைவு கொள்ள வேண்டும்

1.பிறருடைய குறைகள் எது வந்தாலும் அதை எண்ணத்தால் பதிவு செய்யக் கூடாது.
2.வந்தால்… உடனே அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும் என்ற நினைவினை
3.அங்கே அதிகமாக்கி அந்தச் சித்திர புத்திரன் கணக்கைக் கூட்ட வேண்டும்.