ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 27, 2020

“சப்தரிஷிகளின் நேரடி வலுவில்” நாம் இருந்தால் இன்றைய நச்சுக் காற்று நம்மைப் பாதிக்காது என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


இதுவரை சுட்டிக் காட்டிய எண்ணத்தின் உணர்வை “இறைவனுக்குள் நாம்... நமக்குள் இறைவன்...!” என்ற பகுத்தறிவில் மனிதனின் எண்ண உணர்வை இப்புவி ஈர்ப்பில் கர்ம காரிய வாழ்க்கையிலிருந்தே தன் எண்ணத்தின் ஞானத்தை “உயர் ஞானமாக்கிடல் வேண்டும்...”

இப்புவியில் தோன்றி இப்புவியிலுள்ள உயர் சத்தைத் தனதாக வளர்த்துக் கொண்டவர்கள் தான் சப்தரிஷிகள்.

சூரிய மண்டலத்தின் சமைப்பில் தன் சப்த ஒளியைப் பாய்ச்சி... ஒளி கொண்ட வண்ண அமில உயிர் ஜீவ வித்து இப்பூமியில் மீண்டும் எண்ண உணர்வுடன் கூடிய செயல் தன்மைக்கு வளர்ப்பவர்களும் “அவர்கள் தான்...”

சப்தரிஷிகளின் செயல் தன்மையால் வளரும் நாம்... நம் எண்ணத்தின் உணர்வை விண்ணிலே செலுத்தி... அவர்கள் பால் நினைவைச் செலுத்தி அவ்வொளியின் நேரடி அலையை இஜ்ஜீவ ஆத்மாவில் வளரக்கூடிய உயிர் அணுக்களுக்கு உணவாகக் கொடுக்க வேண்டும்.

1.இறைவனுக்குள் நாம்... நமக்குள் இறைவன்...! என்ற நிலையில்
2.உயிர் தெய்வம் எப்படிச் செயல் கொள்கின்றதோ
3.அச்செயலின் தெய்வத்திற்கு... இவ்வுடலில் வளரும் ஒவ்வொரு அணுவையுமே
4.தெய்வமாக்கும் உயர் காந்த ஈர்ப்பில் செயல் கொள்ள வேண்டும்.

சூரியனிலிருந்து உதித்த நம் உயிர்... அவ்வுயிரின் உயிரணுக்களெல்லாம் உயிர் தெய்வ அணுக்களால் வளரும் காந்த ஜீவ வீரியத்தை... சப்தரிஷிகளால் பாதுகாத்து பக்குவப்படுத்தப்பட்ட சமைப்பின் தொடரை... நம் உணர்வின் எண்ணத்தை சப்தரிஷிகளின் எண்ணமுடன் கலந்து செயல்படும் பொழுது...
1.நாம் வேறல்ல...
2.அந்த ரிஷிகள் வேறல்ல...! என்ற நிலையை எய்துகின்றோம்.

அப்படிப்பட்ட ரிஷிகளின் தொடர்புடன் இஜ்ஜீவ ஆத்மா வலுப்பெறக் கூடிய வளர்ச்சியினால்... தினசரி வாழ்க்கையில் ஏற்படுகின்ற செயலில் எல்லாம்... தான் பெற்ற உயர் ஞானத்தால்... சமமான உணர்வு சமைப்பு கொண்ட நிலையில் செயல்படும் பொழுது... எத்தகைய தீய உணர்வுகளும் நம் சரீரத்தைப் பாதிக்காது.

இவ்வாறு நம் ஆத்மாவின் அலை வீரிய உணர்வு பெறும் பொழுது
1.இக்காற்றலையில் பலவாகக் கலந்துள்ள பல நிலை கொண்ட அமிலக் கூறுகளும்
2.பல உணர்வில் ஜீவன் பிரிந்த ஆவி ஆத்மாக்களின் அலையும்
3.இப்புவி ஈர்ப்பில் சுழன்று கொண்டுள்ள இன்றைய நச்சான காற்று மண்டல அலையும்
4.சப்தரிஷிகளின் நேரடி வலுவில் ஜெபம் கொள்ளும்போது
5.எந்த அலையும் நம் நிலையைப் பாதிக்காது.

மனித வாழ்க்கையில் இருந்தே...
1.புருவ மத்தியில் எடுக்கும் ஓ...ம் ஈஸ்வரா...! என்ற ஒளி நாதத்தின் சமைப்பால்
2.இச்சரீர வாழ்க்கையில் எந்நிலையயும் உணரும் பக்குவத்தையும்
3.முன் கூட்டி அறியும் செயலையும்
4.வாழ்க்கையில் நடக்கக்கூடிய ஒவ்வொரு நடைமுறை நிலைகளுக்கும் தெளிவு காணும் பக்குவத்தையும்
5.முதலில் நாம் பெற வேண்டியது அவசியமாகும்...!

பல கோடி வருடங்களாய்... உயிர் பெற்று உருவாகி உருவாகி... உயர் தன்மை பெற்ற இம்மனித எண்ண உணர்வு சரீரத்தில்... ஒவ்வொரு உயிரும் ஒன்றைப் போன்று ஒன்றில்லாமல்... தான் வளர்ந்த வீரிய உணர்வின் அடுத்த நிலைக்குத் தனக்குள் உள்ள இறைவனை... தனக்குள் வளரும் இறை அணுக்களை... “இறைவனுக்கும் வீரியத் தன்மையாக...!” மகரிஷிகளின் அருள் ஒளியிலிருந்து எடுக்கும் ஜெபத்தால்... நிச்சயம் செயல் கொள்ள முடியும்.