எத்தனையோ கோடி
உணார்வுகள் சேர்த்துத் தான் ஒரு நாதமாகின்றது. ஆகவே அணுவின் தன்மை பல கோடி ஆனாலும்
இந்த உணர்வின் தன்மைகள் இணைத்து இணைத்து பல கோடி ஆகின்றது கோடி…கோடி… என்று…
இந்தக் “கோடி”
என்ற நிலைகள் வரப்படும் பொழுதுதான்
1.ஒரு சொல்
எவ்வாறு வருகின்றது…?
2.அதனுடைய மணம்
எவ்வாறு வருகின்றது…?
3.அதனுடைய குணம்
எவ்வாறு இயக்குகின்றது…?
இதைத் தெரிந்து
கொள்ள வேண்டும்.
இப்பொழுது ஒரு
செடியை எடுத்துக் கொண்டால்
1.அதனுடைய “மணம்”
வேறு.
2.அதை நாம்
சுவையாகச் சுவைக்கப்படும்போது “குணம்” வேறு.
3.அதுவே நம்முடைய
எண்ணத்துடன் சேர்த்து “உணர்வாக” இயக்கும் நிலைகள் வேறு.
4.அதுவே உடலாக
இயக்கி உணர்வாக வரும்போது “அமுங்கும்” நிலை வேறு.
5.ஒரு காரத்தின்
உணர்வை எடுத்துக் கொண்டால் நமக்குள் “கோபமே” அதிகமாகச் சேரும்
6.அதே சமயத்தில்
நம்மைப் பார்ப்போருக்கும் உடலில் “எரிச்சல்” வரும்.
இதைப் போல பல
கோடி உணர்வின் தன்மை தனக்குள் வரும்போது ஒருத்தரைப் பார்த்தவுடனே வெறுப்பு வருகின்றது.
அவருடைய மணத்தை நாம் சுவாசிக்கும்போது
1.அந்த உணர்வுகள்
நம்மை அறியச் செய்கின்றது
2.இந்த உணர்வின்
சத்து சொல்லாக வெளிப்படுகின்றது
3.”அயோக்கியன்”
என்று. அந்த உணர்வின் சொல்லாக நாதங்களாக மாறும்.
அதாவது…
1.நாம் நுகர்ந்து
பார்க்கும்போது “மணமாகின்றது…”
2.உயிரோடு ஒன்றி
இயக்கப்படும்போது “உணர்வாகின்றது..”..
3.இது சொல்லுடன்
இணைத்து வரப்படும்பொழுது சுருதி மாறுகின்றது.
இரண்டு பையன்கள்
இருக்கின்றார்கள் என்றால் அதிலே இனிமையானவனைப் பார்க்கப்படும்பொழுது வாடாக் கண்ணு…!
என்ற சொல் வருகிறது.
இன்னொருத்தன்
மோசமான நிலைகளைப் பேசப்படும்போது அவனைப் பார்க்கும்போது ஒரு மாதிரியாக இருக்கும் அவனைப்
பார்க்கும்பொழுது என்ன… என்னப்ப்பா…?! என்போம்.
ஏனென்றால் அந்த
உணர்வுகள் எதுவோ அதற்குத் தகுந்த “சுருதி” இங்கே வரும். நம்முடன் இணையும் சுருதிகள்
எதுவோ அதற்குதகுந்த “நிறங்கள்” வரும். நிறங்கள் எதுவோ அதற்குதகுந்த “மணங்கள்” வரும்.
மணங்கள் எதுவோ அதற்கு தகுந்த “எண்ணங்கள்” வரும்.
சொல்வது உங்களுக்கு
அர்த்தமாகின்றதல்லவா…?
கோபமாக அடிக்கடி
பேசிப் பாருங்கள்…
1.அந்தக் கோபம்
வருவோருக்கு அவர்கள் உடல் முதலில் “சிவப்பாக” இருக்கும்.
2.கொஞ்சம் கொஞ்சம்
கொஞ்சமாகக் கோபம் கூடிக் கொண்டே வந்தது என்றால் உடல் “கருத்துவிடும்…”
அப்பொழுது அந்த
மணமும் அந்தச் சுவையும் மாறும். எடுத்துக் கொண்ட உணர்வு அதிகமாகக் கோபித்து வரும்போது
நிறம் மாறிக் கொண்டே வரும்.
அதைப் போல ஒரு
கோபித்தவரை வேகமாகப் பார்க்கின்றீர்கள். அந்தக் கார உணர்வுகள் பட்டவுடன் கண் சிவந்து
போகின்றது…. உடலில் நடுக்கமாகின்றது. அந்த உணர்வின் இயக்கம் அதுவாகின்றது.
அந்த மணத்தின்
தன்மை… உமிழ் நீர் நாக்கில் சுவை மாறுகின்றது. கோவித்துவிட்டுப் போய் நல்ல சுவையான
சாப்பாடைச் சாப்பிட்டோம் என்றால் இந்த கோபத்தின் உணர்வுகள் வரும். நல்ல சுவையை அறிய
முடிவதில்லை.
கோபத்தால் நினைவுகள்
வரும்பொழுது நல்லதை நாம் அறிய முடியாது… உணர்வால். ஏனென்றால் நாம் மணத்தால் நுகர்ந்த
உணர்வுகள் நமக்குள் எப்படி இயக்குகின்றது என்ற நிலையை தெரிந்து கொள்ள வேண்டும்.
மகிழ்ச்சியாகப்
பேசும்போது பார்த்தால்… முகத்தில் “பளிச்…” என்று நிறம் மாறும். நான் (ஞானகுரு) பேசும்
பொழுதே நீங்கள் பார்த்திருக்கலாம்…!
1.ஒவ்வொரு ஞானியின்
உணர்வின் தன்மை எடுக்கப்படும் பொழுதும் முகத்தில் மலர்ச்சி ஏற்பட்டுக் கொண்டே வரும்.
2.அந்தந்தக்
குணத்திற்குத் தகுந்த மாதிரி இந்தச் சுருதிகள் மாற மாற சொல்லிலும் மாறிக் கொண்டே வரும்.
3.அதே சமயத்தில்
கண்ணில் பார்க்கும்போது ஒளி வேறு விதமாக தெரியும்.
4.தொடர்ந்து
நான் சொல்லிக் கொண்டு வரப்படும் பொழுது “ஒலிகளே” வித்தியாசமாகத் தெரியும்.
அப்பொழுது அந்த
அருள் ஞானிகளின் உணர்வு “ஒளிகளாகப் படரப்படும் பொழுது” நீங்கள் உற்றுப் பார்த்தால்
இந்த உணர்வே உங்களுக்கு அறிவின் ஞானமாகக் கொடுக்கும்.
இதை எல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து
கொள்ள வேண்டும் என்பதற்கே சொல்கிறேன்.