ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 6, 2020

ஒவ்வொருவரும் “நீலவண்ணக் கண்ணனாக…” ஆக வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


1.எப்படி ஒன்றை ஒத்த முறையில் ஒன்றில்லாமல்
2.ஒவ்வொன்றுமே “வளர் சக்தியில் வளர்கின்றதோ”
3.அதைப் போன்று இவ்வுடல் ஆத்மாவின் வளர் நிலையும் அப்படித்தான்…!

இந்த ஜீவ சரீரக் கலவையில் இப்பூமி எடுக்கும் சத்து அனைத்தும் உள்ளத்தினால் இச்சரீர பிம்பச் செயலில் கூட்டும் ஞானச் செயலுக்கும் “அந்தந்தக் கலவைக்குகந்த ஒளி பெறலாம்…”

சூரியன் சமைத்த வண்ணம் “ஆறு…” சமைப்பின் சக்தி ஒளியாய் “ஏழாம்...” அதாவது ஒளி பெறும் அந்தப் பூமியின் “வெளிச்சம்” என்பது
1.சூரியனின் சமைப்பு அமில வண்ணம் மோதியவுடன் தான்
2.பூமிக்கு வெளிச்சமே ஏற்படுகின்றது

ஆக… ஏழாம் நிலையாகச் சூரிய சமைப்பின் கலவையைப் பூமி பெறும் ஒளியில் பிரகாச நிலை கொண்டு… அந்தந்த இடங்களுக்கு ஏற்படும் வண்ணக் கலவையின் விகிதாச்சார படிவத்திற்கொப்ப… பூமியின் நில வள உலோக வளர்ச்சி ஏற்பட்டு… அத்தொடரின் வளர் சக்தி வலுக்கொள்கின்றது.

நாம் சாதாரண அடுப்பை எரிக்கும் பொழுது அதனின் வண்ணம் மஞ்சளாகவோ சிவப்பாகவோ பச்சையாகவோ வெண்மையாகவோ எரிகின்றது.

மேலே சொன்ன நிறங்களில் நெருப்பின் ஜுவாலை எரிந்தாலும் அந்த உஷ்ண நிலை அதனுடைய பக்குவ நிலைக்கு ஏற்படாமல்… வைக்கப்படும் பாத்திரத்தில் “கரி” மண்டுகின்றது… ஒரு பக்கமாக எரிகின்றது… அதனால் “தணல் கக்கும் உஷ்ண நிலை” சீராக அமைவதில்லை.

ஆனால் எரிவாயுவின் பக்குவ எரி ஒளி நிலை “நீலமாக…!” எரியும் பொழுதுதான் அதனுடைய “உஷ்ணம்” பக்குவ நிலை கொள்கின்றது. அதைப் போன்று இவ்வொளி வண்ணங்கள் ஆறு நிலை கொண்டதாகச் சூரிய சமைப்பு வெளிப்படுத்துகின்றது.

ஆகவே…
1.ஜோதி நிலையான நீல வண்ணத்தின் ஒளி சமைப்பு நம் ஆத்மாவாக வேண்டும்.
2.காலை சூரிய ஒளியும் மாலை ஒளியும் நீல நிறமாக நம் கண்ணிற்குத் தெரிகின்றது.
3.நம் அருகில் உள்ள நீர் வெண்மை கொண்டதாகத் தெரிந்தாலும்
4.கடல் நீரோ… இப்பூமியின் சமைப்பு அலையின் நிறமாக… நீல வண்ணமுடன் நமக்குத் தெரிகின்றது.

ஆகாயத்தைக் காணும் பொழுது கருமையும்… வெண் புகை நிலையும்… மஞ்சளான ஒளித் திட்டுக்களும் தெரிந்தாலும்… ஆகாயத்தை ஊன்றிப் பார்க்கும் பொழுது “நீல மேகமாகத்தான்” தெரிகின்றது.

அத்தகைய “நீல வண்ண ஒளியை” நம் ஜீவ ஆத்ம ஒளி ஒளி பெற… இச்சரீர கோளத்தில் உள்ள வண்ணங்களை நீல சக்தியாக ஒளி கொள்ள… இங்கே உபதேசித்து வரும் வழி முறையை ஒவ்வொருவரும் செயல் கொண்டிடுங்கள்.

கீதா உபதேசத்தில் கண்ணணைக் காட்டி…
1.கண்ணணின் வாயைத் திறந்தால் உலகமே தெரிந்தது என்றும்
2.கண்ணனின் விளையாட்டுத் தரத்தை உலகமாய கர்ம காரியத்தில் இவ்வாத்மா விளையாடிச் சத்து பெறும் வழியையும்
3.”நீலவண்ணக் கண்ணன்” என்று நாமமிட்டனர் அன்றிய ஞானிகள்.

நம் உருவத்திற்கே “நீல நிற ஒளி…!” பெற வேண்டும் என்றும்… கீதையில் பல உன்னத உயர்ந்த சக்தி நிலை பெற
1.ஒவ்வொரு சரீரத்தையும் மாயக் கண்ணனாக்கி
2.அச்சரீரத்தில் வளர்க்கும் நீல வண்ண ஒளித்தன்மை பெற
2.பல வழி சூட்சுமங்கள் அந்தக் கீதையில் உண்டு.

இக்கலியில் செயற்கை விஞ்ஞான வார்ப்பு உடலாக இச் சரீர வார்ப்பு செயல் கொள்ளும் செயல் முறையை… உணர்வின் எண்ணத்தைச் செயல்படுத்தும் ஞானத்தால் “ஜோதி நிலை பெற்று” வளர் தொடர் வளர்ப்பில் நம் வளர்ப்பு செல்லும்.

இங்கே காட்டப்படும் வழித் தொடரில் ஒவ்வொருவரின் ஞானத்தையும் கூட்டி… எண்ணத்தின் செயலை “ரிஷித் தொடர்புடன் தொடர்பு படுத்தியே” ஆத்ம சொத்தாக வழி பெறும் “ஒளி நிலைக்கு” உயர முடியும்..

1.கர்ம காரிய சரீர ஜீவ பிம்பத்திலிருந்து “ஆத்ம உயர்வுக்கு”
2.ஒவ்வொருவரும் தன் ஞானத்தால் உயர் ஞானம் பெற்று
3.சித்து நிலை கொண்டு ரிஷித் தொடர்புடன் “ரிஷியாகலாம்…!”

உணர்வின் எண்ணப் பகுத்தறியும் செயல் வலுவை மனிதன் விரயப்படுத்தாமல் “தன் ஞானம் கொண்டு… ஆத்ம ஞானத்தால் ஒளி ஞானம்..” பெற வேண்டும்.

ஒளி ஞானத்தின் நிலை பெற்றால்… ஒளியின் வழி செயல் “என்றுமே வளர்ச்சி கொள்ளும்…!”