ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 2, 2020

வணக்கத்திற்குரிய நம் குருவைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

எப்பொருளைச் செய்விக்கவும் அதற்குகந்த சத்து நிலை.. பொருள்.. எல்லாம் தேவைப்படுகின்றது. பலகாரம் பட்சண்ங்கள் செய்யும் பொழுது அந்தந்தப் பொருளைக் கூட்டும் நிலை கொண்டு தான் அதற்குகந்த நாமம் பெறுகின்றது.

அதைப் போன்று தான்
1.“மனிதக் கரு அமிலச் சேர்க்கையில் வளர்ச்சி பெற”
2.இவற்றின் மூல வித்தை இந்தப் பூமி எடுக்க
3.பல வழிகள் ரிஷிகளினால் வளர்க்கப் பெற்று இன்றளவும் வளர்ந்து கொண்டுள்ளன.

அவர்கள் வகுத்த வளர்ப்பில் சூரியனின் ஒளிச் சமைப்பை இந்தப் பூமி எடுக்க... இந்தப் பூமி சமைப்பமில வளர்ப்பாகப் பல வளர வழி காட்டிய வழியில் வந்த நமக்கு...
1.குரு என்பது
2.நம் உயிராத்மாவே தான்.

உயிராத்மாவின் உயர்வை எண்ணத்தால் உணரும் பக்குவத்தைக் கொண்டு இந்த உடலில் உள்ள கோடானு கோடி அணுக்களுக்குச் சேவை செய்து குருவை வணங்கிட வேண்டும். ஆக... வணக்கத்திற்குரிய குரு நம் உயிராத்ம குரு தான்.

அந்தக் குருவிற்கு எண்ணத்தால் நாம் எடுக்கும் உயர்ந்த உணர்வு கொண்டு
1.இந்த உடலின் கோடானு கோடி அணுக்களும் இந்த ஆத்ம உயிரை வணங்கியே...
2.தெய்வமாக்கியே... தெய்வமாகியே...
3.ஆதம உயிரின் தெய்வக் குழந்தைகளாக...
4.உடல் உறுப்பில் வளரும் அணுக்கள் அனைத்தையும் ஒன்று போல
4.குருவின் உயர்வில் ஒவ்வொரு அணுக்களும் ஒவ்வொரு “ஒளி ஜோதிநிலை...” பெறுகின்ற செயல் நிலைக்கு
5.நம் எண்ண உணர்வைச் செலுத்த வேண்டும்.

ஏனென்றால் இந்த எண்ணத்தால் உணர்வைக் கூட்டும் குண நிலைக்கொப்பத்தான் உடலின் அணுத் தன்மையே வளர்கின்றது. நம் உடலை நாமே இம்சித்துத்தான் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

நாம் எடுக்கும் உணர்வின் எண்ண நிலைக்கொப்ப உணவைத்தான் உடல் பெறுகின்றது. எதை நாம் இந்த உடலில் செலுத்துகின்றோமோ அதன் சத்தைத்தான் இந்த உயிராத்மாவும் பெறுகின்றது.

வஞ்சனை கோபம் ஆத்திரம் சலிப்பு சங்கடம் சோர்வு வேதனை ஆகியவற்றில் எதை எடுக்கின்றோமோ அதைக் கொண்டு தான் நம் உயிராத்மாவிற்கு... நாம். நம் குரு தெய்வத்திற்கு... அபிஷேகம் செய்கின்றோம்.

உணர்வின் எண்ணத்தைச் செலுத்தும் வழியிலேயே...
1.ஞானிகள் மகரிஷிகள் காட்டிய வழியில் நடப்பதற்கு ஆசையைக் கூட்டுங்கள்
2.நடக்க வேண்டும்...! என்ற செயலை ஞானம் கொண்டு செய்யுங்கள்.
3.எண்ணும் அந்த எண்ண நிலைக்கொப்ப நன்மையாகவே முடியும்.

ஆனால்... செய்யும் செயலுக்கு அதி பேராசையைக் கூட்டி... ஆர்வத்தின் உந்தலை அதிகமாக்கித் தடைப்படும் சமயத்தில் சஞ்சலமும் சோர்வு கொண்டு...
1.செயலின் வேகத்தைச் சாந்தமில்லா முறையில் செலுத்தினால்
2.அதிலே எதிர்ப்படும் நிலையை இந்த உடல் தாங்குவதில்லை.

சமமான நல் உணர்வு எண்ணத்தை நாம் எடுக்க... செயலின் வேகத்தைச் செலுத்தும் செயலும் நல் வழி பெற... “இவ்வெண்ணத்தைக் கூட்டும் உணர்வைப் பக்குவமாக்குங்கள்...!”

நல்லதே நடக்கும்.