1.27 நட்சத்திரங்களின்
நிலைகளை அகஸ்தியன் நுகர்ந்து... தீமைகளை வென்று..
2.பேரருள் உணர்வை
வளர்த்து... பேரொளியாக மாறி துருவ நட்சத்திரமாக இன்றும் இருக்கின்றான்.
அகஸ்தியன் ஆதியிலே
வானஇயல்... புவிஇயல்... உயிரியல்... அடிப்படையில் அகண்ட் அண்டத்தைக் கண்டாலும் அவன்
உணர்வுகள் வெளிப்படுத்தியதைப் பிற்காலத்தில் வியாசகன் நுகர்ந்தான்.
பல இலட்சம்
ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமானாலும் அவன்
உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வுகள் இந்தச்
சூரியனால் கவரப்பட்டு நம் பூமியில் உள்ளது.
வியாசகன் தான்
மீன் பிடிக்கச் செல்லும் பொழுது அவன் சந்தர்ப்பம் புயலில் சிக்கிக் கடலில் விழுந்து
விடுகின்றான். அப்பொழுது அதிலிருந்து அவன் எப்படியும் மீள வேண்டுமென்ற மனப் போராட்டம்
அதிகமாகின்றது.
அப்பொழுது கடல்
வாழ் மீன் இனம் இவனைத் தன் முதுகில் சுமந்து இவனைக் காப்பாற்றுகின்றது. கடல் வாழ் மீன்
இனம் காப்பாற்றிய பின் அவன் சிந்திக்கின்றான்.
1.நாம் எந்த
மீனைக் கொன்றோமோ...
2.அந்த மீன்
இனமே தன்னைக் காப்பாற்றுகின்றது என்று
3.திரும்பி
பார்க்கும் போது தன் தவறை உணர்கின்றான்
4.அதனின் உயர்ந்த
குணங்களை எண்ணி ஏங்குகின்றான்.
அன்றைய காலங்களில்
பெரும்பாலானோர் எல்லா மக்களும் சூரியனை வணங்கிப் பழகியவர்கள். அந்தச் சூரியனை எண்ணி
ஏங்கி..
1.நான் இப்படித்
தவறு செய்தேன்...
2.ஆனல் அந்த
மீன் இனமே என்னைக் காத்தது...! என்ற ஏக்க உணர்வுடன் மேலே ஏங்குகின்றான்.
கடலின் பகுதியில்
அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தைப் பார்க்கலாம். அதிலிருந்து
வரும் உணர்வுகளைச் சூரியன் கவர்ந்து விடுகின்றது.
அப்போது இவன்
மேல் நோக்கி ஏங்கி எண்ணும்போது துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வைத் தனக்குள்
நுகர நேருகின்றது. அப்படி அவன் நுகரும்போதுதான்
1.அகஸ்தியன்
தன் வாழ் நாளில் அகண்ட அண்டம் இந்தப் பிண்டத்திற்குள் எவ்வாறு இருக்கின்றது என்று
2.அவன் உணர்ந்து
வெளியிட்ட உணர்வுகளை எல்லாம் வியாசகன் நுகர்கின்றான்.
வான வீதியில்
இருந்து வந்து உருவான உயிர் முதலில் கடலில் தான் விழுகின்றது. வான வீதியிலிருந்து பல
உணர்வுகள் இங்கு ஆகும் பொழுது சூரியனின் ஒளிக்கற்றைகள் அது சிறுகச் சிறுக விளைந்து
பாஷாணமாக மாறுகின்றது.
அந்த பாஷாணத்தில்
சேர்க்கையாக மற்ற மின்னல்கள் தாக்கப்படும்போது 27 நட்சத்திரங்களில் எதன் எதன் உணர்வு
அதிகமாகின்றதோ அதற்குத்தகுந்த செடியின் கருக்கள் உருவாகின்றது
இவ்வாறு கடல்
வாழ் நிலைகளில் பல விதமான செடி கொடிகள் உருவாகின்றது. அதை உணவாக உட்கொள்ளும் நிலைகள்
பல உயிரினங்கள் உண்டு.
எதை எதை எடுத்து...
எதன் வழியில் உருவானதோ... அதை அதை எடுத்து அதன் நிலைகள் உணவாக உட்கொள்ளும் சக்தி வருகின்றது.
இப்படித்தான் கடல் வாழ் நிலைகள் உருவானது...! என்று முதன் முதலில் கண்டது அகஸ்தியன்.
அவன் கண்ட உண்மையின்
உணர்வை வியாசகன் காண்கின்றான். அவன் செம்படவன் தான்....!
1.இவன் கடலில்
தத்தளித்து வருவதை ஒரு மீன் காக்கப்படும் போதுதான்
2.அந்த அகஸ்தியன்
உணர்வுகள் எல்லாம் இவனுக்குள் வருகின்றது.
3.அப்பொழுது
தான் அவன் “தன் நிலையை” உணர்கின்றான்.... ஞானியாகின்றான்.
அந்தத் துருவ
நட்சத்திரத்திலிருந்து வரக்கூடியதை நாமும் பெற்றால் அவன் வழியிலே நமக்குள் இது பெருகப்
பெருக அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்றடைகின்றோம்.
அகஸ்தியன் எப்படி
நட்சத்திரங்களின் ஒளி அலைகளைப் பெற்றானோ... அதைப் போல நாமும் பெற்று.. நஞ்சினை வென்று..
ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.