ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 26, 2020

நம் சொல்லை…! நயம்பட உரைக்க வேண்டிதன் முக்கியத்துவம்


ஒரு வீணையை ஏழாக வாசிக்கின்றோம். ஒன்றோடு ஒன்று இணையாக வாசிக்கும்போது அது இனிமையாக இருக்கின்றது. அதிலே சுருதியைச் சீராக இயக்கவில்லை என்றால்… அதைக் கேட்டாலே வெறுப்பாகத்தான் வருகின்றது.

இதைப் போலத்தான் சொல்லின் “நயம்” மாறினால் வெறுப்பின் தன்மை ஊட்டுகின்றது.

ஒரு சிலரைப் பாருங்கள்…! பேசும் பொழுது வெறுத்துச் சொல்வார்கள்…! நியாயத்தைச் சொல்வார்கள்.. ஆனால் சும்மா வள…வள… என்று பேசிக் கொண்டிருப்பார்கள்.
1.அதையே திரும்பத் திரும்பச் சொல்வார்கள்
2.சொன்னவுடன் அவர்களைப் பார்த்தவுடனே அடுத்தாற்படி வெறுப்பு வரும்.

அதே சமயத்தில் அவர்கள் உள்ளடக்கி என்ன சொல்வார்கள்….?

தன்னை நியாயவாதியாக நல்லவர்களாகக் காட்ட எண்ணுவார்கள்… உள்ளுக்குள்ளே எல்லாம் வெறுப்பாக இருக்கும்…. சொல்களில் நயம் மாறும்...!

சொல்வது அரத்தமாகின்றதல்லவா…?

இது அப்படி இருக்கின்றது… அது இப்படி இருக்கின்றது… என்று சொல்லிக் கொண்டே போவார்கள். அப்படிப்பட்ட உணர்வு பட்டவுடனே அந்த நயம் மாறும்.
1.அவர்களிடம் அந்த உணர்வின் குணம் மாறும்
2.முகத்திலே…. கண்ணிலே எல்லாம் மாறும்… சொல்லிலும் பார்க்கலாம்...
3.நம்மை ஏமாற்றுகின்றார்கள் என்று தெரிந்துவிடும்.

உள்ளடக்கி எத்தனையோ தீங்கு செய்கின்றார்கள். மற்றவர்களை எல்லாம் தீங்காகச் சொல்லிக் கொண்டு இருப்பார்கள். தன்னை நல்லவர்களாகச் சொல்வார்கள்.

இதைக் கேட்டாலே நமக்கு வெறுப்பு வரும்…!

திரும்பத் திரும்ப இடைஞ்சல் பண்ண வேண்டுமென்று அவர்கள் சொல்லும் பொழுதெல்லாம்… அந்த உணர்வுக்குத் தக்கவாறு மணம்… அவர்களுடைய முகம்… அவர்களுடைய கண்ணும் மாறும்

கேட்கும்போது டக்கு… டக்கு… டக்கு… என்று நமக்கு உணர்வுகள் ஒவ்வொன்றாக மாறும்.

ஏனென்றால் அவர்களுடைய நினைவலைகளில் எதைக் கலக்கின்றார்களோ… இதனுடன் கலந்து வரப்படும்போது அந்தக் கலர் மாறும் எதிலே கொண்டு போய்விட்டாலும் இந்தச் சுவை வெளிப்படுத்தியே விடும்.

ஏனென்றால் மனிதனுக்கு இந்த உணர்வுகள் தன்மை…!

1.ஆனால் திரும்பத் திரும்ப நல்லவர்களாகச் சொல்லக்கூடிய நிலைகள் வேறு…!
2.அவர்கள் உண்மையிலே நல்லதாகச் சொல்வார்கள்.
3.அந்த நல்லதைத் அதை திரும்பத் திரும்பச் சொல்லும்போது பார்த்தால்
4.நமக்குள் அந்த மகிழ்ச்சியின் தன்மையே ஊட்டிக் கொண்டு இருக்கும்.

முந்தி எல்லாம் ஒரு மனிதனைப் பார்த்தவுடனே கோபமாக இருக்கும்போது எந்தக் கலரில் வருகின்றது…? வேதனைப்படும்போது அந்த உடலில் இருந்து உற்பத்தியாகும் கலர்கள் எப்படி மாறுகிறது என்று காண்பிப்பேன்.

அதுவெல்லாம் இந்த கண்ணிலே எப்படி வருகின்றது…? இந்த அலைகள் எப்படி உற்பத்தியாகின்றது…..? நாம் சுவாசிக்கும்போது இந்த உணர்வுகள் பட்டபின்…
1.நல்லதை எல்லாம் விலக்கி விட்டுவிடுகின்றது.
2.இந்த உணர்வுகள் அது சராமாரியாகப் போகின்றது…
3.உள்ளுக்குள் சுற்றி வரப்போகும் போது மற்ற எதற்கும் இடம் கொடுக்காது.
4.அப்பொழுது கை கால் எல்லாம் இந்த அலைகள் பாயும்
5.ஆன்மாவிலே இதுதான் பெருகும்…. மற்றதெல்லாம் உள்ளுக்குள் அடங்கிவிடும்.

இத்தகைய நிலை ஆனால் அடிக்கடி வேதனையாகும்…! இதை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே விளக்கமாகச் சொல்கிறேன்.