ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 24, 2020

பரப்பிரம்மம் பிரம்மமாகி… தெய்வமான வழிச் செயல் மீண்டும் மீண்டும் செயல்பட வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


1.பிரம்மத்தின் பிரம்மாவாய்… ஒவ்வொருவரும் தன் எண்ணத்தின் கர்ம காரியத்தில் ஏற்படக்கூடிய மாற்றத்தில்
2.மாற்றம் கொள்ளக்கூடிய செயல் நிலை ஒவ்வொன்றிலுமே
3.இன்னலில் இருந்து தன் ஞானத்தைக் கூட்டி உயர் ஞானமாக்கும் சித்தம் கொண்டால்
4.பரப்பிரம்மத்தில் பிரம்மாவாய்ப் படைப்பில் பிம்பம் பெற்ற நாம்
5.வாழ்க்கை நிலையிலிருந்து செயல் கொள்ளக்கூடிய எண்ணத்தின் உணர்வை
6.தடைப்படக்கூடிய கர்ம காரியத்தில் சலிப்பு சோர்வு என்ற சஞ்சல உணர்வை வளர்க்காமல்
7.தடைபடும் காரியங்கள் ஒவ்வொன்றையுமே உயர் ஞானத்தைக் கூட்டி மாற்றியமைத்து
8.வளரும் தொடருக்கு வாழ்க்கையின் நிறைவை வளர்த்து
9.எண்ணத்தின் உணர்வைச் சமமான குண நிலைக்கு
10சாந்தமான ஞானத்தின் வீரத்தை வளர்த்துக் கொண்டோமேயானால்
11.யாம் வழிகாட்டியபடி மேல் நோக்கிய சுவாசத்தால் எடுக்கவல்ல காந்த மின் நுண் அலைகள் மூலம்
12.இச்சரீரம் முழுமைக்குமே வலுக்கொள்ள வழி அமையும்.

எப்போது ஆறு வண்ணங்களின் முலாம் கொண்ட இஜ்ஜீவ ஜடபிம்ப பிரம்ம உடல் பெற்றோமோ... அப்போதே அதற்கடுத்த வான்மீகியாரால் சுட்டிக் காட்டப்பட்ட ஒளிப் பிம்பமான… நீர் மூர்த்தி உருவங்களைத் தெய்வ குணாம்ச வித்தகராய்ப் படைத்த… காவிய ரூபத்திற்கொத்த கருத்தின் ரூபமாய் இராமனைப் போன்றும் கிருஷ்ணரைப் போன்றும்
1.இச்சரீரத்தின் ஆத்ம ஒளியைச் விண்ணிலிருந்து எடுக்கும் உயர் காந்தமின் அணு வளர்ப்பினால்
2.நீல வண்ண ஒளி சரீரமாய் இச்சரீர ஆத்மாவையே ஒளிப் பிழம்பாக ஆக்கி
3.இச்சரீரத்தில் இருந்து கொண்டே அந்த (நம்) ஆத்மாவின் ஒளியை நாம் காண முடியும்.

அப்படிப்பட்ட ஒளியால் ஒளிரக் கூடிய வலுப்பெறும் சித்துத் தன்மையினால் எதனையும் ஊடுருவும் செயல் தன்மை இம்மனித சரீர வாழ்க்கை உணர்வு எண்ணத்திலேயே நாம் பெற முடியும்.