இச்சரீரக் கோளம்
ஆணாயும் பெண்ணாயும் சிவசக்தித் தன்மை கொண்டது.
எத்தன்மையின்
செயல் உடல் உருவம் பெறவும்… அதிலே சேர்க்கையின் அமில அணுக்கள் ஜீவன் பெற்று… உருவ உருப்பெறும்
தன்மையில் எதன் நிலை அதிகமாக உருநிலை கொள்கின்றதோ…. அத்தன்மையின் உருவக ஜெனிப்பு ஆணாகவும்…
பெண்ணாகவும்… உரு நிலை கொள்கின்றது.
ஆண் இன அமிலச்
சேர்க்கையும்… பெண் இன அமிலச் சேர்க்கையும்…
1.வார்ப்பகத்தில்
இரண்டு நிலை கொண்ட மோதல் நிலை கூடும் பொழுதுதான்
2.ஜீவ சக்தி
சேர்ந்தவுடன் “உருவ நிலை” ஒன்று உருவாகின்றது.
ஆண் உடலிலும்
பெண் இன அணுக்கள் உண்டு. பெண் இன அணுத் தன்மை இல்லா விட்டால் உயிர் ஜீவத் துடிப்பணுக்கள்
உருநிலை பெறாது.
பெண் சரீரத்தில்
ஆணின் அமிலத் தன்மையின் செயல் கொண்டுதான் பெண் உருவ உடலும் சுவாசத்தின் அமில மோதலின்
ஜீவத்தன்மை பெண்ணாகி… செயல்நிலை கொள்ளும் சிவ சக்தியாய் ஒவ்வொரு உடல் தன்மையும் உருவ
நிலை ஜீவிதம் பெறுகின்றது.
ஆண் பெண் அமிலச்
சேர்க்கையின் ஜீவ சக்தியில் சேர்க்கப்படும் அமிலக் கூட்டின் விகிதத்தன்மையில் கூடப்
பெறும்
1.ஆண் அமில…
பெண் அமிலச் சேர்க்கை… விகிதத்தின் வீரியத் தன்மை கொண்டு
2.கூடும் தன்மையில்
எது அதிகமாக உள்ளதோ அதற்குகந்த உருவ உடல் தன்மை கொள்கின்றது.
ஆணாயும் பெண்ணாயும்
நின்றான் அவன்…! என்று உணர்த்திய உண்மை நிலை தான் இது.
மூலத்தின்…
ஆதி மூல ஆதிசக்தியின் படைப்பு அனைத்தும்… மூலம் சிவனாகி… உருவாகும் உருநிலை சக்தியாகி…
ஜெனிப்புத் தொடர் உருவாகும் திட உருவத் தொடரில்… ஆவியாகி… அமிலமாகி… தொடர் பெறும் தொடரில்
1.ஆண் பெண்
இனச் சேர்க்கை மாற்றச் செயலில்
2.ஆண் பெண்
எல்லாமே ஒன்றுதான்..!.
இரண்டு தன்மையின் அமிலம்… ஈர்ப்பு வளர்ப்பின்
உயிரணு… இவற்றில் ஆண் பெண் சேர்க்கையின் உயிரணு “ஆதி சக்தியின் தெய்வமாகின்றது…” உயிரணு
யாவையுமே படைப்பின் படைப்புத் தெய்வம் தான்.
படைப்பின் படைக்கப் பெற்ற தொடர் நிலை… அது
அது சேர்க்கப்படும் செயல் தன்மை தான் அவரவர்களுக்குச் சொந்தமாகின்றது.
உயிரின உயிரணுத் தன்மையில் ஆண் பெண் இன “வேறுபாடில்லை…”
சேர்க்கப்படும் அமிலக் கூறின் ஆத்ம பிம்பம்
தான் இனத் தன்மையின் (அமிலத் தன்மை) சேர்க்கப்படும் விகித நிலைக்கொப்ப ஆண் பெண் திடச்
சரீர உரு நிலை அமைகின்றது.
மனிதனுக்கு மட்டுமல்லாமல் உருவாகும் உருவ
நிலை அனைத்திற்குமே… இதன் தொடர்ச்சி செயலில் தான் அண்ட சராசர கோளங்களும் அவற்றின் வளர்ப்பு
வளர்ச்சி நிலை ஒவ்வொன்றுமே… இத் தொடரில் வடிவம் பெறுகிறது.
அவ்வாறு வடிவம் பெற்று வளரும் தன்மையில்…
1.ஆதிசக்தியின் பொதுத் தன்மை கொண்ட உயிரணுவின்…
2.வலுத் தன்மையின்… ஒளித் தன்மை மங்காத்
தன்மை கொண்டு
3.ஒளியின் ஒளி வீரியம் கொண்ட பிரகாசத்தின்
வளர்ச்சியை…
4.மனித எண்ணத்தின் வளர்ச்சியின் பகுத்தறிவால்
(தான்) வளர்க்க முடியும்.