நம் குருநாதர்
(ஈஸ்வரபட்டர்) எமக்குக் கொடுத்த கோடி…கோடி… என்ற உணர்வுகளை உங்களுக்கும் கொடுக்கின்றோம்.
அதாவது…
1.தீமையை நீக்கி
ஒளியின் தன்மையாக ஆக்கிய அந்தக் கோடி…கோடி என்ற உணர்வின் தன்மையைத்தான்
2.உங்களிடமும்
இணைத்துக் கொண்டு வந்து கொண்டிருக்கின்றோம் (ஞானகுரு)
அந்த உணர்வுகளை
நீங்கள் இணைத்துக் கொண்டபின் மற்றவர்களை நீங்கள் பார்த்தால் சில உணர்வுகளை உணர்த்தும்.
அவர்களைக் கேட்டறிந்து நீங்கள் திருப்பிச் சொல்ல வேண்டியதில்லை.
அப்படிக் கேட்டறிந்து
திருப்பிச் சொல்ல வேண்டும் என்றால்… நானே திருப்பிச் சொல்ல முடியாது. அப்படித் திருப்பிச்
சொல்லும் நிலை வந்து விட்டால் அது வெறும் “பாட நிலைதான்” ஆகும்.
ஆகவே நாம் ஒருவரைப்
பார்க்கப்படும்போதே அவருடைய நிலைகளை நமக்குள் உணர்த்தும்.
1.அப்பொழுது
அங்குள்ள தீமை நமக்குத் தெரிய வரும்.
2.அந்தத் தீமை
நீக்குவதற்கு என்ன வழி…? என்ற நிலைகளை நாம் எடுக்க வேண்டும்.
அந்த மகரிஷிகளின்
அருள் சக்தி பெற வேண்டுமென்று இந்த உணர்வை எடுத்து விட்டால் நமக்குள் தீமை சேராது
1.அந்தத் தீமையை
நீக்கும் சொல்லாக நம்மிடமிருந்து வரும்.
2.அத்தகைய சொல்லை
அங்கே பதிவு செய்து விட்டால்…
3.அவர்கள் அதைக்
கேட்டுணர்ந்தால்… அவர்கள் அதைத் திருப்பி எண்ணினீர்கள் என்றால்….
4.அவர்கள் தீமையை
அவர்கள் போக்க முடியும்.
நமக்கு அந்த
“அறிதல்…” என்ற நிலையில் வரும். அதே போல் யார் நம்மைப் பார்த்தாலும்… அவர்கள் பேச ஆரம்பித்தாலே
போதும்…
1.இப்படித்தான்…!
என்று நமக்குத் தெரியும்.
2.தெரிந்தவுடனே
நாம் ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.
3.தெரிந்ததை
அவர்களிடம் சொல்லக் கூடாது.
வர வர (அவர்கள்
பேசப் பேச) நாம் ஆத்ம சுத்தி செய்து கொண்டே அவர்களுக்கு அந்த மகரிஷிகளின் அருள் ஒளி
பெற வேண்டும்…! என்ற அந்த நினைவினைக் கண்ணை வைத்து உற்றுப் பார்க்க வேண்டும்.
சொல்லவே வேண்டியதில்லை.
கேட்டுக் கொண்டே இருக்கின்றீர்கள் அவர் சொல்லும்போது நமக்குக் கோபம் வரும்.. உடனே சிந்தனையில்
“அருளை எடுத்துப் பாருங்கள்…!”
சரி… அப்படியா…!
என்று சொல்லிவிட்டு நீங்கள் அருள் சக்திகளைப் பாய்ச்சிப் பாருங்கள். இவ்வாறு செய்தாலே….
யாராவது தப்பு சொல்பவர்கள் வந்தாலும் திருப்பித் திருப்பிச் சொல்ல முடியாது
பிரேக்காகும்…!
வேண்டுமென்றால் பாருங்கள். இது போய் இடைமறிக்கும். குறைகளைச் சிந்தித்துப் பார்க்கும்
பொழுது அங்கே தடையாகும்.
1.அவர்கள் உணர்வு
நம்மிடம் வராது
2.நமது உணர்வு
என்ன செய்யும்…? அந்தத் தப்பை அடக்கும்…!
3.இது கண்டிப்பாக
வேண்டும்.
ஏனென்றால் சந்தர்ப்பத்தில்
எங்கே குறை கண்டாலும்… அவர்கள் தவறு செய்யவில்லை… அவர்களை அறியாத நிலைகளில் தான் அது
வருகின்றது. ஆகவே அங்கே குறைகள் வளரக் கூடாது.
மகரிஷிகளின்
அருள் ஒளி அங்கு பெற வேண்டும்…. அங்கு மெய்ப் பொருள் காணும் நிலை வரவேண்டும் என்று
எப்படொ எண்ணிப் பாருங்கள்.
ஆனால் தப்பாகப்
பேசினார்… என்ற குற்றம் சாட்டும் நிலை வந்தால்…
1.அவர் உணர்வு
தான் உங்களுக்குள்ளேயும் சேர்ந்து வளர்ந்துவிடும்.
2.உடனே இரண்டு
பேருக்கும் சண்டை வரும் நீ பெரியவனா… நான் பெரியவனா…? என்று
தியான வழியில்
இருக்கின்றவர்கள் இதை எல்லாம் முதலில் சொன்ன மாதிரி மாற்றி அமைத்துப் பழக வேண்டும்.
ஏனென்றால் நாம் பேசக்கூடிய இந்த உணர்வுகள் அனைத்தும் சூரியனின் காந்த சக்தி அலைகளாகப்
பரப்பச் செய்கின்றது.
ரேடியோ டி.வி.யில்
எப்படிப் பதிவு செய்கின்றோமோ அதைப் போல ஞான வித்துகளை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.
அவ்வப்போது அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது அந்த
எண்ணம் வரும். அப்பொழுது உங்கள் ஆன்மா வலுப் பெறும்.
இருந்தாலும்…
1.தீமைகளை நீங்கள்
உணர முடியும். ஆனால் உள்ளுக்குள் விடாது.
2.யாம் சொன்ன
முறைப்படி எண்ணி நீங்கள் செய்து பாருங்கள்
3.அந்த அருள்
உணர்வுடன் உங்கள் பார்வையை மட்டும் மற்றவருக்குச் செலுத்திப் பாருங்கள்.
பிறரின் குறைகள்
நமக்குள் வளராது… அவர்களின் உணர்ச்சிகள் நம்மை இயக்காது… நமது உணர்ச்சிகள் அங்கே ஒடுங்கச்
செய்யும்.
1.இல்லை என்றால்
கொதிக்கச் செய்யும்
2.இல்லை என்றால்
விட்டு விட்டு ஓடி விடுவார்கள்… பயமாகும்...!