போகர் தன் உயிராத்மாவின்
வளர் சக்திக்காக… முருகா என்ற ஆறுகுண. அமில வழி… ஜீவித நீர் நிலை வளர்க்கும் மூல வித்தினை…
இப்பூமியின் ஜீவ வளர்ப்பில்… புவனம் வளர்க்கும் புவனேஸ்வரித் தாய் சக்தியை வணங்கி…
முருக குண வித்தை வளர்க்க… நவபாஷண அமிலத்தை முருக குணச் சமைப்பாக்கிச் சிலை செய்து
வைத்துள்ளார்.
1.எச்சிலையை
நவபாஷணத்தால் முருகனின் உருவத்தைச் செய்தாரோ
2.அதன் தன்மையில்
அமில ஜீவ வளர்ப்பின் வித்து இப்பூமியில் வளரும்
3.ஜீவ முருக
அறுகுண வண்ண அமிலத்தின் வலுவைக் கூட்டும் முருக குண சக்தி நிலை
4.போகரினால்
இப்பூமியில் இன்று செயல்படுகின்றது.
இப்பூமியின்
இமயமலையில் பல ரிஷிகளின் செயல் நடக்கின்றது…!
“ரிஷிகளின்
ஜெபமிடம் அதுதான்…!” என்ற நிலை மட்டும்தான் மனித உணர்வில் தெரிகின்றதோ தவிர உண்மையில்
இமயமலையின் உச்சியில் நடுத் தாழ்வான ஓர் இடத்தில் உச்சிக்கு அப்பால் இந்திய கண்டத்தின்
பின்புறத்தில் “சப்தரிஷியின் ஜீவித மனித ஆத்மா வளரும் வித்தின் உணர்வு சமைப்பு தாவர
வலுவிற்கு… அங்கு குளம்…” ஒன்று உண்டு.
அந்நீர் கொப்பளிக்கும்
தன்மையில் செயல்பட்டுக் கொண்டே உள்ளது.
1.போகர் எப்படி
நவபாஷணத்தால் முருகன் சிலையைச் செய்வித்தாரோ…
2.அதைப் போன்று
ஜீவ நீரில் வடித்தெடுத்த அமில சேர்க்கையால் திடமாக்கப்பட்ட
3.சிவலிங்கம்
ஒன்றை அங்கு ரிஷிகள் பிரதிஷ்டை செய்து வைத்துள்ளனர்.
அதற்குச் சுற்றிலும்
அந்நீர் நிலை கொதி நிலை பெற்றுச் செயல்பட்டுக் கொண்டுள்ளது. அதன் தொடர்பில் பல மாற்று
நிலைகள் இப்பூமிக்கு மனித உணர்வின் செயல் வலுவைச் சப்தரிஷிகளினால் செயல்படுத்தப்பட்டுக்
கொண்டுள்ளது.
ஆக சப்தரிஷிகள்
செயல்படும் ஞான விருட்சக மலை தான் இமய மலை…!
1.இயற்கையின்
மாற்றத்தில் மனித நிலை வாழ வலுக் கூட்டும் ரிஷி சக்தியுடன் நம் எண்ணத்தின் உணர்வைச்
செலுத்தி
2.இஜ்ஜீவ காந்த
சரீரத்தில் ஒளிக் காந்தத்தின் மின் அலையை செலுத்தச் செலுத்த
3.விழி பார்த்துப்
படமெடுக்கும் வாழ்க்கையை ஞான விழி கொண்டு ஜோதி நிலைக்கு மனித நிலை உயர முடியும்.