ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 30, 2017

செவ்வாய் தோஷம்

நீங்கள் எங்கே சென்றாலும் ஜோசியமும் ஜாதகமும் கேட்டு அவர்கள் சொல்லும் நிலையைப் பதிவு செய்தால் அந்த உணர்வே அது கடவுள் என்ற நிலைகளில் உங்களுக்குள் இறையாகி அந்த இறையின் செயலாக உங்களை இயக்கிவிடும்.

அத்தகையை நிலைகளுக்கு விட்டுவிடாதீர்கள்.

அருள் ஞானியின் உணர்வை நாங்கள் பெறுவோம். எங்களை அறியாத தீமைகளை அகற்றுவேன் என்ற மன பலம் கொண்டு வாருங்கள்.

ஜோசியம் கேட்டு அவர் சொன்னதை மனதில் வேதனை கொண்டு உங்கள் மன நிலையை மாற்றிக் கொள்ளாதீர்கள்.

நல்ல பெண்ணாக இருக்கும். அழகாக இருக்கும். படித்த நிலைகள் கொண்டிருக்கும். சீரான குணங்கள் இருக்கும். ஆனால் ஜாதகப்படி “செவ்வாய் தோஷம்” என்பார்கள்.

செவ்வாய் தோஷத்தின் நிலைகள் கொண்டு நாம் சென்றால்
1.நம் குடும்பத்தில் கலகம் வரும்.
2.அதனால் தீய விளைவுகள் வரும்
என்ற ஜாதகத்தின் உணர்வு கொண்டு அவர்கள் சொல்வதையெல்லாம் நமக்குள் பதிவு செய்து கொள்கின்றோம்.

ஆக ஜாதகத்தின் பலன் கொண்டு நல்ல பெண்ணாகவும் குணவதியாக இருப்பினும் அதை நாம் “ஏற்க மறுக்கின்றோம்”.

செவ்வாய் தோஷம் இருப்பதனால்
1.தாய் இறந்து விடுவார் தந்தை இறந்து விடுவார்.
2.இங்கு குடும்பம் நலிந்து விடும்
3.இந்தச் செவ்வாய் தோஷத்தால் குடும்பமே சாபமாகிவிடும் என்பார்கள்.

ஆனால் நற்குணவதியும் நல்ல குணங்களும் நல்ல பேணிக் காக்கும் நிலையும் சிறந்த நிலைகள் இருப்பினும் அதை நாம் ஏற்க மறுக்கின்றோம்.

எதனால்…?

“ஜாதகத்தால்”.

இதைப் போன்ற நிலைகளை விடுத்து நாம் நமது வாழ்க்கையில் அருள் மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் எடுத்துக் கொண்டால் நமக்கு “எந்தத் தோஷமும்… இல்லை”.

1.நான் எண்ணியது தான் தோஷம்.
2.நமக்குள் பதிவு செய்ததே தோஷம்

இந்தத் தோஷங்களைப் பதிவு செய்யாது அருள் ஞானியின் உணர்வை ஆழமாகப் பதிவு செய்து இத்தகைய தீமைகளிலிருந்து விடுபட்டு நம் எண்ணத்தில் மகரிஷிகளின் அருள் ஒளி பெறுவோம் என்று எண்ணுங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற்று இருளைப் போக்குவோம். பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறனைப் பெறுவோம் என்று எண்ணுங்கள்.

ஆலயங்களுக்குள் செல்லும்போது எத்தனையோ பேர் அங்கே வந்தாலும் இந்த ஆலயம் வருவோர் அனைவரும் இத்தகைய தீமைகளிலிருந்து விடுபட்டு அருள் ஞானம் பெற்று அவர் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணுங்கள்.

நமக்குள் இருக்கும் வேற்றுமைகளையும் பகைமைகளையும் நீக்கி  என்றும் ஒற்றுமையுடன் வாழும் உணர்வைத்தான் ஆலயத்தில் காட்டப்பட்டது.


ஆகவே, நாம் நம் மனதைப் பண்படுத்துவோம். அருள் மகரிஷிகளின் அருள் சக்தி கொண்டு பண்பட்ட வாழ்க்கையாக வாழ்வோம்.