ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 28, 2017

பராசக்தி குளிக்கும் குளத்தில் வேறு ஆண்கள் குளித்தால் “பெண்ணாக மாறுவார்கள்” என்ற சாபம் உள்ளது – காவியத்தின் கருத்தின் விளக்கம்

ஆனால் அவர் குளித்த அந்தக் குளத்தில் வேறு யாராவது ஆண்கள் குளித்தால் அது பெண்களாக மாறிவிடுவார்கள் என்று சாபமிட்டதனால் “அந்தக் குளத்தில் யாரும் ஆண்கள் குளிப்பதில்லை.

இப்படிக் காவியப் படைப்பைப் படைத்து அந்தக் கருத்தினை நாம் தெரிந்து கொள்வதற்காகத் தெளிவாக்குகின்றனர்.

குரங்கு அது தாவிச் செல்லும் நிலையானாலும் அந்தக் குளத்தில் விழுந்து விட்டது. இது ஆண் குரங்காக இருப்பதனால் அந்தக் குளத்தின் உணர்வுகள் இதன் மேல் பட்டுப் பெண்ணாக மாறி விடுகின்றது.

ஏனென்றால் நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் இது ஒரு பெரிய குளம்.

அதிலே நாம் பிறர் படும் கஷ்டங்களையோ வேதனைகளையோ நுகரப்படும் போது நாம் அதிலே விழுந்து விடுகின்றோம் என்பதனை உணர்த்துவதற்காக காவியத் தொகுப்புகளைத் தெளிவாக் கொடுத்துள்ளார்கள் ஞானிகள்.

இப்படி விழுந்த குரங்கு பெண்ணாக மாறிவிடுகின்றது. பெண் என்றால் சக்தி என்று பொருள். ஆகவே அது தனக்குள் கருவாக்கும் தன்மை பெற்றது என்பதனை உணர்த்துகின்றனர்.

நமது பிரபஞ்சத்தில் நமது பூமிக்குள் இத்தகைய விஷத்தன்மை பெரும் குளமாக இருக்கின்றது. அந்த உண்மைக்கு மாறான நிலைகள் நடப்பவைகளைப் பார்த்து நாம் விழுந்து விட்டால் எப்படி மாற்றம் அடைகின்றது என்பதனைத் தெளிவாக்குவதற்காக ஒரு காவியமாகப் படைத்தனர் ஞானியர்கள்.

நம்மை அறியாமலே பிறருடைய நிலைகளைப் பார்த்து அந்த உணர்வுகள் நமக்குள் பட்டபின் “இப்படி வேதனைப்படுகின்றானே..,” என்று (குளத்தில் பட்டால்) அவன் உணர்வை நாம் எடுத்தால் இந்த உடலுக்குள் என்ன ஆகின்றது?

நாம் பல வேதனைகள் படுகின்றோம் என்பதனைக் காட்டுகின்றனர்.

இப்படிப் பெண்ணாக மாறியபின் அதைக் கண்டு ரசிக்கின்றனர். யார்? வாயு. அதைக் கண்ட பின் எப்படியும் அதனின் அழகைக் கண்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும் அதனை அணைத்துக் கொள்ள வேணடும் எனறு விரும்புகின்றது.

வாயு என்பது நாம் நுகர்வது வாயு (சுவாசக் காற்று), அதன் உணர்வின் தன்மை இங்கே நம் உடலுக்குள் சென்றபின் உமிழ் நீராக மாறுகின்றது.

வாயுவுனுடைய நிலைகள் எந்த குணத்தின் உணர்வோ அதனை எண்ணும்போது “அதிலே உருவான கரு தான் என்ற நிலைகளைக் காட்டுகின்றனர்.

வேதனைப்படுபர்களைப் பார்த்து அந்த வேதனையான உணர்வை நாம் சுவாசிக்கும் போது நுகர்ந்த உணர்வுகள் வேதனை என்ற உணர்வைக் “கருவாக்கும் உமிழ் நீராக மாறுகின்றது.

இதை மாற்றி அமைப்பதற்காக “இந்திரன்..,” இரண்டாவது வருகின்றான். இந்த அழகைக் கண்டு தானும் ஆசைப்பட்டு அதை அடைய விரும்புகின்றான்.

1.“இந்திரன் என்றால் உருவாகும் உணர்வுகள்.
2.உமிழ் நீராக மாறி அது இந்திரீகமாக மாறுகின்றது.
3.இந்திரீகமாக மாறப்படும் போது அந்த வேதனை என்ற உணர்வுகள் உடலுக்குள் அணுக்களாக எப்படி உருவாகின்றது?
என்ற நிலையைக் காட்டுகின்றனர்.

இதையெல்லாம் நாம் புரிந்து கொள்வதற்காகக் காவியத் தொகுப்புகளில் தெளிவாக்கியுள்ளார்கள்.

இதையெல்லாம் எதற்காகச் சொல்கின்றேன்? நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களை எல்லாம் நேராக துருவ நட்சத்திரத்திற்கே அழைத்துச் செல்லுகின்றேன்.

இந்த உணர்வை எடுத்து எடுத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை நம் உடலில் எளிதில் சேர்த்துக் கொள்ள இது உதவும்.

உமிழ் நீராக ஆனதால் இந்திரன் என்றால் அவனுக்கும் இரண்டு பேருக்கும் (வாயு, இந்திரன்) சேர்த்துப் பிறந்தது தான்.

ஆகவே வேதனைப்பட்ட உணர்வுகள் வாய்வு. நமக்குள் நுகர்ந்த பின் அது உமிழ் நீராக மாறுகின்றது.

பின் இந்திரன் என்ன செய்தான்? அதன் உணர்வு கொண்டு அதன் ஆசையிலேயே தான் (உடலாக) உருவாக்கும் தன்மை வந்து விடுகின்றது என்பதனைக் காட்டுகின்றனர்.

ஏனென்றால் வேதனைப்படுவதை நாம் உற்றுப் பார்த்து விரும்பித்தான் எடுக்கின்றோம். ஆகவே.., அப்பொழுது நாம் ஆசைப்படுவது எதுவாக இருக்க வேண்டும்?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாம் பெறவேண்டும் என்று அதை ஆசைப்படுதல் வேண்டும்.

ஏனென்றால் வேதனையை நுகருகின்றோம். வாயுவாகின்றது. நம் உடலுக்குள் வரும்போது வாலியாகிவிடுன்றது. அந்த வலுவின் தன்மை உமிழ் நீராக மாறுகின்றது.

அந்த வலிமையான நிலைகளை மாற்றியமைப்பதற்காக நாம் என்ன செய்ய வேண்டும்.

இதைப் போல் அந்தத் தீமைகளை நீக்கிய உணர்வை ஒளியாக மாற்றிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அது பெற வேண்டும் என்று ஏங்கி அந்த உணர்வை நாம் சுவாசிக்க வேண்டும். அது நமக்குள் கலந்து நம் உயிரிலே படுகின்றது.

நாம் குழம்பு வைக்கும் போது உப்பு புளி காரம் என்று பல பொருள்களைச் சேர்த்துச் சுவையாக மாற்றுவது போல அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறவேண்டும் என்று இப்படி அதை இணைத்துக் கொள்ள வேண்டும்.

இணைத்தால் அந்த வேதனைகளைத் தடுத்து விடுகின்றது. வேதனைப்படும் உணர்வுகள் அணுவாக உருவாகாதபடி தடைப்படுத்துகின்றது.

இப்படி நம் உடலுக்குள் இருக்கும் எல்லா அணுக்களுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேருளைப் பெறவேண்டும் என்று செலுத்தப்படும் போது
1.இங்கே புருவ மத்தியில் அந்த உயிரின் நிலைகளில் உள்ளே செல்லாது தடுப்பதும்
2.நம் உடலுக்குள் இரத்தத்தில் கலந்தபின் அந்த விஷத்தின் தன்மை நுகராது தடுப்பது தான் இந்த உண்மையான நிலைகள்.
3.தியானம் என்பது முறைப்படி இது தான்.

நம்முடைய சகஜ வாழ்க்கையில் பிறர் வேதனைப்படுவதைப் பார்க்கின்றோம். பார்த்தபின் அவர்களை நல்லதாக்க வேண்டும் என்ற ஆசையில் அவர்களுக்குப் பொருளால் உடலால் வேண்டிய உதவிகளைச் செய்து நல்லதாக்கி விடுகின்றோம்.

ஆனால் நாம் நுகர்ந்த தீய உணர்வுகள் அதனுடைய வலிமையான நிலைகள் நமக்குள் நோயாக வந்து விடுகின்றது. அந்தத் தீமைகளை நுகர நேர்ந்தாலும் தீமையின் உணர்வுகள் நமக்குள் பெருகாது தடைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதைப் போன்ற நிலைகளில் நம் வாழ்க்கையில் நம்மை அறியாமல் சேரும் தீமைகளை “நாம் தடைப்படுத்துவதற்குத் தான் ஞானிகள் இப்படி காவியங்களைக் கொடுத்துள்ளார்.


இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.