ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 22, 2017

சாக்கடையான இந்த உலகில் வாழ்கின்றோம் – தூய்மையற்றதைத் தூய்மையாக்கும் உணர்வுகளைச் சேர்ப்பிப்பதே யாம் சொல்லும் இந்தத் தியானத்தின் “வழி”

இன்றைய உலகில் மனித இனத்தையே பூண்டுடன் அழிக்கும் உணர்வுகளாக மனிதனுக்குள் விளையப்பட்டு சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு நஞ்சு கொண்ட உணர்வுகளாகச் சாக்கடையாக இருக்கின்றது.

இந்தச் சாக்கடைக்குள் பல ஆண்டுகளுக்கு முன் மறைந்திருந்த ஞானிகள் இத்தகையை தீமைகளை நீக்கி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிய அரும் பெரும் சக்தி நமக்கு முன் உண்டு.

அருள் ஞானிகளின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்து இந்தச் சாக்க்டையான வாழ்க்கையில் சாக்கடையைப் பிளந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை நுகர்ந்து நுகர்ந்து இந்தச் சாக்கடையான உலகில் வாழ்ந்த நம் உடலுக்குள் சாக்கடையைப் பிளந்து உயிருடன் ஒன்றி என்றும் நிலை கொண்ட ஒளியின் சரீரத்தை நாம் அனைவரும் பெற முடியும்.

இதற்கென்று “விதி” இல்லை. இளம் பிள்ளை என்றோ மற்றவர்கள் என்றோ அறிந்தவன் என்றோ அறியாதவன் என்றோ எதுவுமே இல்லை.

அறியாதவன் அறிய முற்படுகின்றான். அறியாத நிலைகளில் இருக்கும் பொழுது நாம் அறிய முற்படுகின்றோம். அறிந்திடும் ஞானத்தைக் கொண்டு இருள் நீக்கிப் பொருள் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை அறியும் பக்குவத்தை உங்களுக்குள் கூட்டிக் கொள்ளுங்கள்.

அப்படிக் கூட்டும்போது இதனின் உறுதுணை கொண்டு அறிந்திடும் நிலைகள் கொண்டு இருளைப் போக்கி ஒளி காணும் உணர்வினை உங்களுக்குள் விளைய வைக்க முடியும்.

உங்களை நீங்கள் நம்பிப் பழக வேண்டும்.

நாம் வீட்டில் இருக்கிறோம் என்றால் எவ்வளவு சுத்தப்படுத்தி வைத்தாலும் வீட்டிற்குள் அழுக்கு வரத்தான் செய்கின்றது. நாம் எவ்வளவு தூய்மையான ஆடையைப் போட்டாலும் அது அழுக்காகத்தான் செய்கின்றது. நம் உடலைத் தூய்மைப்படுத்திக் கொண்டிருந்தாலும் அழுக்கு வரத்தான் செய்கின்றது.

1.நாம் தூய்மையான எண்ணங்களை எண்ணிக் கொண்டிருந்தாலும்
2.தூய்மையற்ற நிலைகளைக் கேட்டுத்
3.தூய்மையற்றதை நமக்குள் வளர்த்துக் கொண்டு தான் உள்ளோம்.

எவ்வாறு தூய்மையற்ற நிலைகளைத் தூய்மையாக்குவதற்குத் துடைக்கின்றோமோ நல்ல நீரை விட்டு அதைக் கழுவுகின்றோமோ இதைப் போல
1.மகரிஷிகளின் அருள் உணர்வை நமக்குள் சேர்த்து
2.நம் உடலுக்குள் இருக்கும் தூய்மையற்றதைத் தூய்மையாக்கும் உணர்வுகளைச் சேர்ப்பிப்பதே
3.யாம் சொல்லும் இந்தத் தியானத்தின் வழி.