பிறரை ஏசிப் பேசும் நிலைகள் கொண்டு ஒருவன் சாபமிடும் நிலைக்கு வருவான். அந்த
மாதிரி எந்த மனிதன் தன் எண்ணத்தில் துரிதமாக இருக்கின்றானோ மற்றவர்கள் “எவ்வளவு நல்லது
சொன்னாலும்.., சாபமிடுவதை.., அவன் நிறுத்த மாட்டான்”.
அதே சமயத்தில் யாரை அவன் சாபமிடுகின்றானோ அந்தச் சாப வினையைக் கேட்டவனும்..,
“அதை விடுவேனா..,” என்று அதே உணர்வு கொண்டு அவனும் அத்தகையை நிலைகளைச் செய்வான்.
ஓம் நமச்சிவாய.., சிவாய நம ஓம்.., முதலில் சாபமிட்டவன் உடலில் விளைந்த தீமைகளின்
வினைகள் இவருக்குள்ளும் பதியப்பட்டு அதே உணர்வுகள் இங்கே எதைப் பேசுகின்றார்களோ அதை
எதிர்மறையாகப் பேசச் செய்யும்.
இவ்வாறு அந்த உணர்வின் தன்மைகள் வேகமாக இயக்கப்படும் பொழுது மற்றவர்கள் இதைப்
பார்த்துக் கேட்பார்கள். அட.., இரண்டு பேரும் ஏன் இந்த மாதிரி ஏசிப் பேசுகின்றீர்கள்..,
“விட்டுவிடுங்கள்” என்று சொன்னாலும் இந்த உணர்வுகள் எடுக்காது.
“உங்களுக்கு என்ன தெரியும்..!” என்று சொல்வார்கள்.
இருவரில் எவரையாவது.., அவன் தான் பேசுகின்றான்.., “நீ ஏன் அதை விட்டுவிட்டுப்
போகலாம் அல்லவா.., போ..,” என்று சொன்னால் என்ன ஆகும்.
“நீ அவனுக்குத்தான்.., சாதகமாகப் பேசுகிறாய்” என்ற உணர்வுகள்
அங்கே நல்லதைச் சொன்னாலும் எதிர்த்துத் தாக்கும் நிலை வரும்.
இதைப் போல ஒருவர் ஏசுவதைக் கண்டு சரி விட்டு விடுங்கள் போகட்டும் என்று சொன்னால்
உடனே அவன் என்ன சொல்வான்?
“பார்… அவன் எப்படிப் பேசுகின்றான் பார்..,” என்பான்
ஆக, இவன் ஏசிப் பேசிவிடுவான். அடுத்தவனுக்குள் இது பட்டவுடன் இந்த உணர்ச்சிகள்
பொங்கிவிடும்.
1.அவன் ஒரு சொல்லைச் சொல்லி இருப்பான்
2.ஆனால் இவன் பத்து சொல்லைச் சொல்வான்.
இவ்வாறு அந்த உணர்வின் வேகத் துடிப்பு வரும் பொழுது இருவருக்குமே தர்மத்தையோ
நியாயத்தையோ மற்ற நல்ல வழிகளைச் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
ஒரு மிளாகாய்ச் செடி தனக்குள் காரமான உணர்வை எடுத்துத்தான் அந்த மிளகாயின் வித்து
உருவாகும். அந்த வித்தின் தன்மை தன் செடியின் சத்தைக் கவர்ந்து தன் இனத்தின் தன்மையைத்தான்
அது விருத்தி செய்யும்.
இதைப் போல ஒருவருக்கொருவர் பேசிய உணர்வுகள் அது வித்தாகும் பொழுது இந்த மனிதன்
எவ்வளவு சாபமிட்டுப் பேசினானோ இவனுக்குள்ளும் அதே உணர்வைச் சுவாசித்துச் சாபமிட்டுக்
கொண்டேயிருப்பான்.
இந்தச் சாபமிடுவதைக் கேட்டுணர்ந்தோரும் அவர்களும் சாபத்தை விட்டுக் கொண்டேயிருப்பார்கள்.
இந்த அலைகள் படர்ந்து.., படர்ந்து.., இவர்களுக்குள் உள்ள நல்ல குணங்கள் இயங்காது தடைபடுத்திவிடுவார்கள்.
இந்தச் சாப அலைகள் இருவருக்குள்ளும் விளைந்து இவர்கள் எதையெல்லாம் சொன்னார்களோ
இவை அனைத்தும் அங்கே படர்ந்து அங்கே இருவருடைய குடும்பங்களிலும் இவர்கள் வீரியமாகப்
பேசுவார்கள்.
அதே சமயத்தில் இந்த வீரிய உணர்வுகள் இவர்கள் குடும்பத்தில் பாசத்தையும் பற்றையும்
விட்டு அதனால் ஒருவருக்கொருவர் வெறுப்பை உருவாக்கிவிடும்.
பாசத்துடன் இருப்போரின் நிலைகளும் இவருடன் பேசப்படும் பொழுது இந்த வெறுப்பான
அந்த உணர்வுகள் பற்று கொண்ட அவருக்குள் ஈர்ப்புக்குள் அதிகமாகிவிடும்.
ஆனால், ஏசியவர் தப்பிவிடுவார்கள். குடும்பத்தில் பாசத்துடன் உள்ளோரின் நிலைகளில்
இது படப்பட்டு அந்த உணர்வுகள் அது துரிதமாக விளைந்து நோயாக மாற்றி அவனை முதலில் வீழ்த்தும்.
அண்ணன் தம்பிக்குள் இதைப் போன்று ஒருவருக்கொருவர் பார்த்து விடும் சாப அலைள்
உற்று நோக்கப்படும் பொழுது அவர்களுக்குள் தீய வினைகள் ஆகி நோயாக மாறி அவர் குடும்பத்திலேயே
வெறுப்பின் தன்மை வந்துவிடும்.
அவர்கள் தாயோ தந்தையோ அவர்கள் “அதை விட்டு விடுடா..,” என்று சொன்னாலும் அந்த
வேக நிலையில் “நீ பேசாமல் இரு..,” என்பார்கள்.
ஆனாலும் அவர்கள் இட்ட சாப அலைகள் அவர்களுக்குள்ளே படர்கின்றது. இது “அவர்களுடன்
போனாலும் பரவாயில்லை”.
அதே சமயத்தில் அவர்கள் குடும்பத்தில் கர்ப்பமாக இருந்தால் அதே சாப அலைகள் தன்
வீட்டிலிருப்போரின் நிலைகளுக்குள் நுகரப்பட்டு அவரின் “கருவிலிருக்கும் குழந்தைக்கும்” இந்தச் சாப
அலை படர்ந்து விடுகின்றது.
அதே போன்று ஒருவருக்கொருவர் சாபமிடுவதை மற்றவர்கள் இதை வேடிக்கையாப் பார்ப்பார்கள்.
ஆனால் “வேடிக்கையாகப் பார்ப்போரின் நிலைகளும் இது பாய்ந்து” அவர்கள் குடும்பத்திலும்
படரும். கருவுற்றவர்கள் இருந்தால் அந்தக் கருவிலிருக்கும் குழந்தைக்கும் இது பாயும்.
உதாரணமாக ஒருவருக்கொருவர் சாபமிடும் போது “கால் முடமாகும்…, உன் கண்கள்
குருடாகிவிடும்..,” என்று பேசியிருந்தால் அதைக் கர்ப்பமான தாய் கேட்டுணர்ந்தால் உணர்வுகள்
வேடிக்கையாகப் பார்த்திருந்தாலும் கருவில் விளைந்து அது இணைந்துவிட்டால் அது கால் முடமாகும்.
அல்லது கண்கள் குருடு என்று பேசினால் அதே உணர்வினுடைய தன்மைகள் இங்கே கண் வளர்ச்சியின்
தன்மையைத் தடைப்படுத்தும்.
இவ்வாறு தான் மனிதன் பரிணாம வளர்ச்சியில் உயர்ந்த நிலைக்கு வந்த பின்னும் இந்த
உணர்வின் இயக்கங்கள் அது இப்படியெல்லாம் இயங்கத் தொடங்கிவிடுகின்றது.
நிம்மதியாக வாழும் குடும்பத்திற்குள் சண்டகளும் சச்சரவுகளும் ஏன் வருகின்றது
என்று நமக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.
இன்று பத்திரிக்கை வாயிலாகவும் டி.வி வாயிலாகவும் இன்னும் எத்தனையோ சாதனங்கள்
வழியாக பல இடங்களில் ஒருவருக்கொருவர் ஏசிப் பேசும் நிலைகளையும் அசுரத்தனமாகத் தாக்குவதையும்
அப்படியே காண்பிக்கின்றார்கள்.
எல்லாவற்றையும் பார்க்கின்றோம், கேட்கின்றோம். நமக்குள்ளும் அதே கொதிப்பும் ஆத்திரமும்
வருகின்றது. நாமும் அவர்களைத் தாக்க வேண்டும் என்ற உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.
ஆகவே அவ்வாறு கேட்டுணர்ந்த பார்த்துணர்ந்த தீமை செய்யும் நிலைகளைச் சுத்தப்படுத்துகின்றோமா…? சற்று சிந்தித்துப்
பாருங்கள்.
தவறு நாம் யாரும் செய்யவில்லை.
ஒரு இடத்தில் விளைந்த தீமை எல்லோருக்குள்ளும் சென்று அதனின் இயக்கமாக எல்லோரையும்
அது இயக்குகின்றது. இதை நிறுத்த வேண்டுமல்லவா.
ஒவ்வொரு நொடியிலும் துருவ நட்சத்திரத்தை எண்ணி அதனின்று வெளிப்படும் பேரருள்
பேரொளியை நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
ஏசிப் பேசுவோர் உடல்களில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்.
அவர்கள் உண்மையை உணர வேண்டும். சிந்தித்துச் செயல்படும் ஆற்றல் பெறவேண்டும் என்று நாம்
இவ்வாறு எண்ணி நம்மைத் தூய்மைப்படுத்த வேண்டும்.
தூய்மைப்படுத்தவில்லை என்றால் நாம் எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப
1.கடுமையான நோய்கள் வரும்
2.குடும்பத்தில் ஒற்றுமை குலையும்
3.பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியம் இருக்காது
4.தொழில்கள் நசிந்து போகும்
5.வேலை பார்க்கும் இடங்களில் தொல்லைகள் வரும்
6.நிம்மதி இழந்து தவிக்க நேரும்
7.கடைசியில் மனிதனல்லாத உருவைத் தான் பெறச் செய்யும் நம் உயிர்.
நம் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி அருள் சக்திகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் உடலில் அதனின் வலிமையைக் கூட்டிக் கொள்ளுங்கள்.
உங்கள் சொல் செயல் புனிதம் பெறும். உங்கள் மூச்சால் மற்றவர்களுக்கும் நல்லதாகும்.
“இந்தப் பாதுகாப்புக் கவசம்..,” நமக்கு அவசியம் தேவை.
வளர்ச்சியின் பாதையில் வந்த மனிதன் நாம் இனி அடுத்த நிலையான “தெய்வ நிலைக்குச்
செல்ல வேண்டும்”.