ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 23, 2017

“மகராசன்…” எனக்கு தக்க நேரத்தில் ரொம்பவும் உதவி செய்தான் என்ற எண்ணத்தில் உடலை விட்டுப் பிரியும் உயிரான்மாக்கள் “நன்றிக் கடனை எப்படித் தீர்க்கிறது..?” என்று தெரிந்து கொள்ளுங்கள்

நல்லதைப் பெறவேண்டும் என்று ஒருவர் ரொம்பவும் பிரியப்படுவார். நல்லதைச் செய்பவர் வேதனைப்படுக் கஷ்டப்பட்டவருக்கு ரொம்பவும் உதவி செய்கின்றார்.

ஆனால், இவர் உதவி செய்து கொண்டிருக்கும் பொழுது எல்லா உதவியும் வாங்கிக் கொண்ட அந்த ஆன்மா உடலில் பட்ட நோயின் தன்மை கொண்டு இறந்துவிட்டால் உடலை விட்டுப் பிரிந்து சென்றபின் எவர் உதவி செய்தாரோ அவர் உடலுக்குள் வரும்.

இவர் பக்தி கொண்ட ஆன்மாவாக இருப்பார். இருப்பினும் இந்த (உதவி செய்த) மனிதனை மட்டும் பக்தி கொண்டு இருப்பார். தெய்வத்தை எல்லாம் வேண்டினேன். எல்லாத் தெய்வமும் என்னைக் கைவிட்டது. தெய்வத்தின் மேல் அந்த நல்ல ஒழுக்கத்தின் மேல் வெறுப்பு உணர்வு இருக்கும்.

ஆனால், இவர் நல்லவர் எல்லோருக்கும் உதவி செய்திருப்பார். ஆனால், அந்த உதவியின் தன்மை கொண்டு பிறரிடம் நல்ல பேரும் புகழும் வாங்கியிருப்பார்.

கோவில்களுக்கு வேண்டிய நிலைகளை ஓடி ஓடியும் செய்திருப்பார். கோவிலில் காட்டிய பக்தியின் நிலைகள் கொண்டு ஒரு மனிதருக்கு ஓடிப் போய்.., அடடா.., முருகா இப்படிக் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லிச் சொல்லி உதவி செய்வார்.

அவர் (உதவி பெற்றவர்) இந்த நல்லவர் செய்த உதவியை மட்டும் தான் எண்ணுவார். முருகனை இவர் சொல்லும் பொழுதெல்லாம் அவர் வெறுப்பார்.
1.அந்த முருகன் என்னைக் கைவிட்டுவிட்டான்
2.நீ தானப்பா என்னைக் காப்பாற்றுகின்றாய் என்பார்.

அப்பொழுது இந்த உணர்வுகளை அதிகமாக விளைய வைத்து இவர் மேல் எண்ணமாகி அவர் இறந்தால் இவர் நினைவாகவே யார் உதவி செய்தாரோ செய்த நன்றிக்கு அவரை எண்ணி இந்த ஆன்மா உதவி செய்தவர் உடலுக்குள் வந்து சேர்ந்து விடும்.

எல்லாக் கோவிலுக்கும் பக்தியாகப் போய்ச் செய்து கொண்டிருந்தவர் இதற்கப்புறம் என்ன செய்வார் தெரியுமா…? கோவிலைக் கண்டாலே வெறுப்பு வரும்.

ஏனென்றால், “நோய்வாய்ப்பட்ட அந்த ஆன்மா.., இவருக்குள் வந்துவிட்டது அல்லவா…!” அவருக்குள் அது வெறுக்கச் செய்யும். இங்கே நல்ல உபதேசம் கேட்டுக் கொண்டிருந்தால் கூட உட்கார விடாமல் எழுப்பி வெளியில் இழுத்துக் கொண்டு போய்விடும்.

இது தான் பக்தி மார்க்கங்களில் நாம் செய்த நன்றியை நாம் பெற முடியாத நிலைகளில் நாம் செய்த நன்றியின் உணர்வுகள் அந்த எண்ண வலு எது பெற்றதோ அதன் உணர்வின் துணை கொண்டு நமக்குள் வந்துவிட்டால் இந்த மாதிரி ஆகிவிடுகின்றது.

நாம் அதற்கு நன்மை செய்தோம். ஆனால், யார் மீது அந்த வெறுப்புப்பட்டதோ அந்த வெறுக்கும் உணர்வு நமக்குள் வரும் பொழுது நல்ல ஒழுக்கத்தை இதுவே தடைப்படுத்தும்.

என்ன நல்லது செய்து… என்ன பிரயோஜணம்…? என் உடலில் நோயாகிவிட்டது? அந்த உணர்வு கொண்ட ஆன்மா இவர் உடலுக்குள் வந்துவிட்டால் இந்த வேலையைத்தான் செய்யும்.

நேற்றெல்லாம் கோவிலுக்கு ஓடி ஓடி எல்லாம் செய்தார். இன்று நல்லது சொன்னாலும் நிற்க மாட்டேன் என்கிறார். இப்பொழுது சதா வேதனையைப் பற்றியே சொல்லிக் கொண்டிருக்கின்றார் என்பார்கள்.

காரணம் அவர் நல்லவர் தான். அவர் அறியாது வந்த தீமைகளிலிருந்து தான் துடைக்கும் மார்க்கத்தைத் தவறியதனால் அந்த உணர்வுகள் வந்து அந்த ஆன்மா நமக்குள் குடிகொள்கின்றது.

ஒரு மான் புலியின் நிலைகளைக் கண்டு கண்டு அது தன்னை இம்சிக்கும் என்ற உணர்வு கொண்டு அதனிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்ற நிலைகள் கொண்டு அந்த ஆன்மா வெளியில் சென்ற பின் புலியின் உணர்வை நுகர்ந்து புலியின் ஈர்ப்புக்குக்குள் சென்று மானின் உயிராத்மா புலியாக மாறுகின்றது.

இதைப் போன்று தான் இவர்கள் நல்ல உணர்வைக் கொண்டாலும் இந்த நஞ்சு கொண்ட உணர்வு வந்தபின் பாலுக்குள் நஞ்சைப் போட்டால் பாதாமிற்குள் நஞ்சைப் போட்டால் கொன்றுவிடுவது போல் இவர் பட்ட வேதனை இவர் உடலுக்குள் சென்று அந்த நல்லதைச் “செயலற்றதாக மாற்றிவிடும்”.

இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இதையெல்லாம் வென்றவன் மகரிஷி அவன் உணர்வின் வலுக் கொண்டு இதை அடக்கினோம் என்றால் நம்முடைய எண்ணம் அங்கே போய் அடங்கும்.

அவர்கள் தீமையைப் பொசுக்கியவர்கள். அந்த உணர்வின் தன்மை அங்கே எண்ணும் பொழுது நமக்குள்ளும் தீமைகளைப் பொசுக்கும்.

தீமைகளைப் பொசுக்கும் உணர்வுகள் கொண்டு வளர்ந்த பின் இந்த உடலை விட்டு வெளியில் சென்றால் அந்த மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் சென்று உடல் பெறும் உணர்வைக் கருக்கும்.


கருக்கிய உணர்வு கொண்டு “உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நிலைத்திருக்கும்”.