ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 2, 2017

இன்றைய நீதியின் நிலைமை...!

இன்று குற்றவாளிகள் பெருகும் நிலைக்குக் காரணம் என்ன?

மக்கள் ஆசையின் நிமித்தம் பேராசையாக வளர்த்துக் கொள்கின்றனனர். ஆனால் அது “நிராசையாக மாறும் பொழுதுதான்.., குற்றவாளியாகின்றார்கள்”. குற்றங்களை அதிகமாகச் செய்கின்றனர்.

அவர்கள் செய்த குற்றங்கள் “மற்றவர்களின் சாபங்களால்..,” ஒவ்வொரு குடும்பங்களிலும் வேதனைகள் படுகின்றனர் பல வகைகளிலும் அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இதைப் போன்று இன்று அரசாங்க நிர்வாக நிலைகளில் நீதியைச் சொல்லக்கூடியவர்களும் நீதிகள் தவறப்பட்டு மக்களுக்கு நீதியை நிலைநாட்ட முடியாமல் “எதிர்பார்த்த அளவு இல்லை.

நீதிக்குப் புறம்பான நிலைகளில் தீர்ப்புகள் கூறப்படும் பொழுது.., அந்த நீதிக்குரியவன் நீதிபதிகளையும் அதற்குக் காரணமானவர்களையும் மனம் நொந்த நிலையில் சாபமிடுகின்றான்.

அப்படிச் சாபமிட்ட உணர்வுகள் யார் நீதி சொன்னார்களோ அவர்கள் உடலில் பதிவாகின்றது.

ஆனால், நீதிபதியாக இருப்பவரோ செல்வத்தைச் சம்பாரிக்கின்றார். அதே சமயத்தில் அவருடைய குடும்பங்களில் இந்தச் சாபமிட்ட உணர்வுகள் “குழந்தைகளும்.., அவர் வாரிசுகள் அனைத்தும்.., துன்பத்தை அனுபவிக்கின்றனர்”.

1.நாம் இன்று தவறு செய்தோம் என்றால்
2.குழந்தைகளுக்கு நிச்சயம் அதனின் பாதிப்பு உண்டு.
அடுத்து அந்தக் குழந்தைகள் வாடும் பொழுது.., “அவர்களுடன் சேர்ந்து நாமும் நிச்சயம் அனுபவிக்க நேரும்”.

ஆகவே, இதைப் போன்ற இயக்கங்கள் “உலகில் இப்படி நடக்கின்றது..,” என்பதனைத் தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்.

நாடு நலம் பெறவேண்டும் என்றால்
1.நாம் எல்லோருமே ஞானிகளாக வேண்டும்.
2.நல்ல உணர்வுகளைச் செயல்படுத்திப் பழகுதல் வேண்டும்.
3.நாட்டில் எல்லோரையும் நல்லவர்களாக மாற்றிப் பழகுதல் வேண்டும்.
4.அரசாங்கமோ மற்றவைகளோ அதில் நல்ல நிர்வாகத்தை உருவாக்கிப் பழகுதல் வேண்டும்.

“நல்லது” என்றால்…, “அடுத்தவர்களைக் குறை கூறுவதில்லை”.

நாம் நம்மைப் பொறுத்த வரையிலும்.., “நமக்கு நீதி என்ற நிலை தெரியப்படும் பொழுது.., தவறிலிருந்து நாம் விடுபட்டுப் பழக வேண்டும்”.

தவறு நாம் செய்யக்கூடாது. தவறு செய்யாத நிலைகள் வரவேண்டும். இந்த உணர்வை நாம் ஒவ்வொருவரும் வளர்த்துக் கொண்டால் இந்த நாட்டின் நன்மையை நாம் எதிர்பார்க்கலாம்.

“நீ இதைச் செய்..,” என்றார் குருநாதர்.

யாரும் தவறு செய்யவில்லை. சந்தர்ப்பங்கள் தான் தவறாக்கிவிடுகின்றது. இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும்.

இன்றைய விஞ்ஞான அறிவு எங்கேயோ போய்விட்ட்டது. கடுமையான நோயாகி விட்டால் மனிதனின் உறுப்புகளைச் செயற்கையாகவே செய்து மாற்றுவதும் இதைப் போல எத்தனையோ நிலைகளைச் செயல்படுத்தும் நிலைக்கு வந்துவிட்டது.

ஏனென்றால், நமக்குள் வேதனைகள் அதிகமாகிவிட்டால் நோயாகி விடுகின்றது. அறுவை சிகிச்சை செய்து இருதயத்தை மாற்றினாலும் அவர்களும் சிறிது காலமே வாழ்கின்றனர்.

இருதயத்தை மாற்றியவர்கள் என்ன எண்ணுகின்றார்கள்? என் இருதயத்தை மாற்றியிருக்கின்றார்கள் மாற்றியிருக்கின்றார்கள் என்று எண்ணிக் கொண்டு “நாளைக்கு வாழ முடியுமா.., அதிக நாள் வாழ முடியுமா..,? என்ற இந்த வேதனை உணர்வுகள் தான் வருகின்றது.

இது குறைவதில்லை. சாம்பாரித்த பணத்தை அதற்காக வேண்டி எவ்வளவோ செலவழித்தும் மீண்டும் வேதனையைத்தான் வளர்க்க முடிகின்றது.

இதைப் போன்று மக்களின் நிலைகளில் நாம்.., “இந்த உடலுக்குப் பின் என்ன ஆகின்றோம்..,?” என்று யாருமே “சற்றும்” சிந்திப்பது இல்லை.

இதற்குத்தான் இராமாயணம், மகாபாரதம், கந்த புராணம், விஷ்ணு புராணம், சிவ புராணம், விநாயகர் புராணம் உலகில் எந்த நாட்டில் இல்லை என்றாலும் நம் நாட்டில் இது தெளிவாக உண்டு.

அந்தக் காவியங்களில் மனிதன் அடைய வேண்டிய எல்லையைத் தெளிவாக்கியுள்ளார்கள்.

நம் நாட்டில் தோன்றிய ஞானிகள் சாஸ்திரங்களாக கொடுத்ததை நாம் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். அவர்கள் காட்டிய அருள் வழி வாழ்ந்தால் அந்த ஞானிகள் இருப்பிடத்தை நாமும் அடையலாம்.

அழியக் கூடிய உடலுக்காக வாழாதீர்கள். அழியாத நிலைகள் கொண்ட.., “நம்மை உருவாக்கிய உயிருக்காக வாழுங்கள்”.

உயிருடன் ஒன்றி வாழ்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து என்றுமே அழியாத நிலைகள் பெறலாம்.