ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 16, 2017

சும்மா.., "சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கின்றார்..," என்று சிலர் எண்ணுவார்கள் - விளக்கம்

மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றோம். ஆனால்.., “சாமி என்ன சொன்னார்? தெரியவில்லையே..,” என்று விட்டுவிட்டால் நீங்கள் பிடித்துக் கொள்வதற்குத்தான் மீண்டும் சொல்வது.

இரண்டாவது உங்களுக்குள் மீண்டும் பதிவு செய்வதற்கும் நினைவாற்றலைக் கூட்டுவதற்கும் தான் இதைத் திரும்பத் திரும்பச் சொல்கின்றேன்.

சாமி.., “சும்மா” திரும்பத் திரும்பச் சொல்கிறார்.., “சொன்னதையே” சொல்லிக் கொண்டிருக்கின்றார் என்ற நிலையிலே சிலர் எண்ணிக் கொண்டிருப்பார்கள்.

யாம் சொல்வது இத்தனையும் கேட்கின்றீர்கள். “என்ன சொன்னார்…?” என்று திரும்பக் கேட்டால் என்ன சொல்வார்கள்?

சொன்னார்.., கேட்டேன்.., தலையைத்தான் சொறிவார்களே தவிர முழுமையாகச் சொல்லத் தெரியாது.

நூற்றுக்கு ஒன்று இரண்டு பேர்தான் இருக்க முடியும். நூற்றுக்கு ஒன்று இரண்டு பேர் கூடக் கஷ்டம் தான்.

நானே இப்பொழுது சொல்லிவிட்டுத் திருப்பி என்ன சொன்னேன் என்று கேட்டால் எனக்கே தெரியாது.

இதைப் போல “உணர்வின் நினைவாற்றல்…, அதனுடைய செயல்கள்” இவ்வாறு இருக்கின்றது.

ஆகவே யாம் திரும்பச் சொல்வது என்பது எதற்கு? ஒரு செடிக்குத் தண்ணீர் ஊற்றியபின் மீண்டும் மீண்டும் ஜீவன் ஊட்ட நீரை ஊற்றுகின்றோம்.

இதைப் போல் தான் யாம் பதிவாக்கிய ஞான வித்தின் உணர்வின் தன்மையை மீண்டும் மீண்டும் நினைக்கும் பொழுது அந்த உணர்வின் ஆற்றல் உங்களுக்குள் பெருகுகின்றது.


அதனைச் செய்வதற்கே இதைச் செய்கின்றோம்.