இன்று
நீங்கள் சொத்தை அதிகமாகச் சேர்த்து வைத்திருந்தால் அடுத்தாற்போல் உங்கள் மனது எப்படி
இருக்கின்றது?
துடுக்..,
துடுக்.., துடுக்.., என்று கடிகாரம் அடித்த மாதிரி இருக்கும். “எங்கேயாவது.., திருடி
விட்டார்கள்..,” என்று பத்திரிக்கையில் படித்தால் போதும்.
இரவெல்லாம்
துடுக்.., துடுக்.., என்று இருக்கும். இவ்வளவு நகைகளையும் எங்கே ஒளித்து வைப்பது…!
இவ்வளவு பணத்தையும் எங்கே ஒளித்து வைப்பது..?
வைத்தாலும்
இந்த மனது என்ன செய்யும்?
எங்கேயாவது..,
“சறுக்..,” என்று சப்தம் கேட்டால் போதும். உடனடியாக முழிப்பு வந்து “பட..படா.., பட..,
படா..,” என்று துடிக்க ஆரம்பித்துவிடும்.
ஏனென்றால்,
கொள்ளை கொலை என்று இன்றிருக்கக்கூடிய உலகத்தில் நாம் எண்ணும் பொழுது இவ்வாறு நமக்குள்
வந்துவிடுகின்றது.
நிறையப்
பேர் என்ன சொல்கிறார்கள்? சம்பாரித்து வைத்த என் நகைகளைக் காணோம் என் பணத்தைக் காணோம்..,
50 பவுனைக் காணோம் என்று அலறுகின்றார்கள்.
போனால்
போகின்றது என்று அதை விடாதீர்கள்.
1.எடுத்துக்
கொண்டு போனவனுக்கு நல்ல புத்தி வரவேண்டும்.
2.யாரிடமாவது
அவன் சிக்க வேண்டும்.
3.சீக்கிரமே
போலீசில் சிக்கிவிடுவான்.
4.சிக்கிக்
கொண்டபின் நம் பணம் திரும்ப வரவேண்டும்.
5.தவறு
செய்ததை அவன் சிந்திக்க வேண்டும்.
6.தான்
செய்த தவறை உணர வேண்டும்
“இந்த
மாதிரி எண்ணி.., உங்கள் தியானத்தில் எடுத்துப் பாருங்கள்”. உங்கள் காசு வருகின்றதா
இல்லையா என்று பாருங்கள்.
இந்த
உணர்வு.., “வேகமாக” வேலை செய்யும்.
பெரும்பகுதியாவனவர்கள்
திருடு போனபின் எப்படி எண்ணுகின்றார்கள்?
உங்கள்
நகைகளை எல்லாம் எண்ணி “அய்யோ.., போய்விட்டதே.., எல்லாம் போய்விட்டதே.., போய்விட்டதே..,
என்று எண்ணினால் என்ன ஆகும்?
இப்பொழுது
அதுவும் போய்விட்டது. அன்றைய தினம் நீங்கள் சம்பாரித்த பணத்தையும் எங்கேயாவது வைத்துவிட்டு
“அதையும் காணோமே..,” என்று தேட ஆரம்பித்துவிடுவீர்கள்.
இந்தப்
பதட்டம் இப்படி வந்துவிடும்.
அதே
மாதிரி கையில் ஒரு பையை (BAG) எடுத்துச் செல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அந்தப்
பதட்டத்திலேயே அதைyum எங்கேயாவது வைத்துவிட்டு என்ன செய்வோம்?
கையில்
வைத்திருக்கின்றோம் என்ற எண்ணம் கூட வராது. நாம் எந்தச் சிந்தனையில்லாமல் வந்து விடுவோம்.
“ஐய்யய்யோ..,
என் பையை வைத்துவிட்டு வந்துவிட்டேனே..,! இதுவும் எங்கே போனதோ..,? என்ற இந்தப் பதட்டம்
கையில் இருக்கின்ற பொருளையும் விட்டுவிடச் செய்துவிடும்.
இதுவெல்லாம்
நமக்குள் எது செய்கின்றது? காரணம் என்ன? என்றால் நாம் அல்ல. நாம் தவறு செய்யவில்லை.
என்
பொருள் எல்லாம்.., “திருடு போய்விட்டதே” என்று நாம் நுகர்ந்த உணர்வுகள் நம் நல்ல சிந்தனையை
இழக்கச் செய்கின்றது.
இதைப்
போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் விடுபட நம் குருநாதர் காட்டிய வழியில் அந்த அருள் சக்திகளை
எடுத்துக் கொள்ளுங்கள்.
1.திருடிச்
சென்றவன் நல்லவனாக வேண்டும்.
2.உதவி
செய்பவனாக வர வேண்டும்.
3.பிறருக்குத்
தொல்லை கொடுக்கக்கூடாது என்ற எண்ணம் அவனுக்கு வரவேண்டும்.
4.போலீசில்
சிக்க வேண்டும்.
5.அப்பொழுது
அவனுக்கு நல்ல ஞானம் கிடைக்க வேண்டும்
என்று
இப்படிப்பட்ட உணர்வைத்தான் நாம் எடுத்துக்
கொள்ள வேண்டும். காணாமல் போன பணம் வருகின்றதா.., இல்லையா.., என்று பார்க்கலாம்.
அதையே
எண்ணி வேதனையாக எண்ணிக் கொண்டிருந்தால் “இருக்கும் பணத்தையும்” எங்கேயாவது விட்டுவிட்டு
இருப்பீர்களே தவிர வேறு ஒன்றும் இல்லை.
ஆகவே
உங்களுக்கு எல்லாச் சக்திகளையும் கொடுக்கின்றோம். “நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்”.
ஏனென்றால்,
இனி வரும் எதிர்காலத்தில் விஷத் தன்மையான உணர்வுகள் உலகம் முழுவதும் பரவப்படும் பொழுது
அதிலிருந்து “உங்களை நீங்கள் மீட்டிக் கொள்ள வேண்டும்” என்பதற்குத்தான் இதைச் சொல்கின்றோம்.
உங்களிடம்
திரும்பத் திரும்பச் சொல்லிப் பதிவாக்குகின்றோம். இந்த உணர்வுகள் எல்லாம் காற்றிலே
படர்கின்றது.
“அதை
நீங்களும் எடுத்து.., அந்த அருள் உணர்வுகளைப் பாய்ச்சி.., என் பணம் கிடைத்துவிட்டது..,”
என்று சந்தோஷப்பட்டு நீங்கள் சொல்ல வேண்டும்.
நம்
குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரைப் போன்று நீங்களும் “பிறருடைய தீமைகளைப் போக்குபவர்களாக”
மாற வேண்டும். “நல்ல சிந்தனை உள்ளவர்களாக.., மற்றவர்களையும் மாற்றியமைக்கும் சக்தி..,
நமக்கு உண்டு” என்ற நிலைக்கு வர வேண்டும்.
சோகத்திற்கும்
சலிப்பிற்கும் சஞ்சலத்திற்கும் வெறுப்பிற்கும் வேதனைக்கும் “உங்கள் உணர்வை.., உயிரிலே
மோதவிடாதீர்கள்”.
மனிதனை
உருவாக்கிய நல்ல சிந்தனைகள் கொண்டு நாம் வாழ்ந்து வந்தாலும் இந்த விஷமான உணர்வுகள்
உயிரில் மோத விடும்பொழுது “அதை மாற்றியமைத்தல் வேண்டும்”.
மாமகரிஷி
ஈஸ்வராய குருதேவர் அருளால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுவோம். எத்தகையை
தீமைகளையும் மாற்றியமைப்போம்.
நன்மைகள்
பல செய்யத் துணிவோம்,