விளக்கு பூஜையின் தத்துவம்
என்ன?
பொதுவாக நமது பெண்கள் மாலை ஆனதும் தீபம் ஏற்றி விளக்கு
பூஜை செய்கிறார்கள். இதை தவிர மாதந்தோறும் கோயில்களிலே 108 விளக்கு பூஜை 1008 விளக்கு
பூஜை என்று கூட்டு தியானம் செய்கிறார்கள்.
இப்பொழுது கோவிலில் போய் விளக்கை ஏற்றி வைத்து வணங்குகின்றார்கள்.
ஆனாலும், அதே சமயத்தில் இவர்கள் வீட்டில் என்னென்ன
கஷ்டங்கள் இருக்கின்றதோ இதை எல்லாம் போக்க வேண்டும் என்ற உணர்வை எண்ணி விளக்கை வைத்து
அந்த ஆண்டவனுக்கு இப்படி ஜெபித்து வந்தால் நன்றாக இருக்கும் என்று செய்கிறார்கள்.
வழக்கமாக விளக்கு பூஜை செய்யும்போது நீங்கள் என்ன
செய்கிறீர்கள்? புஷ்பத்தை எடுத்து அங்கே போட்டுக் கொண்டே இருப்பீர்கள்.
அந்த நேரத்தில் இதற்காக சில பேர் மந்திரத்தைச் சொல்லிக்
கொண்டு போடுவார்கள். ஆக இதனால் பலன் ஏதுமில்லை.
இதெல்லாம் பக்தி மார்க்கங்களில் ஒன்று சேர்த்து
வாழ்வதற்கு ஒர் இணைப்புப் பாலமாகத்தான் அமைகின்றனரே தவிர அவர்கள் இந்த விளக்கு பூஜையினால்
பலன் இல்லை. ஒன்று சேர்த்து வாழ முடியும்.
இந்த விளக்கு பூஜை நடந்து முடிந்த பிற்பாடு பாருங்கள்.
ஒருத்தருக்கொருத்தர் இந்த குறைபாடுகள் தான் வரும்.
ஆக குறைபாடுகளை நிவர்த்திப்பதற்கு ஏதாவது வழி இருக்கின்றதா?
இல்லை. நாம் “புற நிலைக்காக..,” விளக்கை வைத்துச் சென்றால் சரியில்லை.
நாம் பாலில் பாதாமைப் போட்டு அதிலே ஒரு துளி விஷத்தைக்
கலந்து அந்த உணவைச் சாப்பிட்டால் நம்மை இறக்கச் செய்கின்றது.
இதைப்போலத் தான் விஷத்தன்மை கொண்ட உணர்வுகளில் இருந்து
நாம் இதை விடுபடவேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?
விளக்கைப் பொருத்தியபின் அங்கிருக்கக்கூடிய பொருள்கள்
அனைத்தும் தெரிகின்றது.
விளக்கை வைத்தால் எப்படிப் பொருள் தெரிகின்றதோ..,
1.”அந்தச் சுடரைப் போல.., எல்லாவற்றையும் அறிந்திடும்..,
அருள் உணர்வுகள்” நாங்கள் பெறவேண்டும்.
2.விஷத்தன்மையை வென்ற மகரிஷிகளின் அருள் சக்திகளைப்
பெறவேண்டும்.
3.எங்களை அறியாது வரும் இருள்களை நீக்கிடும் அருள்சக்தி
நாங்கள் பெறவேண்டும்
என்று இப்படித்தான் எண்ணுதல் வேண்டும்.
ஏனென்றால், நாம் வாழ்க்கையின் நிமித்தம் செல்லும்
பொழுது நம்மை அறியாமல் நம் சந்தர்ப்பங்கள் உண்மை நிலைகளை அறியவிடாது மறைத்து விடுகின்றது.
அப்பொழுது நமக்குள் இருள் சூழ்ந்து நாம் செய்வதறியாது சிந்தனை குறைகின்றது.
இருள் சூழச் செய்யும் அத்தகைய நிலைகளை நாம் மாற்றுவதற்குத்தான்
ஞானிகள் சாதாரண மனிதனும் புரிந்து கொள்ளும் வண்ணம் இதை உருவாக்கினார்கள்.
1.சிந்தனை குறையும் நிலைகளிலிருந்து நம்மை மீட்டிக்
கொள்ளவும்
2.சிந்தித்துச் செயல்படும் திறனை வளர்க்கவும்
3.மனிதர்கள் தம் வாழ்க்கையில் தெளிந்து தெரிந்து
தெளிவான வாழ்க்கை வாழ்ந்திடும் ஆற்றல் பெறுவதற்காகத்தான் விளைக்கைக் காட்டினார்கள்.
ஆகவே விளக்கைக் காட்டும் பொழுது நாம் எண்ண வேண்டியது
எது?
1.பொருளறிந்து செயல்படும் சக்தி நாங்கள் பெற அருள்வாய்
ஈஸ்வரா
2.எங்கள் குடும்பத்தில் அனைவரும் பொருளறிந்து செயல்படும்
சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா
3.இந்த ஆலயம் வருவோரெல்லாம் அந்த நிலை பெற அருள்வாய்
ஈஸ்வரா.
இந்த அருள் ஒளியின் சுடரை நாம் நமக்குள் பெருக்கும்
பொழுது வாழ்க்கைப் பயணம் இனிதாகின்றது. வழியறிந்து செயல்படும் ஞானம் கிடைக்கின்றது.
அந்த ஞானம் கிடைக்கும் பொழுது அருள் செல்வத்தால்
என்றுமே மகிழ்ந்து வாழ முடியும். மற்றவர்களுக்கும் நாம் தெளிந்திடும் ஞானத்தை ஊட்ட
முடியும்.
மக்கள் அனைவரும் ஞானத்தால் வெறுப்பை மறந்து அரவணைத்து
ஒன்று சேர்ந்து வாழும் அருள் சக்தி பெற முடிகின்றது.
இவ்வாறு தெய்வீக அன்பையும், தெய்வீகப் பண்பையும்
ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்று எண்ண வைத்தார்கள் ஞானிகள்.