சாஸ்திரம் என்பது மெய்
– சாஸ்திரப்படி நாம் வாழ்கின்றோமா…? சற்று சிந்தித்துப் பாருங்கள்
விநாயகனைப் பார்க்கும் போது அந்த மகரிஷிகளின் அருள்
ஒளியைத் தனக்குள் வினையாகச் சேர்க்க வேண்டும் அதுவே தனக்குள் விதியாக இருந்து ஒன்றி
வாழும் நிலையாகத் தனக்குள் முழுமை பெறவேண்டும் என்ற இந்த உணர்வை அன்று சாஸ்திரங்களாக
ஞானிகள் உருவாக்கினார்கள்.
சாதாரண மக்களும் இதைப் பெறும் நிலையாக திரும்பும்
பக்கமெல்லாம் விநாயகனைக் காட்டி நமக்குள் அதைப் பதியச் செய்துள்ளார்கள். நாம் ஏற்றுக்
கொண்டோமா?
விநாயகரோ, முருகனோ சரஸ்வதியோ, இலட்சுமியோ இராமனோ,
கிருஷ்ணனோ அனைத்தும் சாஸ்திரத்தில் உண்மை.
ஈசன் என்று சொல்வது நமது உயிர் ஈஸ்வரனாக இயக்குகின்றது.
சாஸ்திரப்படி உண்மை. நமக்குள் இயக்கிக் கொண்டிருக்கும் உணர்வின் தன்மை கொண்டு உயிருக்குள்
வெப்பமாவது விஷ்ணு சாஸ்திரப்படி உண்மை.
வெப்பத்தின் இயக்கத்தால் ஈர்க்கும் காந்தங்களாக
வரும் இந்த நிலை நமக்குள் இலட்சுமி – கவரும் சக்தி கொண்டு காந்தம், என்ற நிலைகளைக்
காட்டினார்கள் ஞானிகள்.
மனிதனாக உருவான பின் கண்ணுக்குள் இருக்கும் கருவிழி
மற்றொன்றை இழுத்துத் தனக்குள் பதிவு செய்வது ருக்மணி சாஸ்திரப்படி பெயரை வைத்தான் ஞானி.
அந்தக் காந்தப்புலனால் கவர்ந்திடும் இந்த நிலையை
சாஸ்திரப்படி சத்தியபாமா.
எவர் தவறு செய்தாலும் எப்பொருளைப் பார்த்தாலும்
இந்த உணர்வின் அலைகளைத் தனக்குள் ஆன்மாவாக மாற்றி நாம் நுகரும் உணர்வுகள் உயிரிலே பட்டு
அந்த உணர்வின் அலையாக நமக்குள் உண்மையைச் சொல்கிறது சத்தியபாமா.
உண்மையைத் தனதாகக் காட்டுகின்றது. தனக்குள்ளே உணர்த்துகின்றது
என்று காராணப் பெயரை வைத்தானே
அதெல்லாம் கடவுள் அல்லவா…?
நமக்குள் கண்கள் – கண்ணனாக இருந்து இதனின் உணர்வைக்
கண் கவர்ந்து நாம் சுவாசித்து உயிருடன் இயக்கப்படும் பொழுதுதான் கண்ணன் தான் சங்கநாதம்
ஊதியபின் தான் குருக்ஷேத்திரப் போரே.
எதனின் நிலையை நாம் நுகர்கின்றோமோ நமக்குள் பதிவு
செய்த நல்ல எண்ணங்களுக்கும் நல்லவை ஆகும் போது அந்த மகிழ்ச்சியின் நிலைகள் அதற்குள்
மகிழ்ச்சியாகின்றது.
மாறுபட்ட நிலையாகி எதிர் நிலையாகும் போது போர் முறையே
வருகின்றது. நமக்குள் மனக் கலக்கமும் வருகின்றது என்று காட்டினானே சாஸ்திரத்தில் அது
பொய்யா…?
இவர்கள் சொல்கிற மாதிரி
1.கண்ணன் திருடன் என்றும் பல லீலைகள் ஆடுகின்றான்
என்றும் இந்தச் சாஸ்திரங்களைத் தலைகீழாக மாற்றிச் சொல்லி
2“கண்ணன் எனக்குச் சொந்தமானவன்.., என்றும் “வட கிளை..,
தென் கிளை..,” என்ற நிலைகளும்
3.பார்த்தசாரதிக்கு நைவேத்தியம் செய்தேன்…, சாங்கியங்களைச் செய்தேன்..,
அதனுடைய நிலைகள் இருப்பது அந்தக் கண்ணன் அந்தச்
சாஸ்திரம் அது பொய்யா…? அது மெய்யா…? என்று சிந்தித்துப் பாருங்கள்.
அண்டத்தின் நிலைகள் இந்தப் பிண்டத்திற்குள் எவ்வாறு
இயக்குகிறது என்றும் ஒவ்வொரு சரீரத்திலேயும் சேர்த்துக் கொண்ட நம்மை மீட்டிக் கொண்ட
வினைகளுக்கெல்லாம் நாயகனாக இந்த மனித உடலை உருவாக்கியது “இந்தக் கணங்களுக்கெல்லாம்
ஈசனாக.., (கணேசா) இருந்தது உயிர்” என்று அவன் சாஸ்திரத்தை
வகுத்தானே அது பொய்யா…?
சூட்சமமாக மறைந்திருக்கும் சக்தியின் நிலைகள் உடலாக
உறைந்தது “சிவம்” என்று சொன்னானே அது பொய்யா…?
நாம் எண்ணும் எண்ணம் எதுவாக இருந்தாலும் விஷ்ணுவான
உயிர் தனக்குள் கவர்ந்து கொண்ட காந்தம் இலட்சுமி கவர்ந்து அந்த உயிருடன் இயக்கப்பட்டு
சுழலின் நிலைகளில் அந்த எண்ணத்தை ஜீவ அணுவாக உருவாக்குவதை “விஷ்ணுவின் மகன் பிரம்மா” என்று சொன்னானே.., அந்தச் சாஸ்திரம் பொய்யா…?
அந்த உணர்வின் சக்தி ஜீவ அணுவாகி உயிருடன் ஒன்றி
இயக்கி உடலாககச் சிவமாக மாற்றினானே, இது பொய்யா…?
நன்றாக இதைச் சிந்தித்துப் பாருங்கள்.
புழுவிலிருந்து மனிதனாகத் தோன்றும் வகையிலும் நம்
உடலிலுள்ள காந்தப்புலன் தன்னுடன் இணைத்து கண்ணுக்குள் இருந்த காந்தமும் அதனுடன் இணைந்த
உணர்வின் தன்மை நமக்குள் இயக்கி அந்த உணர்வின் சத்தாக நமக்குள் உணர்த்தி இயக்கியதே
“பார்த்தசாரதி” என்றும் தனக்குள் எடுத்துக்
கொண்ட உணர்வின் தன்மை “கண்ணன் அர்ச்சுனனுக்கு உறுதுணையாக இருந்தான்.., வித்தைகளைக்
கற்றுக் கொடுத்தான்..,” என்று சாஸ்திரத்தைச் சொன்னானே.., அது பொய்யா…?
வட கிளை தென் கிளை என்று பார்த்தசாரதி கோவிலில்
நாங்கள் சொல்வதுதான் உண்மை நீங்கள் சொல்வதுதான் உண்மை யானைக்கு எப்படி நாமமிட வேண்டும்
என்று கோர்ட்டில் கேஸ் போட்டார்கள்.
அந்தக் கடவுள் என்ன ஆனது?
இவர்கள் கடவுளுக்காக வேண்டி வாதாடுகின்றார்களே..!
கடவுள் இவர்களுக்கு உண்மையின் நிலையை உணர்த்துகின்றாரா…? அல்லது கடவுளுக்காக வேண்டி வாதாடுகின்றார் என்றால்.., “கடவுளைக்
காட்டிலும் இவர்கள் பெரியவர்களா…!
நமக்குள் (உள்) நின்று நாம் எண்ணிய உணர்வின் தன்மை
எவ்வாறு இயக்குகின்றது என்று சாஸ்திரத்தைக் காட்டினானே அது பொய்யா…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.
இதையெல்லாம் மதங்களாக்கப்பட்டு மதங்களின் அடிப்படையில்
கொண்டு வாழ்க்கையை உயர்த்திட வேண்டும் என்று வாழ்ந்தாலும்
1.எத்தனை காலம் நீ வாழ்ந்திடப் போகின்றாய்?
2.அப்படி வாழ்ந்தவர்கள் எத்தனை பேர் இன்று இருக்கின்றார்கள்?
3.பிறரைப் பழித்தோ பிறரை அழித்தோ பிறரை இம்சித்தோ
தனக்குச் செல்வத்தைச் சேர்த்தவர்கள் “எத்தனை கோடிப் பேர்.., இருக்கின்றார்கள்…? வாழ்கின்றார்கள்…?
தெய்வத்தின் பெயரால் மற்றவர்களுக்குத் தீங்கு விளைவித்து
மடாதிபதிகள் என்ற பெயரால் செய்து இன்று எத்தனை மடாதிபதிகள் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்…?
பல நிலைகள் தனக்குள் மதத்தின் அடிப்படையில் சுகங்களைத்
தேடினாலும் மக்களுக்கு நீ என்ன சேவை செய்தாய்…?
உண்மையினுடைய நிலைகளை எதை நீ உணர்த்தினாய்…?
ஆக சாஸ்திர விதிகளின் தன்மை கொண்டு தனக்கு மாறாக
நடந்தால்.., அவனைக் கொன்று புசிக்கத்தான் மடாதிபதிகளால் முடிந்ததே தவிர “அவனை வாழ வைக்கும்
வழி இல்லை”.
அரச காலங்களில் கொடுத்த அந்த நிலைகளைத் தனக்கென்று
சாதகப்படுத்தி மக்களுக்கு இன்று உணர்த்த நிலைகள் கொண்டாலும் விஞ்ஞான அறிவு கொண்ட நிலைகளில்
மடாதிபதிகள் மக்களுக்கு ஆக வேண்டி என்ன செய்தார்கள்?
இதைச் சற்றுச் சிந்தித்துப் பார்த்தோமா…? உலகெங்கிலும் இந்த நிலைதான். நான் பெரிதா…? நீ பெரிதா…?
என்று ஆட்சி புரிவதில் சண்டை வரும்.
இன்று கோவில்களில் “நான் பெரியவன்.., நீ பெரியவனா..,!”
என்னுடைய ஆட்சிதான் இருக்கும் என்று அங்கேயும் தகராறு.
ஆலயங்களில் எவன் வலு பெற்றதோ அவனின் நிலைகள் கொண்டுதான்
அர்ச்சனைகள் செய்வதோ அபிஷேகங்கள் செய்வதோ எல்லாமே.
எல்லா ஆலயங்களிலும்.., இதே நிலை தான்.
ஆண்டவன் என்று யார் மதித்தோமோ அந்த ஆண்டவனைப் பழித்திடும்
நிலையாக நம்முடைய செயல்கள் அமைந்து கொண்டிருக்கின்றது.
ஞானிகள் மக்களைக் காப்பதற்காகக் காட்டிய நிலைகளைத்
தன் சுகபோகத்திற்காக மெய்ப் பொருளை அழித்துவிட்டு இன்று உலகெங்கிலும் தீமைகளை விளைவிக்கும்
நிலைகளே உருவாகிவிட்டது.
மகான்களைப் போற்றித் துதித்தாலும் அந்த மகான்களுடைய
நிலையைத் “துளி அளவாவது..,” நமக்குள் எடுத்து மனிதனைக் கடவுளாக உருவாக்கப்பட்டது அவனை
மதிக்க வேண்டும் என்ற நிலைகள் வேருடன் புதைந்துவிட்டது. மறைந்துவிட்டது.
ஞானிகள் காட்டிய அருள் வழிகளை நம் உடலுக்குள் நம்
காந்தம் கவர்ந்த உணர்வின் செயலாக நாம் அறிந்தாலும்.., “அந்த அறிவின் ஞானம் அனைத்தும்
மகா சரஸ்வதி..,” என்று மனிதனின் அறிவிற்குள் ஞானம் வளர்ந்தது என்று சொன்னானே அது பொய்யா…?
கவர்ந்து கொண்ட உணர்வனைத்தும் படைக்கும் திறன் பெற்றது
பராசக்தி. மனிதனுக்குள் அனைத்தும் உணர்ந்து ஒவ்வொன்றும் உருவாகும் ஆற்றல்மிக்க இச்சக்தி
“நமக்குள் பராசக்தியாக வீற்றிருக்கிறது”
என்று சொன்னானே அது பொய்யா…?
இவ்வாறு உருவாக்கும் நிலைகள் கொண்டு நம் ஆறாவது
அறிவு மாற்றியமைக்கும் திறன் கொண்டதும் “பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன்” மனிதனின் ஆறாவது அறிவு கொண்டு உலகையே படைத்திடும் நிலையும்
ஒவ்வொன்றயும் புதிதாகச் சிருஷ்டிக்கும் தன்மை பெற்றது மனிதனின் அறிவு.
அத்தகையை மனிதனின் அறிவின் தன்மையை – நமக்குள் கடவுளாக
இருக்கும் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு இன்று எதைச் சிருஷ்டிக்கின்றோம்?
சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்?
கொலை செய்யும் உணர்வுகளைச் சிருஷ்டிக்கின்றோம்.
மற்ற மதத்தை உருவாக்கி மற்ற மதத்தை அழித்திடும் உணர்வை மனிதனுக்கு மனிதன் போர் செய்யும்
நிலைகளும் மனிதனுக்கு மனிதன் அழித்திடும் நிலைகளைத்தான் நாம் உருவாக்கியுள்ளோம்
1.நம் ஆறாவது அறிவின் துணை கொண்டு மனிதனை மனிதனாக
மதித்து நடக்க வேண்டும்.
2.மனிதனின் வாழ்க்கையில் மனிதனாகப் பிறந்த நிலைகளை
மதிக்க வேண்டும்
3.இந்த உடலை விட்டு நாம் சென்றபின் நாம் எங்கே செல்ல
வேண்டும் என்பதற்காகத்தான் அந்த ஞானிகள் இத்தனை சாஸ்திரங்களையும் உருவாக்கினார்கள்.
4.மக்கள் அனைவரும் அந்த எல்லையை அடைய வேண்டும் என்று
தான் வழி காட்டியுள்ளார்கள்.
5.விநாயக தத்துவத்தில் காட்டியபடி நாம் மகரிஷிகளின்
உணர்வை நமக்குள் வினையாகச் சேர்க்க வேண்டும்.
6மகரிஷிகளின் அருள் உணர்வைத் தனக்குள் விளைய வைக்க
வேண்டும்.
7.மகரிஷிகளின் அருள் உணர்வை விளைய வைத்தால் அதன்வழி
நம் வாழ்க்கையில் வந்த எத்தகைய இருளையும் போக்கிட முடியும்.
8.மெய்ப் பொருளைக் காண முடியும் மெய் ஒளி பெற முடியும்.
ஆகவே, நாம் அனைவரும் ஞானிகள் காட்டிய சாஸ்திரத்தைக்
கடைப்பிடிப்போம்.