பங்குனி உத்திரம் முருகனுக்கு உகந்த நாள் என்றும் தேரோட்டம் வைத்திருப்பார்கள்.
ஆறாவது அறிவின் தன்மை கொண்டு உத்தராயணம் என்றும் நிலையாக என்றுமே ஒளி நிலை பெற
நினைவுபடுத்தும் நாள் தான் அது.
பல ஆயிரம் பேர் சேர்ந்து தேரை இழுப்பது போல நாம் பல ஆயிரம் பேர் ஒன்று கூடி ஆறாவது
அறிவின் தன்மை கொண்டு உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நிலை கொண்டோரின் நிலைகளை நாம்
எண்ணி எடுக்க வேண்டும்.
அன்றாட வாழ்க்கையில் நாம் பல தரப்பட்ட மனிதர்களைப் பார்க்கின்றோம், அவர்களைப்
பற்றி நாம் அறிய நேர்கின்றது. அவர்களுடைய எண்ணங்கள் நமக்குள் இருக்கின்றது.
1.இந்த ஆறாவது அறிவால் நாம் வலம் வந்து
2.பலருடைய எண்ணங்கள் நமக்குள் இருந்தாலும்
3.உயர்ந்த ஞானியின் உணர்வை நமக்குள் கவர்ந்து
4.நமக்குள் செயலாக்க வேண்டும் என்ற நிலைக்குத் தான் இந்தத் தேரோட்டம்.
ஏழாவது நிலை அடைந்த அந்த மகரிஷிகளால் உருவாக்கப்பட்டுத் தன் உடலிலே ஒளியாக மாற்றிய
உணர்வுகள் இன்று நம் பூமியில் உள்ளது.
அதை நாம் அனைவரும் பருகும் நாளாக வைக்கப்பட்டது தான் பங்குனி உத்திரம். இதைக்
காவியங்களாகத் தீட்டி கந்த புராணத்தில் காட்டினார்கள் ஞானிகள். காலத்தால் அது மறைக்கப்பட்டு
விட்டது.
இன்று காவடி ஆட்டங்கள் ஆடி பல இடங்களிலிருந்து அபிஷேகத் தீர்த்தங்களும் எடுத்து
வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்தால் அதை மெச்சி நமக்குச் செய்வான் என்று எண்ணுகின்றோம்.
ஊருக்கு ஊர் ஒவ்வொரு இடத்திலும் தாளங்களுடன் காவடி ஆட்டங்கள் ஆடி
1.நான் முருகனுக்காக வேண்டியுள்ளேன்.
2.“என் கடமைகளைச் செய்ய உள்ளேன்..,” என்று பிறரிடம் யாசித்து
3.அந்த உணர்வின் தன்மை கொண்டு ஆலயத்திற்குச் செல்லும் மார்க்கமாகத்தான் வைத்துள்ளார்கள்.
நமக்குள் அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை எடுத்தால் அது உத்தராயணம்…, உத்திரம்.
சூரியன் எவ்வாறு அது ஒளிச் சுடராக இருக்கின்றதோ இதைப் போல ஒவ்வொரு உயிரும் தான்
வளர்த்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு அந்தந்த உடலிலே விளைந்த உணர்வுகளை நாம் ஒருக்கிணைந்து
சேர்க்கப்படும் பொழுதுதான் ஒளியின் சுடராக நம் உணர்வுகள் ஒன்றி வருகின்றது.
சூரியன் 27 நட்சத்திரங்கள் உமிழ்த்துவதையும் நவக்கோள்கள் உமிழ்த்துவதையும் அது
கவர்ந்து அதிலுள்ள நஞ்சினைப் பிரித்து ஒளிச் சுடராக மாற்றுகின்றது.
இதைப் போல் தான் நம் உடல் நஞ்சினை மலமாக மாற்றி அந்த உணர்வின் தன்மை தெளிந்த
நிலைகள் கொண்டு தீமைகளை அகற்றிடும் எண்ணங்களாக வளர்ந்து வந்தது.
அங்கே பால்வெளி மண்டலமாக அமைத்த நட்சத்திரங்களைப் போன்று நம்முடைய எண்ணத்தால்
நமக்குள் தீமைகள் வராது அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் “பால்வெளி மண்டலங்களாக” அமைத்திட வேண்டும்.
அப்படி மகரிஷிகளின் உணர்வைப் பால்வெளி மண்டலமாக மாற்றிக் கொண்டால் தீமையின் நிலைகளை
அது விழுங்கிவிடும்.
நமக்குள் வரும் பொழுது தெளிந்த நிலையாக மாற்றி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றும்
நிலை தான் உத்தராயணம் என்பது. “பங்குனி உத்திரம் – உச்சம்”.
ஆகவே ஞானிகள் எவ்வாறு நிலை கொண்டு இன்று விண் வெளியில் சுழன்று கொண்டுள்ளார்களோ
அவருடன் நாம் இணைய வேண்டும்.