பத்திரிக்கை வாயிலாகவோ டி.வி. மூலமாகவோ ஒருவர் பஸ்ஸிலே சென்று கொண்டிருக்கும்போது
இத்தகைய ஆக்சிடன்ட் ஆனார் என்று அதனின் உணர்வினைப் பதிவு செய்து கொள்கின்றோம்.
பதிவு செய்து கொண்ட பின் நாம் பஸ்ஸிலே செல்லும்போது இதனுடைய உணர்வே அதிகரிக்கிறது.
அதிகரித்த உணர்வு கொண்டு நாம் டிரைவரை உற்று நோக்குகின்றோம்.
அப்படி உற்று நோக்கினோம் என்றால் அவரின் எண்ணத்தில் அதிகரித்து நாம் டிரைவரை
உற்று நோக்க நமக்குத் தக்கவாறு டிரைவரின் உணர்வின் தன்மை “தன்னுடைய ஸ்டியரிங்கைத் திருப்ப
வைத்துவிடும்”.
பின் நாம் எதை அஞ்சி இருந்தோமோ நாம் எண்ணியது போல அங்கே நிறைவேற்றி ஆக்சிடண்ட்
ஆகும்.
அந்த ஆக்சிடண்ட் ஆகும்போது நாம் எதை எண்ணி வலுப் பெற்றோமோ அதன் நிலை கொண்டு
1.மற்றவர்களுக்கு அடி இருக்காது.
2.நாம் எதைப் படித்து அல்லது பார்த்து இப்படி ஆக்சிடென்ட் ஆனது என்று பயந்தோமோ
3.அப்பொழுது நுகர்நது கொண்ட அந்தப் பய உணர்வு அதற்குத் தக்கவாறு விபத்து ஏற்படுவதும்
4.நமக்குக் காயங்கள் ஏற்படுவதும் இருக்கும்.
குழந்தைகள் ஓன்றும் அறியாத நிலையில் இருக்கும்போது எத்தகைய ஆக்சிடண்ட் நடந்தாலும்
“குழந்தைகள் தப்பி விட்டது” என்று சொல்வார்கள் இதைப் பார்க்கலாம்.
ஒரு சமயம் திண்டுக்கலில் இரயில்வே நிலையத்தில் நான் (ஞானகுரு) நின்று கொண்டிருக்கும்
போது அங்கே ஒரு அம்மா ஒரு குழந்தையை எடுத்து தண்டவாளத்தைத் தாண்டுகின்றது.
கண்ணிலே பார்க்கிறேன்.
அப்போது குருவும் (மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்) கூட இருக்கின்றார். இரண்டு பேரும்
சேர்ந்து நடந்தே தான் அங்கே வருகின்றோம்.
அப்பொழுது குருநாதர் காட்டுகின்றார். இந்தப் பெண்ணின் இயல்பின் வழி இதனின் உடலில்..,
“விபத்தால் இறந்த ஆன்மா உண்டு”. அது அழைத்துச் செல்வதைப் “பார்” என்றார். இதைக் கண்ணுற்றுப்
பார்… என்று காண்பிக்கின்றார்.
அதாவது ஒரு அச்சத்தால் ஆக்சிடண்ட் ஆனதைப் பார்த்தபின் இது உடலிலே பட்டபின்
1.இதற்கு இரயில் வருவது தெரிகின்றது.
2.இரயிலைக் கடந்து செல்ல அதே ஈர்ப்பின் தன்மைக்குக் கொண்டு வருகின்றது (அந்த
விபத்தால் இறந்த ஆன்மா).
3.கொண்டு வந்த பின் அது எவ்வாறு அடிப்பட்டதோ அதே நிலையில் கொண்டு சுக்கு நூறாக
அந்த அம்மாவின் தசைகள் சிதைந்து விட்டது.
4.இது சிதைந்த நிலையில் இது உடலில் இருந்த இது நுகர்ந்த உணர்வுகள் “அதனுடைய சரீரத்தையும்…”
காட்டுகின்றார் எமது குருநாதர்.
அதற்கு முன் அடிபட்ட இந்த உணர்வுகள் இதற்குள் பட்டபின் அது எப்படி அஞ்சி உடல்
பதறியதோ…, ஏனென்றால் வண்டி வருவதும் தெரிகின்றது. பதட்டத்தின் விபத்தின் ஈர்ப்பு நிலைகள்
எப்படி ஊடுருவிச் செல்கின்றது பார் என்றார்.
ஆனாலும் அது கையில் வைத்திருக்கும் அதன் குழந்தை தண்டவாளத்தின் நடுவிலே விழுந்து
விடுகின்றது. இதை கண்ணுற்று பார்க்கச் சொன்னார்.
காரணம் இதனுடைய பிழையின் நிலைகள் இவ்வாறு இருக்கும். அதன் உணர்வின் செயல்கள்
எவ்வாறு இயக்குகிறது என்ற நிலையை உற்றுக் காண்பிக்கின்றார். ஏனென்றால் இது உங்களுக்கு
1.குருநாதர் உற்று நோக்கி
2.உணர்வின் இயக்கங்கள் எவ்வாறு? என்று
3.தெளிவாகக் காட்டியதைத்தான் உங்களிடம் அப்படியே நான் சொல்கின்றேன்.
குருநாதர் இதை நான் கண்டுணரவேண்டும் என்பதற்காக… என்னை வேக வேகமாக.., அவசரமாக…
அழைத்துக் கொண்டு வருகிறார்.
அதைப் பார்க்கப்படும் போது இதனுடைய உணர்வுகள் எப்படி இயங்குகிறது என்ற காண்பிக்கின்றார்.
அது எவ்வாறு அந்த உணர்வுகளை இயக்குகிறது என்ற நிலையும் காட்டுகின்றார்.
அப்பொழுது நான் குருநாதரிடம் கேட்டேன். அதே நிலையில் “அந்த அம்மாவைக் காக்க கூடாதா...!”
என்று கேட்கிறேன்.
அப்பொழுது குருநாதர் சொல்கிறார்.
1.அதனின் உணர்வின் செயலாக அது செல்கின்றது.
2.இருப்பினும் அது அதனுடைய உயிரான்மா அது வெளிச் செல்கின்றது.
3.எதைச் செய்தாலும் அந்த ஆன்மா இன்னொரு உடலுக்குள் புகத்தான் செய்யும்.
4.அந்த ஆன்மா இந்த உடலில் புகுந்தது போல இன்னொரு உடலில் புகுந்து அதைச் செய்யும்.
ஆனால் அந்த உடலில் இருக்கும்போதே அந்த ஆன்மா அந்த உடலின் தன்மை “எந்த ஆன்மாவத்
தனக்குள் மாற்றிக் கொள்கின்றதோ.., அதைத்தான் அது மாற்ற முடியுமே தவிர… நான் மாற்றுவேன்…
நீ மாற்றுவாய்…,” என்று இல்லை.
அது தாயின் கருவில் இருக்கும்போது இத்தகைய மாற்றத்தின் நிலைகள் கொண்டு தாய்..,
தன் எண்ணத்தால் “காத்திட வேண்டும்..,” என்று உயர்ந்த ஞானியின் தத்துவத்தை அது எடுத்திருந்தால்
அதன் உடலிலே இந்த உணர்வின் தன்மை உடலிலே பதிவாகி இருந்தால் “இன்று அதைக் காக்கும்”.
இன்று நீ அதைச் செய்ய முடியாது என்ற இந்த உண்மையையும் தெளிவாகக் காட்டுகின்றார்.
ஆகவே அப்படியே நீ இன்று செய்ய வேண்டும் என்றாலும் அது உனக்கு முன் இது காத்து
இந்த உணர்வின் செயலாகப்படும் போது எதிர்மறையாகி இதைக் காத்திடும் நிலையும் வரும்.
1.அது உன்னிடம் கேட்டிருந்தாலோ
2.அல்லது என்னிடம் பேசியிருந்தாலோ
3.உணர்வின் தன்மை பெற வேண்டும் என்று ஏங்கியிருந்தாலோ
4.இந்தப் “பதிவின் தன்மை” இருந்தால் தான்… அதைக் காக்க முடியும்.
இதையெல்லாம் தெளிவாக எடுத்துக் காட்டினார்.
இன்று நம்மில் அதிக பேருக்கு நாம் விபத்தில் சிக்குவது ஏன்? ஏன் அதைக் காப்பாற்ற
முடியாதா… தடுக்க முடியாதா…! நீங்கள் கேள்விகள் கேட்பது போன்று தான் நானும் குருநாதரிடத்தில்
அந்த இடத்தில் கேள்வியைக் கேட்டேன்.
விபத்தாகிறது என்று நீங்கள் அறிந்து கொண்டீர்கள். உணர்வின் தன்மையைக் காட்டுகின்றீர்கள்.
இதை ஏன் நீங்கள் காக்கக் கூடாது? “காக்க வேண்டும் அல்லவா…” என்று குருநாதரிடம் கேட்டேன்.
1.காப்பது நாம் அல்ல...
2.அறிந்து கொள்ளும் நிலைகள் வரும். தன்னைக் காத்துக் கொள்ள முடியும்.
3.அவர்களைக் காத்துக் கொள்ளவேண்டும் என்றால் அந்த உணர்வின் தன்மை அதற்குள் “அவர்கள்…
பதிவாக்கியிருக்க வேண்டும்”.
4.தாயின் நிலையிலே அது பதிவாகியிருக்க வேண்டும்.
5.வாழ்க்கையில் இது போல் ஞானிகளுடன் யாராவது நல்ல வாக்கினை கொடுத்தால் அந்த “வாக்கு”
காக்கும்.
இதைத்தான் அங்கே தெளிவாகக் காட்டினார்.
அந்தக் குழந்தை அறியாத தன்மையிலிருப்பதால் இதனுடைய நிலைகளும் அதற்குத் தெரியாது.
நடுத் தண்டவாளத்தில் கடந்து சென்ற பின் அந்த உணர்வின் தோற்றமும் மற்ற நிலைகளும் அதற்கு
எந்த ஆபத்துமில்லை.
ஏனென்றால், அந்தக் குழந்தை அடிபட்டு இறந்த இந்தத் தாயின் கருவிலே இருக்கப்படும்
போது அந்தக் குழந்தை ஞானிகளுடைய நிலைகளையும் அது கேட்டுணர்ந்த உணர்வுகளில் பதிவானது.
சிறிது யாசகத்திற்காக வேண்டி ஒரு மந்திரவாதி தான் ஆனாலும், (அவர்) நான் மந்திரவாதி
என்று சொல்ல முடியாது.
சாது என்ற நிலைகள் அவர் வரப்படும் போது இந்தத் தாயும் அப்படி எண்ணியதால் தக்க
தருணத்தில் குழந்தை கருவாக இருக்கப்படும்போது அவர் யாசிக்கும் போது அதைக் கொடுத்தது.
அப்படிக் கொடுத்த உணர்வுகள் அந்தக் கருவில் இருக்கும் குழந்தைக்கு உதவியிருக்கின்றது.
ஆக குழந்தை காப்பாற்றப்பட்டது.
ஆனால் அதே சமயத்தில் அந்த மந்திரவாதி எந்தக் கருவின் தன்மை உருவாக்கினாரோ அந்த உணர்வின் தன்மை “தனக்கு வேண்டிய
உணர்வை” அது எடுத்துக்கொண்டது.
சொல்வது உங்களுக்கு அர்த்தமாகின்றதா….?
ஒரு உடலின் நஞ்சைப் பிரித்தெடுத்து உணர்வின் தன்மை சக்தி பெற்றதோ அந்தச் சக்தியின்
தன்மை கொண்டு இவர் ஆசிர்வாதம் கொடுத்தது தாயிற்கு ஊழ்வினையாகின்றது. ஆனால் அவர் கொடுத்த
சக்தி கருவுக்குள் இருந்து குழந்தையைக் காத்தது.
அதே சமயம் இதனை எடுத்துக் கொண்ட நிலைகள் “எதை.., மந்திர ஒலிகள் கொண்டு எடுத்தாரோ…
இது மந்திரவாதியைப் போய்ச் சேரும்”.
இது “அலறிய உணர்வுகள்” கொண்டு இங்கே எடுத்துத் தன் வலுவின் தன்மை கொண்டு “எவ்வாறு
செய்கிறார்” என்ற நிலையும் இதையும் விவரித்துக் காட்டினார்.
ஒரே செயலில்… “எத்தனை நிலைகள் பொருந்தியுள்ளது” என்பதை எமது குருநாதர் காட்டிய நிலைகள் கொண்டுதான் சொல்கின்றோம்.
நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்.
ஏனென்றால் நாம் யாரும் தீங்கு செய்யவில்லை. சந்தர்ப்பத்தால் பிறரைப் பார்க்கும்
உணர்வுகள் நமக்குள் எவ்வாறு பதிவாகின்றது. பதிவான உணர்வின் தன்மை அந்தந்தப் பதிவுக்குத்
தக்கவாறு தான் இயக்கம் இருக்கும்.
1.குழம்பில் எவ்வாறு அதிகம் காரமாகிவிட்டால் காரத்தின் சுவையாகவும்,
2.உப்பு அதிகரித்து விட்டால் உப்பின் சுவையாகவும் மாறுவது போன்றுதான்
3.நமது வாழ்க்கையில் எதனின் உணர்வுகள் (அதனின் பதிவு) “முன்னிலையில்” அதிகரிக்கின்றதோ
4.அதனின் செயலாக நம் உணர்வின் தன்மையை மாற்றி அதனின் இயக்கமாக நம்மை இயக்கிவிடுன்றது.
5.இதிலிருந்து மனிதர்கள் ஒவ்வொருவரும்… “எவ்வாறு மீள வேண்டும்….” என்றுதான் இதைக்
காட்டினார்.
குருநாதர் அவருடனே என்னை அழைத்துச் சென்று ஒவ்வொரு நிலைகளிலும் தெளிவாகக் காட்டியதைத்தான்
இங்கே கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.