இன்று ஒருவர் லேசர் (LASER) கதிரியக்கத்தால் மற்றவரை ஆழம் கண்டு
அவனைத் தொலைத்துவிடவேண்டும் என்று எண்ணுகின்றார்.
மற்றொருவரோ நீ எனக்குள் கண்டுபிடித்த விஷத்தின் தன்மை என்னிலே உண்டு. நான் சாகப்படும்
போது நீயும் சாவாய் என்ற நிலைகள் கொண்டு சிந்தனையற்ற நிலைகளில் செயல்படுகின்றார்.
தான் இறப்பதைப் பற்றிச் சிந்திக்கவில்லை.
தன்
கௌரவத்தைக் காக்க
நான் இறந்தாலும் உன்னைக் கொல்வேன்.
உன்னை மடியச் செய்வேன்.
நான் இறப்பதாக இருந்தால் உன்னை மடியச் செய்தபின் தான் நான் இறப்பேன் என்ற
மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் இன்று உலகெங்கிலும் இதைப் போன்று பரவிவிட்டது.
மனிதனென்ற சிந்தனை இழந்து
மனிதன் நாம் அடையும்
மார்க்கத்தைத் தடைப்படுத்தி
மனிதர்களையெல்லாம் கொன்று ரசிக்கும் உணர்வுகளே
இன்று பெருகி வருகின்றது.
இது போன்ற நிலைகளிலிருந்து நாம் எல்லோரும் மீள்வதற்குத்தான் இதையெல்லாம்
உபதேசிக்கின்றேன்.
நான் பேசுகின்றேன் என்று எண்ண வேண்டாம்.
இது
எனக்குத் தெரியவே தெரியாது.
மாமகரிஷி ஈஸ்வரபட்டாய
குருதேவர் அருளால் அந்த மகரிஷிகள் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை மக்களுக்கு எட்ட வேண்டும். மக்கள் அனைவரும்
தீமைகளிலிருந்து விடுபடவேண்டும் என்ற நிலையில் தான் திரும்பத் திரும்ப இங்கே
உபதேசிக்கின்றோம்.
மகரிஷிகளின் அருள் சக்திகளை சாமானிய மக்களும் பெறும் வாய்ப்பாக மாமகரிஷி
ஈஸ்வராய குருதேவர் தபோவனம் என்ற ஸ்தாபனத்தை அமைத்ததும் அவரின் உணர்வின் செயலே.
என்னால் முடியாது.
அவரின் உணர்வின் இயக்கமே இங்கே செயல்படுகின்றது. எப்படி இங்கே பொருள்கள்
வந்ததென்று நமக்கும் தெரியாது. இதன் வழிகளிலே தான் குரு அருளின் நிலைகள் இன்று
வழிப்படுகின்றது.
நாம் அனைவருமே இந்தக் குரு அருளின் தன்மை கொண்டு நமக்குள் மதத்தில் சிக்காது இன
பேதமோ மொழி பேதமோ இல்லாது அரசியல் பேதமோ இல்லாது
உலகைக் காக்கும் உணர்வை நமக்குள்
வளர்த்து
மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் பெறுதல் வேண்டும்.
அத்தகைய மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும் என்றால் அந்த மகரிஷிகளுடன்
நம் மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை அங்கே சப்தரிஷி
மண்டலத்துடன் இணைக்க வேண்டும்.
இந்த வாழ்க்கையில் வந்த தீமைகளை கொடூர நஞ்சின் தன்மை தனக்குள் சேர்த்துக்
கொண்ட அந்த ஆன்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து அந்த நஞ்சு கொண்ட உணர்வின்
தன்மையை அங்கே கரைத்துவிட்டு ஒளிக் கடலிலே அந்த உயிருடன் ஒன்றிய
ஒளியின் சரீரமாக நிலை பெறச் செய்ய வேண்டும்.
அவர்கள் முன் சென்றால்; அதனின் துணை கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை
நாம் பெறமுடியும். எமது குரு அருள் இதைத்தான் திரு அருளாக உபதேசித்தது.
ஆகவே, ஒவ்வொரு மனிதனையும் காத்திட வேண்டுமென்றால் நாம் அந்த மகரிஷிகளின் அருள்
சக்தியைப் பெறும் தகுதியைப் பெறவேண்டும்.
தன் வாழ்க்கையில் எத்தகைய தீமைகளைக்ள் கேட்டறிந்தாலும்
- · அந்தத் தீமையின் உணர்வு தனக்குள் பதியாது
- · அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்,
- · எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும்
- · எங்களை அறியாது சேர்ந்த தீமைகள் மறைய வேண்டும்
- · மெய்ப் பொருள் காணும் திறன் பெறவேண்டும்
- · எங்கள் சொல்லால் கேட்போர் உணர்வுகள் இருள்கள் நீங்க வேண்டும்
- · அவர்களும் பொருள் காணும் நிலைகள் பெறவேண்டும்
- · அவர் வாழ்க்கையில் மகிழ்ந்திடும் நிலைகள் பெறவேண்டும்
என்று இவ்வாறு எண்ண வேண்டும்
இப்படி நாம் எண்ணினாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறும் தகுதியைப்
பெறவேண்டும்
இல்லையென்றால் வெறும் சொல்லாகத் தான் அமையும்.