உங்கள் விஞ்ஞான அறிவுப்படி நீங்கள் எதை எடுத்துக் கொண்டாலும் பௌதீக நிலைகளில் எடுத்துக் கொண்டாலும் உங்கள் வாழ்க்கையில் பார்க்கலாம்.
நமது வாழ்க்கையில் நம்மையறியாது புகுந்திருக்கும் நிலைகளிலும் நாம் தவறு
செய்யாது நஞ்சு கொண்ட உணர்வுகள் படர்ந்து கொண்டிருக்கும் இன்றைய நிலைகளிலும்
பிறர் செய்யும் தவறுகளையோ,
பிறர் படும் தீமைகளிலிருந்தோ
பிறர் படும் வேதனைகளையும்
உற்றுப் பார்த்துப் பதிவு
செய்து கொண்டால்
அதனதன் உடல்களிலிருந்து வெளிப்பட்ட உணர்வுகள்
இங்கே வரத்தான் செய்யும்,
நம் முன் நிற்கத்தான் செய்யும்
சுவாசித்த உணர்வுகளை நம் உயிர் இயக்கி உணர்த்தத்தான் செய்யும்.
அது நமக்குள் தீமையின் விளைவாக விளையத்தான் செய்யும்.
இத்தகையை தீமையான விளைவுகளை மாற்றியமைக்க தங்கத்திற்குள் திரவகத்தை ஊற்றி
அதனுடன் இரண்டறக் கலந்த செம்பும் பித்தளையும் நீக்குகின்றோமோ இதைப் போன்று நாம்
நீக்குதல் வேண்டும்.
அதை நீக்க வேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும்?
மகரிஷிகள் இத்தகைய தீமைகளை அகற்றி உணர்வினை ஒளியாக மாற்றிச் சென்றவர்கள்.
அவர்களுடன் தொடர்பு கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும்.
ஆனால், அவர்கள் பிறவிக் கடனை
அற்று விண் சென்றவர்கள்.
அவர்களுடைய உணர்வின் அருகிலே நாம் அணுகினாலும் நம் எண்ணத்தைச் சுட்டுப்
பொசுக்கி விடும்.
அதைக் கவரும் உணர்வாக நமக்குள் ஒருக்கிணைந்த உணர்வினைச் சேர்த்து
நாம் அனைவரும் ஏகோபித்த
நிலைகள் கொண்டு
அவர்களின் எண்ணமுடன்
ஒத்த நிலைகள் கொண்டு வலுப்பெற்று
அதை நாம் நுகரும் தன்மை கொண்டு நாம் ஈர்த்தால் அதை நம் உணர்வின் நிலைகள்
கலந்து சிறிதளவே நமக்குள் வரும்.
நமக்குள் சிறிதளவே வந்தாலும்
நமக்குள் இருக்கும் தீமையினுடைய நிலைகளில்
அதற்குள் இது கலக்கும்
தீமைகளை அகற்றிடும் உணர்வாக நமக்குள் கலந்து நாம் சுவாசிக்கும் உணர்வுக்குள் கலந்து பதிவாகிவிடுகின்றது
இந்த எண்ணம்.
அந்த நிலையைச் செய்யப்படுவதற்கே இப்பொழுது யாம் உபதேசிக்கும் இந்த நிலைகள். அந்த
ஞானிகள் காட்டிய சாஸ்திர விதிப்படி நாம் நடந்தால் அவர்கள் அடைந்த எல்லையை அடையலாம்.