ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 3, 2016

உயிரால் உருவாக்கப்பட்ட அணுக்களின் மலம் உடலாகின்றது, உயிர் - உடல் - உணர்ச்சி

நமது பிரபஞ்சத்தில் எது எது எவ்வாறு உருவாகினும் நாம் நஞ்சினைச் சுவாசிப்போம் என்றால் அதைச் சுவாசித்தபின் நம் உயிரில் பட்டு நம் உடலிலுள்ள அணுக்களில் நஞ்சு பாய்ந்துவிடுகின்றது.

நமது உடலிலுள்ள அணு செல்கள் இயங்கவில்லை என்றால் உயிரும் அதை இயக்குவதில்லை.

ஆகவே, அதுவும் ஓம் நமச் சிவாய என்று நாம் எண்ணும் போது நம் உடலின் தன்மை அனைத்துமே இழந்து விடுகின்றது. இதைப் போல காலையிலிருந்து இரவு வரையிலும் நாம் எண்ணிய உணர்வுகள் நல்லவை கெட்டவை அனைத்தும் நம் உடலாக அமைந்து விடுகின்றது.

இதைத்தான் ஓம் நமச் சிவாய ஓம் நமச் சிவாய என்பது. அப்படியென்றால் நம் உடலை சதா சிவமாக்கிக் கொண்டயுள்ளோம்.

அதே சமயம் நாம் எண்ணியதை உயிர் ஜீவ அணுவாக மாற்றும் போது நம் உடலாக உருவானாலும்
உடலில் அந்த ஜீவ அணுக்களில் தாக்கப்படும்போது
அந்த வேதனையின் உணர்ச்சியை
நம் உயிர் நமக்குள் மீண்டும் உணர்த்துகின்றது.

இந்த உடலில் எந்த நிலைகளில் எந்தத் திசையில் எந்தக் கோணத்தில் நாம் இருந்தாலும் நமது தலை முடி இருக்கிறதென்றால் அது நம்முடன் ஒட்டி அதற்குண்டான அமிலச் சக்தியை அது கவர்ந்து கொண்டிருக்கும் வேளையில் அதிலிருக்கும் ஒரு அணுவின் மலம்தான் அது.

அந்த அணு நம் சிரசின் மேல் நம் உடல் மேல் ஒன்றியிருக்கப்படும் போது அதை இழுத்தோம் என்றால் அதே சமயம் நம் உயிருக்கு அந்த உணர்வுகள் வருகின்றது.
                           
அந்த அணு எதனால் உருவானதோ
அதனிடமே அதனின் நிலைகளை எண்ணி அதைச் சொல்கிறது.
அதை உணர்வால் உணர்த்துகின்றது.

இதைப் போன்றுதான் நம் உடலில் எந்த மூலையில் எதனுடைய நிலைகளை எடுத்தாலும் சிறு ஊசியில் தைத்தாலும் உடனே உயிரான ஈசனுக்கு அறிவிப்பாகின்றது.

ஏனென்றால், நாம் எண்ணிய உணர்வுகள் எதுவோ அந்த உணர்வின் சத்தை “ஓ” என்று ஜீவனாக்கி “ம்” என்று நம் உடலாக்கப்படும் போது
உடலிலிருந்து ஜீவ அணுவாக இயக்கி
நாம் சுவாசிக்கும் உணர்வை அதனைத் தனக்குள் ஆகாரமாக ஏற்று
அதனின் மலம் நம் சரீரமாக மாறிக் கொண்டே வருகின்றது.

நம் உடலில் எத்தனையோ விதமான குணங்களின் அணுக்கள் உருவானாலும் அதனின் மலங்களே நம் சரீரமாக ஆகின்றது. இருப்பினும் சில மலங்களில் அதனுடைய தன்மைகள் வேதனை தெரியாது.

இப்பொழுது நகம் இருக்கிறதென்றால் பல அணுக்களின் மலமே நகம். பல அணுக்களின் மலமே முடி. இருப்பினும் நகத்திற்கு உணவாக மலத்தைக் கொட்டிக் கொண்டிருக்கும் அம்முகப்பில் உடலுடன் ஒட்டியிருக்கும் இந்த நிலையை இந்த நகத்தை நாம் பெயர்த்தால் அது வேதனைக்குண்டான நிலைகளாகி அது உயிருக்கு உணர்த்துகின்றது.

அந்த மலத்தின் தன்மை வளர்ச்சியின் தன்மை வரப்படும் போது தசைகள் அல்லாது வெளிப்பட்டதை (நகத்தை) நாம் தொட்டால் அந்த உணர்ச்சிகள் தெரிகின்றது. வேதனை தெரியாது.

ஆக, நகக் கண் நகத்திற்குள் இருக்கும் நிலைகளை இந்த உணர்ச்சிகளை உந்தி இந்தக் கை விரல்களுக்கு வலு ஊட்டும் நிலையாக இருக்கின்றது.

இருப்பினும் நகக் கண்ணுக்குள் சிறிதளவு அதனின் உயிரணுக்களில் அதனின் மலத்தை உமிழ்த்திக் கொண்டிருக்கும் போது
அந்த அணுக்களில் லேசாகப் பட்டாலும்
இந்த உணர்வின் வேகத்தை வேகமாக
நமக்கு அதனின் வேதனையை உணர்த்துகின்றது.

இப்படி, நமது உயிர் நாம் எண்ணிய உணர்வுகள் அனைத்தையும்
ஜீவ அணுவாக மாற்றி சிவமாக
ஒரு உருவாக மாற்றிக் கொண்டுள்ளது.

இதிலே வேதனைப்படும் அந்த உணர்வுகளை நம் உடலுக்குள் அந்த அணுக்கள் பெருகிவிட்டால் நாம் சிறிதளவு இப்படித் தொட்டாலும் மேல் முடி பட்டாலோ துணி பட்டாலும் அங்கே வேதனை உணர்ச்சிகளை அதிகமாகக் கூட்டும்.

ஆகவே அந்த வேதனை மற்ற அணுக்களில் ஊடுருவப்பட்டு அந்த அணுக்களும் இந்த வேதனையை அனுபவிக்கும் தன்மையில் இருப்பதால் சிறிதளவு அசைத்தாலும் அந்த நிலைகள் நமக்குள் உணர்த்துகின்றது.

இவை அனைத்திற்கும் மூலமாக இருப்பது யார்? உயிர்”.