கணவன் வெளியிலே தொழிலின் நிமித்தம் வேலை செய்யும் போது ஒருவன் பகைமையூட்டும் செயலைச்
செய்கின்றான்.
அந்தப் பகைமையான உணர்வுகள் இங்கே வளர்ச்சியடைந்து விட்டால்
அவனை எண்ணியே கோபங்கள் அதிகமாகி
இரத்தக் கொதிப்பாக
மாறுகின்றது.
மற்ற நல்ல அணுக்களை வளரவிடாது அதை இது கொன்று புசித்துக் கொண்டேயிருக்கும்.
எதைப் பெறவேண்டும் என்று எண்ணினாரோ அந்த உணர்வின் தன்மை வலிமையாகிவிட்டால் நல்ல குணங்களையும் நல்ல
உணர்வுகளையும் நல்ல அறிவுகளையும் இது மாய்த்துக் கொண்டேயிருக்கும்.
இந்த உணர்வின் தன்மை வரப்படும் பொழுது கணவருக்கு அடிக்கடி தீமை செய்பவர் மேல்
எண்ணம் வந்தால் அந்த எண்ணமே கணவனுக்கு எமனாக மாறிவிடுகின்றது.
எவரின் உணர்வு இங்கே அதிகமாக வளர்கின்றதோ அதன் வலிமை பெற்றபின் இந்தக்
குடும்பப் பற்றும் அற்றுவிடுகின்றது. தன் உடல் பற்றும் அறுத்து விடுகின்றது.
அந்தப் பகைமை உணர்வே ஓங்கி
வளர்ந்து
இந்த உணர்வுகள் கொதிகலனாக
மாறுகின்றது.
பூமி கொதிகலனாகும் பொழுது நில நடுக்கங்கள் ஆகின்றது. அதனால் மேலிருப்பது
அமிழ்ந்து உள்ளே செல்வதும் அப்பகுதியில் உள்ள அனைத்துமே அழிகின்றது. இன்றும் சில
இடங்களில் பார்க்கலாம்.
பெரும் காடாகவும், மலையாகவும் இருந்த இடங்களில் அடி பாகம் கொதிகலனாக மாறும்
பொழுது மேல் இருக்கும் தாவர இனங்கள் அப்படியே அமிழ்ந்து விடுவதைப் பார்க்கலாம்.
பூமியின் வெப்பத்தினால் உள்ளே எற்படும் கொதிகலனால் அப்படியே அவையெல்லாம் கருகி
கட்டைகளாக மாறுகின்றது. அவையெல்லாம் நிலக்கரியாகவும், கல் கரியாகவும் பூமிக்குள்
உருவாகிவிடுகின்றது. இவை எல்லாம் பூமியில் இப்படி மாற்றங்களைக் கொண்டது.
அது அது எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை
அந்த வீரிய உணர்வுகள் பூமிக்குள்
படரப்படும் பொழுது
இத்தகையை
மாற்றங்கள் பூமிக்குள் வருகின்றது.
இதைப் போன்று ஒரு மனிதன் தொழிலின் நிமித்தமாக விகாரத் தோற்றங்களான செயல்களும் அவனுடைய
சுய நலங்களுக்காக
நம்மை வேலையிலிருந்து இழக்கச் செய்வதும்
நாம் பெறும் உயர்ந்த நிலையை அவன் பெறுவதற்காக
இப்படிப் பகைமை
உணர்வுகளை ஊட்டிவிடுகின்றான்.
இதன் வழிகளில் செய்யப்படும் பொழுது அது நமக்குள் பதிவாகிவிட்டால் தனக்குத்
தீங்கு செய்தவனின் எண்ணங்கள் வளர வளர நமக்குள்: கொதிகலனாக மாறுகின்றது.
அந்த வீரிய உணர்வின் தன்மை தனக்குள் ஏற்பட்ட பின் நம்
உயிரிலே உள்ள நுண்ணிய அலைகள் மிகக் கடினமாகிவிடுகின்றது.
பின் சிறு மூளையின் பாகத்திற்குள் ஊடுருவிச் செல்லப்படும் பொழுது இதனுடைய அழுத்தத்தைத் தாங்காது உடலை இயக்கும் உணர்வுகள் அனைத்தையும் முடமாக்குகின்றது.
ஒவ்வொரு நிலையையும் குறுக்குகின்றது.
மனிதன் சிந்திக்கும் திறனை இழக்கச் செய்கின்றது.
எனவே இதைப் போன்று அந்த மனிதன் அந்த எண்ணத்தை எண்ணும் பொழுது அவர்களுடைய
எண்ணமே எமனாகின்றது. தன் மனைவியையும் மறக்கச் செய்கின்றது.
குடும்பத்தையும்
வெறுக்கச் செய்கின்றது.
காரணம் கொதிகலன் வரும் பொழுது ஒரு எரிகின்ற நெருப்பில் அந்த வேகத்தின் தணல்கள்
எப்படி ஆகின்றதோ இதைப் போல கோபத்தின் நிலைகள் அதிகமாகின்றது.
மனைவி சொல்வதைக் கணவர் கேட்க மாட்டார். அவர் எதிர்பார்க்கும் அளவிற்குக் கொடுக்கவில்லை
என்றால் மனைவி மீது வெறுப்பாகின்றது. பின் குழந்தைகள் மீதும் வெறுப்பாகின்றது.
“நான் இப்படியெல்லாம் சம்பாரித்துக் கொடுத்தேனே..,” என்று எண்ணுவார். வாய் பேச
முடியாது.
ஆனால், நினைவாற்றல் “நான் எல்லோரையும் இப்படி வளர்த்தேன்.., எனக்கு ஒன்றும்
கவனிக்க முடியவில்லை” என்று சொல்வார்கள்.
இவரால் பேச முடியவில்லை. ஆனால், நினைவுகள் உணவுக்காக ஏங்கும். ஆக, அதனுடைய
பசியின் ஏக்கம் அதிகமாகும். அது கிடைக்கவில்லை என்றால் சாப அலைகளை உதிர்த்துக்
கொண்டேயிருக்கும்.
இதைப் போன்று அந்தக் குடும்பத்தில் சாடப்படும் பொழுது மகிழ்ச்சியாக வாழ்ந்த
குடும்பங்களாக இருந்தாலும் சந்தர்ப்ப பேதத்தால் அந்த உணர்வுகள் அங்கே பரவப்பட்டு
அந்த உயர்ந்த குடும்பங்களாக இருப்பினும்
உயர்ந்த குணங்கள் கொண்டு அழகான உடல்களாக இருப்பினும்
இந்த
உணர்வுகள் ஊடுருவி
அவர்கள் உடல்களைச்
சின்னாபின்னமாக்கிவிடும்.
ஏனென்றால் ஒரு பக்கம் வெளியேறும் இன்னொரு பக்கம் இதனுடைய செயல்கள் இப்படிப்
படுகின்றது.
பூமிக்குள் தன்னுடைய கொதிகலனான நிலைகள் ஏற்படும் பொழுது தனக்குள் உருப் பெறும்
பாறைகள் இந்த வெப்பத்தால் சிதையுண்டு கூழாக மாற்றுகின்றது.
கூழாக மாறும் போது உணர்வின் தன்மை வெடிப்பாகி பாறைக்குள் ஊடுருவி இதனுடைய
செயலாக்கங்களை மாற்றி இதனுடைய உலோகத் தன்மைகள் மாறுகின்றது. நமது பூமியிலும் சரி.
மேலெழுந்தவாரி மற்ற கோள்களும் சரி
இப்படி மாற்றங்கள் ஏற்படுவது
போன்று மனித
உடலுக்குள்ளும் இத்தகைய நிலைகளில் மாற்றங்கள் ஆகின்றது.
இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.