அகஸ்திய
மாமகரிஷிகளின் அருள் சக்தி வான் முழுவதும் படர்ந்து
மேகங்கள் கூடி நல்ல மழை பெய்து தாவர இனங்கள் செழித்து
இந்த ஊரும் உலகமும் நலம்
பெற அருள்வாய் ஈஸ்வரா
என்று உங்கள் நினைவினை வானை நோக்கிச் செலுத்துங்கள்.
இந்த நாடு செழிக்க வேண்டும் என்ற உணர்வுடன் நீங்கள் இவ்வாறு தியானமிருங்கள்.
உங்கள் அனைவரது நினைவலைகளும் மேகங்களில் கூட வேண்டும். நாம் தியானத்தின் மூலம்
கவரும் அந்த உயர்ந்த சக்தி அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை அங்கே கலக்கச் செய்ய
வேண்டும்.
இவ்வாறு கலக்கச் செய்தால் மழையின் ரூபமாக இங்கே மழை பெய்தாலும்
இங்கே கடும் தீமைகளை விளைவிக்கும் தீய அணுக்கள் வளராது
அதைத் தடைப்படுத்தவும் இது உதவும்.
இந்தக்
காற்று மண்டலத்திலுள்ள நச்சுத் தன்மைகள் குறையவும் இது உதவும்.
ஏனென்றால், உங்களுக்குண்டான திறமைகளை நீங்கள் பார்க்கலாம்.
மனிதனான உங்கள் உடலுக்குள் நாம் எதை எண்ணுகின்றோமோ அந்த வலுவின் தன்மை கூடி இந்த
எண்ண அலைகள் கூடி
நாம் எங்கே நினைவைச் செலுத்தி அங்கே செலுத்துகின்றோமோ
இது
பாய்கின்றது. அந்த உணர்வுகள் படர்கின்றது.
மழையையும் பெய்ய வைக்கின்றது.
ஆகவே இதையெல்லாம் மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் நினைவைச் செலுத்தி அந்த
அருள் வட்டத்திலிருந்து நம் உடலைக் காக்கவும் நாட்டைக் காக்கவும் நினைவினை விண்ணை நோக்கிச்
செலுத்துவோம்.
வானஇயல் தத்துவம் புவியியலாக மாறினாலும்
புவியியலின் உணர்வைக் கொண்டுதான்
மனிதன் உயிர் மாற்றிக்
கொண்டது.
ஆகவே, வான இயலின் உணர்வுகள் நமக்குள் வரும் பொழுது அதே புவியியலின் நிலைகளை நாம்
சீராக வைக்க முடியும்.
அக்காலத்தில் அகஸ்தியன் இந்தப் பூமியினைத் திருப்பி தனக்குகந்த நிலைகளை வைத்து
இன்று வரையிலும் நம் பூமி சீராக ஓடிக் கொண்டிருக்கின்றது.
இனி சிறிது காலத்தில் பூமியின் திசை மாற்றங்கள்
வரும். அதற்குள் நீங்கள் தியானித்து அந்தத் திசை மாறாது சீராக
வைக்க முடியும்.
ஒரு டிகிரி மாறிவிட்டால் போதும்.
கடல் நீரும் மாறும். மனிதன் உணர்வுகளும் மாறும்
இந்த மனிதனின் நிலைகளில்
பெரும்பகுதி மாற்றங்கள் வரும்.
நிலப் பகுதியை நீர் அரிக்கும். இதைப் போன்ற நிலைகளில் நிலம் குறையாது அதைச்
சீராக்க உங்கள் உணர்வுகளை விண்ணை நோக்கிச் செலுத்தி அந்த மகரிஷிகளின் உணர்வை இந்த
உலகம் முழுவதும் பரவச் செய்யுங்கள்.
உங்கள்
மூச்சலைகளால் இந்தப் பூமியின்
திசை மாற்றத்தைத் தடுக்கலாம். இந்தப் பூமியில் வாழும் மக்களைச் சீராகவும் வைக்கலாம்.
நன்மைகள் பல செய்யத் துணிவோம்.