இன்று நாம் தியான வழிகளில் செல்லும் போது தியானம் எடுக்கும் போது நம்
வாழ்க்கையில் சில குறைகள் வருகின்றது. ஆனால்,
நான் தியானம் இருக்கின்றேனே,
எனக்கு ஏன் கோபம்
வருகின்றது?
நான் தியானம் இருக்கின்றேனே
எனக்கு ஏன் நோய்
வருகின்றது?
நான் தியானம் இருக்கின்றேனே
என் குடும்பத்தில் ஏன்
சண்டை வருகின்றது?
என்றெல்லாம் நாம் சிந்திக்கத் தொடங்கிவிடுகின்றோம்.
தியானம் இருக்கின்றேன் என்ற
நிலைகளில் இன்று இப்படியெல்லாம் நாம்
சொல்கிறோம்.
நான் இராக்கெட்டைச் சிந்தனையுடன் தான் செய்தேனே,
ஏன் இப்படிக் குறை வந்துவிட்டது? என்று
அவன் (விஞ்ஞானி) செயல்படவில்லை.
விஞ்ஞான அறிவின் தன்மை கொண்டு
அதிலே
குறைகளை நீக்கும் பொழுதுதான்
இராக்கெட்டை விண்
செலுத்தி
வெற்றியின் நிலை பெறுகின்றான்.
நம் வாழ்க்கையில் நாம் பிறருடைய குறைகளை உணரும் அறிவாக நமக்குள் உண்டு. ஆக,
குறை செய்கிறார்கள் என்று உணர்த்த அது உண்டு.
ஆனால் அதே குறையை அதிகமாக வளர்க்கும் போது குறையின் தன்மை வந்துவிட்டால் நம்
நல்ல குணத்தைச் சீர்படுத்தும் நிலைகள் இல்லாது போய்விடும்.
இதைப் போன்ற நிலைகளை நமக்குள் ஏன் நடக்கவில்லை? என்ற உணர்வினைத் தனக்குள் எடுத்து
மகரிஷிகளின் அருள்சக்தியை நாங்கள் பெறவேண்டும் என்ற உணர்வினை
தனக்குள் அதிகமாகச் சேர்க்கப்படும் பொழுது
நம் வாழ்க்கையில் வந்த இருளினைப் பிளந்து
மெய்ப் பொருள் காணும் பாதையில் விண்ணிலே நாம் செல்ல முடியும்.
இராக்கெட் விண்ணிலே செலுத்த முடியவில்லை. அது தடைப்படும் பொழுது தடைக்குக் காரணம் என்ன? என்ற நுண்ணிய
அறிவினை விஞ்ஞான அறிவு கொண்டு செலுத்துகின்றான் விஞ்ஞானி.
இதைப் போன்றுதான் இந்த வாழ்க்கையில் நாம் அந்த மெய் ஒளி பெறவேண்டும் என்ற அந்த
எல்லையை அடையும் நிலைகளில் செயல்படவேண்டும்.
பிறவியில்லா நிலை அடைந்து விண்ணிலே வளர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த
மெய்ஞானிகளின் உணர்வை நமக்குள் எடுத்து வளர்த்தோம் என்றால் நம் வாழ்க்கையில் தடைப்படும் உணர்வுகளை நீக்கிவிட்டு
நாம் சீராகச் செல்ல இது உதவும்.
அவ்வாறு சீராகச் செல்ல வேண்டும் என்றால் ஆத்ம சுத்தி செய்யும் போது தவறு
எங்கிருந்து நடந்ததோ தவறை நீக்கித் தன் வாழ்க்கையைச் சீர்ப்படுத்தவும் தவறற்ற
நிலைகளைத் தனக்குள் உருவாக்கிடல் வேண்டும்.
இந்தத் தவறற்ற நிலைகளைத் தனக்குள் உருவாக்க வேண்டும் என்றால் மெய்ஞானியின்
உணர்வைச் சுவாசித்து சீரான நிலைகளில் அந்த உணர்வின் தன்மையை நமக்குள்
செலுத்தப்படும் பொழுதுதான்
இராக்கெட் எப்படி விண்ணை நோக்கிச் செல்கின்றதோ இதைப் போல
அந்த மெய் உணர்வின் தன்மையை நமக்குள் வளர்க்கப்படும் பொழுது
இந்தப் புவி வாழும் தன்மையின் நிலைகள் நம்மை ஈர்க்காது
மெய் வாழும் உணர்வின் தன்மை தனக்குள் வளர்த்ததை
அங்கே சீராக நம்மைச் செலுத்தும்.
இந்த உயிர் எதை நாம் கவர்கின்றோமோ அந்த மெய்ஞானிகளின் உணர்வை நமக்குள்
எடுத்துவிட்டால் இந்தச் சிக்கலைப் பிளந்து சிக்கலற்ற நிலைகள் கொண்டு அங்கே
சென்றடைந்தபின்
நமக்குள் உடல் பெறும் நிலையைப் பிரித்துவிடும்.
உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி ஒளியின் ஒளியின் சரீரம் ஆகும்.
இராக்கெட்டை விண்ணிலே ஏவிய
பின் அந்த எல்லையை
அடைந்தபின் இது “உந்தித்
தள்ளிய” உணர்வின் சத்தைப் பிரித்துவிடுகின்றது. பின் அதனுடைய சுழல்
வட்டத்திற்குள் செல்கிறது.
இதைப் போன்று நம் உணர்வின் தன்மையை
இந்த உடலிலே பெற்ற நிலைகள் உணர்வு நமக்குள் ஒன்றியிருந்தாலும்
இந்தப் புவியின் ஈர்ப்பின் துணை கொண்டு
விண்ணிலே இருக்கும்
மகரிஷிகளின் உணர்வை நமக்குள் கவர்ந்து
இந்த உணர்வின் சத்தாக நமக்குள் வளர்த்துக் கொண்டபின்
அதனின் உந்து விசைகள் நமக்குள்
அதிகமாகும் போது
இந்த உடலை விட்டுப் பிரிந்த பின் அதனின் ஆற்றலே அதிகமாகின்றது.
ஆனால், அதனைச் சென்று நாம் அங்கே செல்வோம் என்றால் அந்த ஒளி வட்டமான சப்தரிஷி
மண்டலத்துடன் இணைந்த பின் இந்த உடல் பெறும் உணர்வுகளைப் பிரித்துவிடுகின்றது.
உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மை தன் சுழல் வட்டத்தில் சென்று உணர்வின் தன்மை
அது ஒளியாகச் சுழல்கின்றது.
விஞ்ஞான அறிவில் இன்று விண்ணுலக ஆற்றலை அறியத் தனக்குள் சாதனங்களை உருவாக்கி
அதை வைத்து விண்ணின் ஆற்றலைப் பெறும் தன்மையாக அதைக் கவர்ந்து இங்கே மண்ணுலகில்
அனுப்பப்பட்டு அதனுடைய சீர் பாதைகளில் இன்று இயந்திரத் துணை கொண்டு காணுகின்றார்கள்.
இதைப் போல உடலின் இயந்திர உணர்வுகளில் மெய்ஞானிகளின் உணர்வை இணைக்கச் செய்தல் வேண்டும்.
வாழ்க்கையில் இங்கே வரும் தீமைகளைப் பிளக்கும் இந்த
உணர்வை நாம் உந்துவிசையாக அந்த மெய்ஞானிகள் உணர்வை
நாம் எவ்வாறு சேர்க்க வேண்டும் என்ற நிலையைத் தான் உங்களுக்குள் உபதேசித்து
வருகின்றோம்.
ஒவ்வொரு நிமிடமும் உங்கள் வாழ்க்கையில் வரும் இடையூறுகளை நீக்கிட அந்த
மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று ஆத்ம சுத்தி செய்து
அந்த உணர்வின் தன்மையை நமக்குள் இணைத்துக் கொண்டே வரவேண்டும்.
இந்த உடலை விட்டு நாம் சென்றால் எந்தத் தடையும் இல்லாது
இந்த உடலில் பெற்ற உணர்வின் தன்மையை அங்கே சென்றடைந்த பின்
அருள் ஞானியின் உணர்வுகள்
உடல் பெறும் உணர்வைக் கழற்றி
எறிந்துவிடும்.
அந்த நிலைகளைப் பெறச் செய்வதற்கு அந்த மெய்ஞானிகள் காட்டிய அருள் வழியில் நாம்
இதனைச் செயல்படுத்துதல் வேண்டும்.