ஒருவருக்கொருவர் துணையில்லாது
ஒருவரும் வாழ முடியாது.
ஒருவரும் துணையில்லாது வாழ்ந்த ஒரு உயிரினம் அது சுத்தமாகவே
அழிந்துவிடுகின்றது. அந்த உணர்வின் தன்மை மடிய மடிய அந்த இனத்தின் ரூபங்களே
மடிந்துவிடுகின்றது.
கடந்த காலத்தில் மனிதன் ஆவதற்கு முன் உணர்வின் வலிமை கொண்ட மிருகங்களானாலும்
அந்த இனத்தின் வலிமையாக்கப்படும் பொழுது அதற்குள்ளே அது கொன்று புசிக்கும் நிலை வந்தபின் அது
இறந்தபின் அதனுடைய அலைகள் வந்தபின்
அதை நுகர்ந்த அதனின் இனங்கள்
பற்று கொண்டது வளர்ந்தது அனைத்துமே அழிந்து விடுகின்றது.
இதைப் போன்ற பல இனப் பெருக்கங்களும் தடைப்பட்டு கடந்த காலங்களில் உள்ள
ரூபங்கள் எப்படி மறைந்தது என்பதை குருநாதர் இமயமலைப் பகுதிக்கு அழைத்துச் சென்று
சில பகுதிகளிலும், அவர் சூட்சம நிலைகளில் சில பிரதேசங்களுக்கு அழைத்துச் சென்று
காட்டினார்.
இனப் பெருக்கங்களான பல மிருகங்களின் ரூபங்களே இன்று இல்லாதிருக்கின்றது. அவைகளின்
உணர்வின் நிலைகள்
எந்தெந்த அலைகள் அங்கே பதிந்துள்ளது?
அவைகள் எப்படி மாற்றியுள்ளது?
அதனுடைய அலைகள் எப்படியுள்ளது?
அவைகளின் ரூபங்கள் எப்படி உள்ளது?
என்று காண்பித்தார் குரு.
ஆனால், இதை நீ வெளியில் சொன்னால் போற்றுவதற்குண்டான நிலைகள் வரும். அந்த
ரூபத்தை வரைந்து கொடுத்தால் உனக்குப் பணமும் வரும்.
அதனின் செயலாக்கத்தை குணங்களை எடுத்தால் இன்று விஞ்ஞான அறிவு கொண்டு இந்த
உணர்வை வைத்து அந்த அலைகளைக் கம்ப்யூட்டரை வைத்துப் பிரிப்பான்.
பிரித்து கொண்டபின் இந்த உணர்வின் எண்ன நிலைகளும்
இதன் தொடர் கொண்டு காற்றில் இருப்பதையும் பிரிப்பான்
என்று இதைச் சொன்னார்
குருநாதர்.
உனக்குள் விளைந்த உணர்வின் தன்மையை கம்ப்யூட்டரில் இணைக்கப்படும் பொழுது உன்
உணர்வின் அலைகள் தொடரை வைத்து அந்த ரூபத்தையும் அறிவான்.
அதனின் நிலைகளைக் காணும் நிலைகளும் வரும்.
ஆனால், அது ஜீவன்
உள்ளதாக வராது.
அதை அவன் இந்த உணர்வு கொண்டு கம்ப்யூட்டரில் அவன் ரூபத்தைப் போட்டாலும் இவன்
நுகர்ந்த உணர்வுகள் மீண்டும் அந்தக் கடந்த கால நிலை எதுவோ அந்த உணர்வின் தன்மை வளர்க்கப்பட்டு
இந்த நினைவாற்றலை விஞ்ஞான அறிவு கொண்டு கண்டுணர்வான்.
கண்டுணர்ந்தாலும் அவனின் நினைவாற்றல் இந்த மனிதன் ரூபத்தை விட்டு அந்த
விகாரமான அந்த உணர்வின் தன்மை அமைக்கப்பட்டு இந்த உடலின் தன்மை வெளி வந்தபின்
இன்றைய சூழ்நிலைக்கும் இல்லாது
கடந்த கால சூழ்நிலைக்கும் இல்லாத உணர்வின் தன்மை கொண்டு
இந்த உயிர் இதற்கிணையான ரூபத்தை மாற்றி
கொடூர மிருகமாக மாறும்.
இதுதான் இந்த விஞ்ஞான அறிவால் வரும்.
இன்று ரூபங்களைப் பார்க்கும் பொழுது உடல் இச்சைக்கு இவன் செய்தாலும் அதனுடைய பின் விளைவின் தன்மை இப்படி இருக்கும்
என்று அதையும் காட்டுகின்றார் குரு.
ஏனென்றால், இன்று விஞ்ஞன அறிவால் உள்ளோர்கள் மண்ணினை எடுத்து ஒரு பொருளை எடுத்து
அதில் உள்ள நுண்ணிய அலைகளின் தன்மை கொண்டு ஆசிட்டின் (அமிலம்) பவரை விடப்படும்
பொழுது மேலெழுந்தவாறு ஆவியாக மாறுகிறது.
ஆவியாக மாற்றி அதனுடைய வலிமை பெற்ற பின் படிப்படியாக அந்த உணர்வின் தன்மை
திரவகத்தைக் கூட்டக் கூட்ட
இன்னென்ன காலங்களில் இது இவ்வளவு வலிமை பெற்றது,
இதனுடைய வலிமையை இவ்வளவு காலங்களில் பெற்றது
இந்த உணர்வை இந்தத் திரவகத்தை ஊற்ற ஊற்ற
அதிலே வலிமை கொண்டு கரைந்து கரைந்து போவதை
இத்தனை காலம் பெற்ற பாறை என்று
அந்தக் கால கட்டத்தை விஞ்ஞான அறிவால் அறிகின்றான்
இதைப் போலத்தான் நம்
குருநாதர் விண்ணுலகின் ஆற்றலின்
உணர்வுகள் இந்தக் காலங்களில்
விளைந்தது (என்று) அதை நுகர்ந்து பார்
இந்த உணர்வின் தன்மை அலையின் ஒலி(ளி) அலைகள் எப்படி வருகிறது? என்று அதனை அறிந்து கொள்.
இதற்காக வேண்டி நீ காலத்தைச் செலவழிக்க வேண்டியதில்லை.
நீ அறிந்து கொள்ளவே இதைக் கொடுக்கின்றேன்.
இந்த அறிவின் தெளிவை நீ மற்றவர்களுக்குச் சொன்னால் விஞ்ஞான அறிவிற்கே இது அடிமையாகி மனிதனின்
உடலின் இச்சைக்கே இது உருவாகி அதன் வழியில்தான் அறியும் பருவத்தையே பெறுவாயே தவிர
என்றும் நிலை கொண்டு
உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமான
அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நீ இணைய முடியாது
என்று தெளிவாகக் காட்டினார்.
ஆகவே, அதன் வழிப்படி நான் (அறியும் விஞ்ஞானத்திற்கு) அந்த ஞானத்திற்குச் செல்லவில்லை.
அந்த மெய்ஞான உணர்வுடன் வளர்ந்து கொண்டிருக்கும்
ஒளியின் சரீரமாக வாழ்ந்து கொண்டிருக்கும்
அருள் மகரிஷிகளின்
உணர்வுடன் உங்களை ஒன்றச் செய்கின்றேன்.
மகரிஷிகளின் உணர்வை உங்களுக்குள் விளையச் செய்து இந்தக் காற்று மண்டலத்திலுள்ள நச்சுத்
தன்மையை அகற்றச் செய்யவேண்டும்.
என் ஒருவனால் முடியாது.
நீங்கள் அனைவரும் இந்த உணர்வின் தன்மை எடுத்து உங்களுக்குள் இந்த நினைவு
கொண்டு
·
மகரிஷிகளின் ஆற்றல் பெறவேண்டும்.
·
எங்கள் உடல் முழுவதும்
படரவேண்டும்.
·
எங்கள் உடலிலுள்ள
ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும்.
·
நாங்கள் பார்ப்போரெல்லாம்
மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்.
·
என்னைப்
பார்ப்போருக்கெல்லாம் கிடைக்க வேண்டும்.
·
நாங்கள் தொழில் செய்யும்
இடங்களிலெல்லாம் படர வேண்டும்
என்ற இந்த உணர்வை உங்கள் எண்ணத்தால் பரப்ப வேண்டும்.
அப்படிப் பரப்பினால் இது சிறுகச் சிறுகப் படரும்
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இது விளையும்.
மகரிஷிள் உணர்வின் அலைகளைப் பெருக்கும்.
இதனின் வலிமை கொண்டு இந்தக் காற்று
மண்டலத்திலுள்ள விஞ்ஞான அறிவால் வரும் நச்சுத் தன்மைகள் நிச்சயமாக மாறும்.