எண்ணியதை இயக்கிக் காட்டுவது உயிர்.
எண்ணிய உணர்வின் தன்மையை தன் உணர்வால் அது கடவுளாக இருந்து
இந்த உணர்வின் சத்தை அந்த உடலுக்குள் சென்று
அதனின் உணர்வின் தன்மை
கொண்டு அது உடலாக மாற்றுகின்றது.
ஆகவே, இதைத்தான் கடவுள்
என்பது.
·
உள் நின்று உணரும் அந்த
உணர்வின் தன்மையை உடலாக்குவதும் கடவுளே.
·
அதை இயக்கிக்
கொண்டிருக்கும் உயிர் கடவுளே.
·
தான் நுகர்ந்த உணர்வை உள்
நின்று இயக்கும் செயலாக மாற்றுவது உயிரே.
·
எண்ணத்தால் கவர்ந்த உணர்வினைத்
தன் ஆன்மாவாக மாற்றிக் கொள்வதும் அதுவே.
·
ஆன்மாவின் நிலைகள் அது
உறையும்போது கடவுளாக உள் நின்று அதை உறையச் செய்யும் செயலாகச் செயல்படும்
நிலைகளும் அதுவே.
மகரிஷிகள் காட்டிய இந்த
உணர்வின் தன்மையை நாம் உணர்ந்து கொண்டால் போதும்.
இப்படித்தான் பல கோடிச் சரீரங்களில் நம் உயிர் கடவுளாக நின்று எண்ணியதைத்
தனக்குள் ஆன்மாவாக மாற்றி அதாவது பரமாத்மாவாக மாறுவதை ஆன்மாவாக மாற்றித் தனக்குள்
ஜீவான்மாவாக (உடலாக) மாற்றுகின்றது.
உயிரே உள் நின்று கடவுளாக ஒவ்வொரு உணர்வுகளிலும் உறுப்புகளிலும் நமக்குள் உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.
உருவுக்கு உறுதுணையாக இருக்கும்
உயிரின் செயலாக்கங்கள் எவ்வாறு இருக்கிறது
என்ற நிலையைத்தான்
தெளிவாக எடுத்துரைத்தார் அன்று வியாசர்.
ஆதியில் கண்டுணார்ந்த உணர்வின் தன்மையைப் பகுத்தறிந்து உணர்வின் செயலால்
சாதாரண தன் இன மக்களுக்கும் இது கிடைக்க வேண்டும் என்று இந்த 4000 ஆண்டுகளுக்குள்
இவ்வளவு தெளிவான நிலைகளில் தெளிவாக்கினார்.
ஆனால், இதைச் சாஸ்திரமாக்கப்பட்டு சாங்கிய சாஸ்திரமாக மாற்றிவிட்டார்கள்.
சாங்கியங்கள் செய்யும்
நிலைகளால் இன்று நாம் மனிதனின் முழுமையின் உண்மையை அறியாதபடி மனிதனான
பின் நாம் எங்கே செல்ல வேண்டும் என்ற நிலை தடுமாறி வாழ்ந்து கொண்டுள்ளோம்.
கடவுளுக்கு நைவேத்தியம் செய்தால் நம்மைக் காப்பான் என்றும், அவனுக்கு வேண்டிய
பொருளைக் கொடுத்தால் மகிழ்ந்து நமக்கு உதவி செய்வான் என்ற இந்த எண்ணங்களைத் தான்
நமக்குள் உருவாக்கிவிட்டார்கள்.
மனிதன் மகரிஷிகளின் உணர்வைத் தனக்குள் எடுத்தால் இந்த வாழ்க்கையில் வரும்
தீமையான உணர்விலிருந்து மீள முடியும். அந்த மகரிஷிகள் சென்றடைந்த இடத்தை நாம்
சென்றடைய முடியும்.
அந்த மகரிஷிகள் சென்ற
இடத்தை அடையத்தான் இந்த உபதேசத்தையே கொடுக்கின்றோம்.
அந்த மகரிஷிகள் ஒவ்வொருவர் சொன்னதையும் உபதேசித்து உங்களுக்குள் தெளிவாக்கிப் பதிவாக்கி அதன்
உணர்வை நினைவாக்கினால் உங்களைக் காக்கலாம். உங்கள் மூதாதையர்களையும் விண்
செலுத்தலாம்.
நாம் இந்த உடலை விட்டுச் சென்றால் நாம் எங்கே செல்ல வேண்டும் என்ற நிலையை நமது
குருநாதர் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் எமக்கு உணர்த்தினார்.
அவர் அருளிய அந்த அருள் வழிப்படி அனுபவத்தின் வாயிலாக இந்த உணர்வின்
இயக்கங்களை அறியச் செய்கின்றோம். உங்கள் எல்லோருக்குள்ளும் உணர்வைப் பதியச் செய்கின்றோம்.
இந்த உணர்வால் தன்னைத் தான் அறிய முடியும்
இந்த வாழ்க்கையில் தீமைகளை அகற்றிட முடியும்
தீமையற்ற உணர்வை ஒவ்வொருவரும் தன்னுள்
விளைய வைக்க முடியும்.