கருவுற்ற தாய்மார்களுக்கு அன்று
ஞானிகள் காட்டியது எதை?
ஆனால், இன்று நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம்?
இப்பொழுது. நாம் எதைப் பார்க்கின்றோம்?
எதை எண்ணுகின்றோம்?
நம் வாழ்க்கையில் எதைப்
பார்க்க நேர்கின்றது?
ஒன்றிலிருந்து மூன்று மாதம் கருவிலே இருக்கப்படும் போது சண்டை போடுபவர்களைப்
பார்க்கின்றோம். “ஐய்யோ..., பாவிகள்.., எப்படிச் சண்டை போடுகிறார்கள்?”
இதை உற்றுப் பார்த்தபின் அந்தச் சண்டை போட்ட உணர்வுகள் கருவிலிருக்கும் குழந்தைக்குப் பூர்வ
புண்ணியமாக அமைந்துவிடும்.
அடுத்து உலக நடப்புகளைத் தெரிந்து கொள்வதற்காக தினசரி பத்திரிக்கைகளைப்
பார்க்கின்றோம்.
அங்கே கொலை செய்தான், இங்கே வெடி குண்டை வெடிக்க வைத்துக் கொன்றார்கள், அங்கே
கெட்டுப் போய்விட்டது இங்கே திருடினான், அங்கே கொள்ளையடித்தான்.., இப்படி என்னென்னமோ
அக்கிரமங்கள் நடக்கின்றது என்று பத்திரிக்கையில் அதிகமாக இதைத்தான் படிக்கின்றோம்.
“ஐயோ, ஐய்யய்யோ.., இப்படியெல்லம் உலகில்
நடக்கின்றதே..,” இந்த உணர்வுகள் அனைத்தும் கருவில் விளையக்கூடிய குழந்தைக்குப்
பதிவாகின்றது.
இது போக வேறு என்ன செய்கின்றோம். டி.வி.யைப் போட்டு வைத்திருக்கின்றோம்.
அசுரத்தனமான உணர்வுகளும் அசுரத்தனமான செயல்களும்
இரக்கமற்றுக் கொன்று குவிக்கும் நிலைகளும்
இரக்கமற்று ஒருவரை ஒருவர்
தாக்குவதையும்
படமாக்கிக் காட்டுவதை
உற்றுப் பார்க்கின்றோம்.
இத்தகையை படங்களை இரசித்துப்
பார்ப்பார்கள். கருவிலிருக்கக்கூடிய குழந்தைக்கு இது பூர்வ புண்ணியமாகப் பதிவாகிவிடுகின்றது.
குழந்தை பிறந்தபின் அடுத்தாற்போல் பார்த்தால் அது என்ன செய்யும்?
“டமார்.., டுமார்...,” என்று அடிக்கும். சில குழந்தைகள் கராத்தே அடிப்பது போல் விளையாடும். ஆ! டுஸ்ஸ்.., இ! டுஸ்ஸ்..,”
என்று அடித்துக் காட்டி விளையாடும்.
ஒன்றும் தெரியாத அந்தக் குழந்தைப்
பருவத்தில் இப்படியெல்லாம் செய்யும். கண்டிப்பாக வீடுகளில் இதை
நீங்கள் பார்க்கலாம்.
பெரியவர்களுக்கு இன்றுள்ள டி.வி.யை சரியாக இயக்கி வைக்கத் தெரியாது. ஆனால்.
இரண்டு வயதுக் குழந்தை டி.வி.யைத் திறந்து அதை இயக்கி வைத்துப் பார்த்துக்
கொண்டிருப்பான்.
அதில் என்னென்ன விளையாட்டுகள் இருக்கின்றதோ
அதையல்லாம் மிகவும் எளிதாக விளையாடுவான். பார்க்கலாம் நீங்கள்.
ஏனென்றால், கருவிலிருக்கும்
போது அந்தத் தாய் டி.வி.யை உற்றுப் பார்த்தது. அதை நினைவு கொண்டது.
அப்படிப் பார்த்த அந்த உணர்வுகள் அங்கே விளைந்து அந்த டி.வி.யைத் திருப்பி வைக்கின்றான்
குழந்தை, அது வேலை செய்கிறது.
சினிமாவில் “டிஷ்யும் டிஷ்யும்” என்றுதான் சண்டை போடுவதைக் காட்டுகின்றார்கள்.
அவன் என்னென்னெ தந்திரம் செய்கின்றானோ குழந்தை அதை அத்தனையுமே அந்தச் சிறிய
வயதிலேயே செய்கிறான்.
தாய் பார்த்த உணர்வுகள் கருவிலே விளையப்படும் போது
இப்படித்தான் வருகின்றது.
இதை மாற்றுவதற்குத்தான் அருள் மகரிஷி சொன்னான்.
கருவில் தன் குழந்தை வளரப்படும் போது மகரிஷிகளின் அருள் சக்தி என் கருவில்
வளரும் குழந்தை பெறவேண்டும். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி என்
குழந்தைக்குப் பெறவேண்டும்.
இருள் நீக்கிப் பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறன் பெறவேண்டும். உலகையே
காத்திடும் உணர்வுகள் என் குழந்தைக்கு விளையவேண்டும் என்று
அந்த உயர்ந்த ஞானத்தை கருவில் விளையும் அந்தக் குழந்தைக்கு
இதை வினையாகச் சேர்க்க வேண்டும். என்று
அந்தக் கருவுற்ற தாய் பிரார்த்தனை செய்யவேண்டும்.
இது குழந்தைக்குக்குப் பூர்வ புண்ணியமாக அமையும்.
உலக மக்கள் அனைவரும் அருள் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். அவர்கள்
அறியாத இருள்கள் நீங்க வேண்டும். பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறன்
பெறவேண்டும்.
நாங்கள் பார்ப்பவர்கள் எல்லோரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்.
அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ வேண்டும் எங்களைப் பார்ப்போருக்கெல்லாம் அந்த
மகிழ்ச்சியின் தன்மை பெறவேண்டும் என்ற இந்த உணர்வை வினையாகச் சேர்க்கச் சொன்னான்.
அதையே கணங்களுக்கு அதிபதியாக்கச் சொன்னான்.
அப்பொழுது அதே தாய் உலக மக்கள் அனைவருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி
கிடைக்க வேண்டும் என்று அதை எண்ணும் போது அந்த உணர்வுகள் தாய் கருவில் வளரும்
அந்தச் சிசுவிற்கு பூர்வ புண்ணியமாக அமைகின்றது.
அன்னை
தந்தையருக்கும் இந்தச் சக்திகள் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று இதைச் செய்யச் சொன்னான்
அன்று ஞானி.
நாம் செய்தோமா? செய்கின்றோமா?
ஞானிகள் காட்டிய வழியில் இனியாவது செய்வோம். அருள் ஞானிகளை உருவாக்குவோம்.
உலகைக் காக்க வேண்டும் என்று தவமிருப்போம்.