விஞ்ஞான அறிவால் உடல் கூறுகளுக்கு நாம் பல வசதிகளைச் செய்யலாம். இந்த உடல் கூறின் மனிதனின்
வாழ்க்கையில் தீமைகள் பல இருப்பினும் இதிலே இன்று கேன்சர் என்ற நோயும் வருகின்றது.
கேன்சர் நோய் வந்ததென்றால் அதனின் விஷத் தன்மை நமக்குள் மற்ற விஷத்தன்மை
வாய்ந்த நிலைகள் அதாவது
ஒவ்வொரு அணுவிலும் இருக்கக்கூடிய விஷத்தன்மையை
அதற்குக் கிடைக்காது அதை இது (கேன்சர்) உறிஞ்சிக்
கொள்ளும்.
ஏனென்றால், ஒரு அணுவிற்குள் இருக்கும் விஷத் தன்மைதான் அதை இயக்கும் ஆற்றல்
கொண்டது. அந்த விஷத் தன்மை உணர்வின் தாக்குதல் இல்லையென்றால் நற்குணங்களை
இயக்குவதில்லை.
ஆக, அதைக் குவித்து மற்ற உணர்வுகளுக்குச் செல்லாது தடைப்படுத்தி
இது விளையும் நிலைகள் வரும் போதுதான் “கேன்சர்”
மற்றதை வளரவிடாதபடி இதனின் வேகத் துடிப்பு
அதிகரிக்கின்றது.
ஆனால், இதை நீக்க அன்றைய மெய்ஞானிகள் என்ன செய்தார்கள்? இன்று (விஞ்ஞானிகள்)
டாக்டர்கள் கொடுப்பது போல மருத்துவம் கொடுக்கவில்லை.
கேன்சர் என்றால் மெய்ஞானிகள் பார்வையில் அந்தக்
கேன்சர் நோய் - ”கேன்சல்” - சுத்தமாக அதை நீக்கிவிடும்.
ஆக அவருடைய எண்ணங்கள் கொண்டு
தனக்குள் சுட்டுப் பொசுக்கும் நிலையாகவே தான் இருந்த்து.
கேன்சர் நோயை நீக்கும் தாவர இனங்களும் அக்காலத்தில் உண்டு.
மற்ற மனிதனை நஞ்சு கொண்ட நிலைகள் இதைப் போன்று தாக்குமே என்றால் அந்த உணர்வின்
தன்மையை உற்று நோக்கி நோயினை
நீக்கியுள்ளான் அன்று அகஸ்தியன்
அந்த நோயினை வெல்லும் தாவர இனச் சத்தை அவன் அதற்கு நேராக வைத்து
சூரியனின் ஒளிக் கதிர்களை அதிலே பாய்ச்சப்படும் போது
அந்த ஒளிக் கதிரின்
நிலைகள் ஊடுருவி
நோயுற்றவவன் உடலுக்குள்
சென்றபின்
கேன்சர் நோய் நீங்கியது.
காலத்தால் இவை மறைந்துவிட்டது. ஆனால், நாம் இன்று விஞ்ஞான அறிவில் வளர்ந்து
கொண்டதால் விஞ்ஞான அறிவினைத்தான் நாம் இன்று போற்றித் துதிக்கும் நிலையில் உள்ளோம்.
இன்று ஒவ்வொரு விஞ்ஞானியும்
அவரவர்கள் கணிப்பிற்குத் தக்கவாறு
புதுப் புது நோய்களை வெளியிட்டுக்
கொண்டுள்ளார்கள்
உலகம் நாளைக்கு என்ன ஆகின்றதோ எது கெட்டுப் போகின்றதோ எது என்ற நிலைகளில் அவர்கள்
அச்சுறுத்தும் உணர்வின் தன்மைதான் வருகின்றது.
உலகம் முழுவதற்கும் இந்த நிலை வரப்படும் போது இதைக் கேட்டுணர்ந்த உணர்வுகளில் தீமையின் உணர்வே
அவர்களுக்குள் விளைந்து தீமையின் சக்தியைத்தான் விளைய வைக்க முடிகின்றது.
அச்சுறுத்தும் இத்தகைய எண்ணத்தைத் தோற்றுவிக்கும் போது அந்த உணர்வின் தன்மை
பதிவு செய்து அதனின் ஆற்றலைப் பெருக்குவோம் என்றால் விஞ்ஞான அறிவால் கண்டுணர்ந்து வெளிப்படுத்தும்
உணர்வுகள் இதை ஒவ்வொரு மனிதனும் நுகர்ந்தால் அதன் உணர்வு தீமைகளையே விளைய வைக்கும்.
ஏனென்றால், அவனுக்குள் தீமையென்ற உணர்வை விளையச் செய்தான். அந்த உணர்வின்
அலையைப் பரப்புகின்றான். அதை உற்று நோக்கினால் அந்த உணர்வின் தன்மை ஊழ்வினையாக
வித்தாக அது பதிவாகின்றது.
மீண்டும் நினைவாற்றல் அந்தத் தீமையே தனக்குள் வரும்படி
செய்கிறான். அப்பொழுது இவனின் நல்ல உணர்வுகள் மாறுகின்றது, இவன் சிந்தனையற்றவனாக
மாறுகின்றான்.
ஏனென்றால், விஞ்ஞான அறிவின் தன்மைகள்
எவ்வளவு
உன்னிப்பான நிலையில் கவனிக்கின்றனரோ
மனித வாழ்க்கைக்கு உகந்ததல்ல.
ஆனால், அவனுடைய அற்புதங்கள் கண்டுபிடிப்பதிலே தான் இருக்கும். மனிதனின்
உணர்வில் தீமையை அகற்றும் நிலை அங்கே இல்லை.
விஞ்ஞான அறிவில் இன்று கண்டுணர்ந்த சில மருந்துகள் கடுமையான நிலைகள் கொண்டது.
நம் உடலில் சாதாரணமாக ஒரு நோய் வருகிறதென்றால் அந்த நோயை உருவாக்கும் தன்மையை
நீக்க அதைக் காட்டிலும் ஒரு நல்ல உணர்வின் தன்மை அதை வளர்க்கும் அதனுடன் நஞ்சைக்
கலந்து அதை உடலுக்குள் கொடுப்பார்கள்.
அந்த மருந்தைக் கொடுத்தபின் வேகமாக எதை இந்த நஞ்சைத் தாங்கியதோ அந்த உணர்வின் தன்மை
கொண்டு இந்த மருந்து உடலிலே பரவும்.
ஆக, எது தீங்கு செய்கின்றதோ அதனின் நிலைகளில் இது தீங்கு செய்யும் உணர்வாக
எதிர் மறையாகக் கொடுக்கப்பட்டு இதற்குள் சென்றபின் இந்த நஞ்சின் வேகம் அதற்குள் புகுத்துகின்றது.
நோயை உருவாக்கிய அந்த நஞ்சும் இதுவும் இரண்டறக் கலந்தபின் இதனின் உணர்வை அதற்குள்
சேர்த்தபின் நோயை இது
மாற்றுகின்றது.
இருப்பினும், இவன் எதை மாற்றி இதற்குள் எதிர்மறையாக அனுப்புகின்றானோ அது புதுவிதமான உணர்வாக அது மாறி மற்றொரு நோயை இது நிச்சயம் உருவாக்கும்.
ஆனால், மெய்ஞானிகளால் கொடுத்த உணர்வோ இயற்கையில் விளைந்த தாவர இனச் சத்தின் தன்மையும்
அதைத் தன் எண்ணத்தால் உணர்வின் தன்மை செலுத்தப்பட்டு தன் நினைவாற்றலால் ஊடுருவச்
செய்கின்றான்.
இந்த ஊடுருவல் அங்கே சென்றபின்
எந்தத் தாவர இனச் சத்தோ அதை நுகர்ந்து
இதை ஜீவன் பெறச் செய்யும்
போது
தீமைகளை நீக்கிடும்
நிலையாக வருகின்றது.
எந்தத் தாவர இனச் சத்தை நாம் நுகர்ந்து அந்த உணர்வின் சத்தாக ஜீவ அணுவாக
மாறுகின்றதோ அந்த அணுவின் தன்மைதான் மற்ற நிலைகளை உருமாற்றும் நிலை உருவாகின்றது.
ஆக, இதைப் போல அன்று
தத்துவ ஞானிகள் இயற்கையின் நிலைகளைக் கண்டுணர்ந்தவர்கள் ஏராளம், ஏராளம்.
அவர்கள் கண்டுணர்ந்த உணர்வுகள், அவர்களுக்குள் விளைந்த நஞ்சினை நீக்கிடும் உணர்வின்
ஆற்றல் இன்றும் நமது பூமியில் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக பரம் என்ற
இந்தப் பூமியில் பரமாத்மாவாக சுழன்று கொண்டேதான் உள்ளது.
அதை நாமும் பெற முடியும். பெற்று, எத்தகையை கொடிய நோயையும் தீமைகளையும் நீக்க
முடியும்.