Friday, February 19, 2016

உடல் மண்ணுடன் மண்ணாகப் போகட்டும், நாம் உயிருடன் ஒன்றி ஒளியின் உடலாகப் பெறுவோம் - இராமாயணம்

உண்மையை மெய்ப்பித்து இராவணனிடமிருந்து சீதாவை மீட்டி வருகின்றான் இராமன்.

அசுரனிடத்தில் சிக்கியிருந்தது ஆகவே, மக்கள் கேட்பார்கள். அதைத் தூய்மைபடுத்துவது எப்படி என்பதற்காக அக்னிப் பிரவேசம் ஆன பிற்பாடு சீதாவை தன் அரண்மனைக்கு அழைத்துச் செல்கின்றார்கள்.

ஆனால் அரண்மனைக்கு அழைத்துச் சென்ற சிறிது காலத்திலேயே சீதா கருவுறப்படும் போது எல்லோரும் சந்தேகப்படுகின்றனர்.

அரக்கனிடம் சிக்கியிருந்ததனால் அந்தக் கருவிலும் அரக்க உணர்வு விளையும் என்று எல்லோரும் சந்தேகப்பட்ட பின் இராமன் என்ன செய்கிறான்?

இலட்சுமணனைக் கூப்பிட்டு (ஏன் என்றால் விஷத்தின் இயக்கமானது அது) சீதாவை ஒன்றும் சொல்லாதபடி கர்ப்பிணியைக் கொண்டுபோய் காட்டில் விடும்படி சொல்லுகின்றான்.

அந்த காட்டில் விடப்பட்ட பின் கர்ப்பிணி என்ன செய்யும்?

வர்தான் கடவுள். இராமன் எல்லாவற்றையும்  காப்பாற்றுவார் என்று நாம் சொல்லுகின்றோம். அப்புறம் ஏன் இதைச் செய்கின்றார்?

இராவணன் அரக்கன் செய்தாலும், அந்த அரக்கனைக் காட்டிலும் பல கொடுமைகள் செய்யும் உணர்வுகள் இங்கே வருகின்றது.

ஏனென்றால், ஒரு கருவுற்ற தாயைக் காட்டு விலங்குகளுடன் விட்டுச் செல்லும்போது அந்த அரக்கனை காட்டிலும் அரக்கனாகி விடலாம் அல்லவா!

இதை எதற்காக நமக்குத் தெளிவாக்குகின்றார்கள் என்று சற்று சிந்தித்துப் பார்ப்போம்.

காட்டுக்குள் சீதா அனாதையாகத் தவிக்கின்றது. அப்பொழுது ஒரு பெண் அங்கே வந்து சீதாவை வான்மீகியின் ஆசிரமத்தில் கொண்டு போய்ச் சேர்த்து விடுகின்றது.

வான்மீகி சீதாவைப் பார்க்கின்றான். உண்மையின் உணர்வை அறிகின்றான். அப்பொழுது அந்த கருவிலே இருக்கக்கூடிய குழந்தைக்கு
வானவியலின் உணர்வின் தத்துவத்தை எடுத்து
கர்ப்பிணியின் செவியில் ஓதுகின்றான்.

கர்ப்பிணியான சீதா அதை எடுத்து அந்த உணர்வு கருவிலே அந்த குழந்தைக்குள் விளைகின்றது.

இப்படி அங்கே அந்த ஞானத்தை விளைவிக்கச் செய்கின்றான் வான்மீகி. உணர்வின் எண்ணங்களும் உலக நிலைகளும் எப்படி உருவானது என்ற நிலையையும் தெளிவாக்குகின்றான்.

இப்படித் தெளிவாகி அந்தக் குழந்தை வந்தபின் அந்த ஞானத்தின் வழி லவா குசா என்ற இரு குழந்தைகள் பிறக்கிறது. சீதா அதை வளர்த்து வருகின்றது.

சீதாவைப் பிரிந்து சென்றபின் இராமன் தனித்து வாழ முடியாது. அதனால் மிகவும் வேதனைப்படுகின்றான். அதே மாதிரி மக்களும் அந்த அரச சபையில் உள்ளவர்களும் வேதனைப்படுகின்றனர்.

அப்பொழுது அந்தத் துன்பத்திலிருந்து மீட்டுவதற்காக அன்று தசரதச் சக்கரவர்த்தி எப்படி அசுவ மேத யாகத்தை நடத்தினாரோ அதேபோல் மீண்டும் ஒரு யாகத்தை நடத்தி தனது நாட்டைப் புனிதப்படுத்த வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்துகின்றான் இராமன்.

இப்படி நாட்டைப் புனிதப்படுத்த யாகசாலையைத் தயார் செய்து குறிப்பிட்ட நாள் வரப்படும்போது இதை வான்மீகி அறிந்து கொள்கின்றான். அறிந்து கொண்டபின் அவன் என்ன செய்கின்றான்?

யாக சாலை நாளைக்கு நடக்க இருக்கின்றது என்றால்
லவா குசாவை இன்றே அங்கே அனுப்புகின்றான்.

லவா குசா இராம காவியங்களை அங்கே படிக்கின்றனர். அங்கே படிக்கப்படும்போதுதான் மற்றவர்களுக்கு இவர்கள் யார் என்று புரியவில்லை. ஆனால் இராமனுக்குப் புரிகின்றது.

சீதாவுக்கும் எனக்கும் உண்டான தொடர்புகள் எங்கள் இரண்டு பேருக்கு மட்டுமே தான் தெரியுமே தவிர இந்த ரகசியம் யாருக்கும் வெளியே தெரியாது.

ஆனால், இந்தக் குழந்தைகள் எப்படி அதைப் பாடுகின்றார்கள்? அப்படியானால் இவர்கள் யார்? என்ற நிலையில் லவா குசாவை அணுகிக் கேட்கின்றான்.

அவர்கள் இராமனை வான்மீகி இருக்கும் ஆசிரமத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கே தன் மனைவி சீதாவைப் பார்க்கின்றான். சீதாவை பார்க்கப்படும்போது அவர்கள் தன் குழந்தைகள் தான் என்று அப்பொழுது உணர்கின்றான்.

தன் குழந்தைகள் தான் என்ற நிலையில் சரி.., இனி கடந்த காலத்தை மறந்து விடுவோம். இனிமேல் நாம் ஒன்று சேர்ந்து வாழ்வோம் என்று சீதாவை இராமன் தன் அரண்மனைக்கு அழைக்கின்றான்.

அப்பொழுது இந்த பூமா தேவி என்ன செய்கின்றது?

ஏனென்றால், எல்லா உணர்வும் பூமியில் விளைந்து
பல தாவர இனங்களால் அதனின் சுவைக்கொப்பத் தான்
எண்ணங்கள் உருவாது.

பல எண்ணங்கள் உருவானாலும்
எத்தனையோ கோடி உணர்வுகள் பெற்று
இன்று இந்த மனித உடலை உருவாக்கியது.

மனிதனான பின் இதற்குள் இந்த சுவையின் உணர்வுகள் எப்படி இருக்கின்றது என்ற நிலையில் தன் உடலிலே எத்தனை வேதனைப்பட்டாலும் பூமாதேவி,
போதும் நீ பட்ட கஷ்டம்..,” என்று பூமி பிளந்து
இந்த உடலான தசைகள் மண்ணுடன் மண்ணாகிவிடுகின்றது.

மண்ணிலே விளைந்ததுதான் இந்த உடல்.
மண்ணிலே விளைந்ததுதான் இந்தத் தாவர இனங்கள்.
அந்த உணர்வின் வித்து ஒளியாக மாறுகின்றது.
ணர்வின் சத்து உடலாகின்றது.

இந்த உடலின் சத்து மண்ணுடன் மண்ணாகப் போகின்றது. மண்ணுடன் மண்ணாகும் இந்த உடலுக்காக நாம் ஒவ்வொரு நாளும் எத்தனையோ பிரயத்தனங்கள் செய்கின்றோம்

சாபம், கோபம், வெறுப்பு, வேதனை, அழித்தல், கொல்லுதல் என்ற உணர்வுகளை நாம் கொண்டு வருகின்றோம்.

என்னை இப்படிப் பேசிவிட்டார்கள்,
என்னைக் கேவலப்படுத்தி விட்டார்கள்
என்ற உணர்வின் தன்மை நாம் எடுக்கப்படும் போது மண்ணோடு மண்ணாகும் இந்த உடலுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றோம்.

உயிரென்ற உணர்வுடன் ஒன்றி அந்தப் பிறவியில்லா நிலையை அடையும் அந்த உணர்வைப் பெறும் தகுதியை நாம் இழந்திருக்கின்றோம். அதைத்தான் இங்கே இராமாயாணத்தில் தெளிவாகக் கூறப்படுகிறது.

ஆகவே, இந்த உடல் பூமி வெடித்து மண்ணுக்குள் சென்று விடுகின்றது. இங்கே உடலில் விளைவித்த உணர்வுகள் உயிரான விஷ்ணுவிடம் போய் அடைகின்றது.

அப்போது தான் அந்த விஷ்ணு கேட்கின்றது. நீ உலகை அறிய விரும்பினாயே..! நீ பார்.., எத்தனை தொல்லைகள் வருகிறது என்று?

நமது எண்ணத்தால் இந்த மனிதனின் வாழ்க்கையில் எத்தனை துயரங்கள் இருக்கிறது என்பதனைக் காட்டியுள்ளார்கள்.  

இதிலிருந்து நாம் விடுபட்டு உயிருடன் ஒன்றி இனி பிறவியில்லா நிலை என்ற சொர்க்க நிலையை நாம் அடைய வேண்டும்.

இந்த உடல் வாழ்க்கையில் வந்த தீய வினைகள் மண்ணோடு மண்ணாகப் போகட்டும்.

அதை விடுத்து விட்டு உயிரான விஷ்ணு என்ற உணர்வை நாம் எடுத்து வளர்க்கும்படி உணர்த்துகின்றார்கள்.
ஆகவே, அந்த உணர்வின் அறிவாக நமக்குள் வளர்த்துக்கொண்டால் பிறவியில்லா நிலையை அடைய முடியும் என்பதனைத் தான் இராமாயணத்தில் தெளிவாக கூறப்படுகின்றது.

இந்த அர்த்தமே நாம் தெரியாதபடி வேறு விதமாக நாம் எங்கேயோ கொண்டு போகின்றோம்.

நம் ஞானிகள் காட்டிய உணர்வு நம் உயிர் விஷ்ணு. நாம் எடுத்துக்கொண்ட உணர்வுகள் தீமையை நீக்கி இந்த உயிரென்ற ஒளியின் உணர்வைப் பெறவேண்டும்.

சந்தோஷம் என்ற உணர்வுகள் இருளுடன் சேர்கின்றது. ஆனால், சந்தோஷம் என்ற உணர்வுகள் இந்தச் சத்துடன் சேர்த்தால் இது மண்ணுடன் தான் மண்ணாகப் போய்விடுன்றது.

உணர்வின் இயக்கம் உயிருடன் ஒன்றி
ஒளியின் உடலாகப் பெறுவதுதான் கடைசி நிலை
என்று தெளிவாகக் காட்டப்படுகின்றது இராமாயணத்தில்.

உயிரணு தோன்றி மனிதனானபின் இன்று ஒளியின் உடலாக இருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரொளியை நாம் ஏங்கிப் பெற்று இரத்த நாளங்களில் கலக்கச் செய்யவேண்டும். 

நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறச் செய்ய வேண்டும். எல்லா உறுப்புகளை உருவாக்கிய அணுக்களையும் பெறச் செய்யும் முறைதான் யாம் உபதேசிக்கும் இந்தத் தியானத்தின் நிலைகள்.

ஆகவே, நமது குரு காட்டிய அருள் வழியில் இந்த உணர்வை நாம் அனைவரும் பெறமுடியும், உங்களை நீங்கள் நம்புங்கள்.