அகஸ்தியன் வாழ்ந்த காலத்தில் காட்டுப் பகுதியில் சென்ற போது
அவனுடைய மூச்சலைகள் பாறைக்குள்
எவ்வாறு ஊடுருவியுள்ளது?
அவன் எடுத்துக் கொண்ட உணர்வின் சத்து அவன் அமர்ந்திருந்த இடங்களில்
மற்ற மேகக்
கூட்டங்களைக் எவ்வாறு கவரச் செய்கின்றது?
வெறும் வழுக்குப் பாறையாக இருக்கும்.
அதே சமயத்தில் எப்படி மேகக் கூட்டங்களை ஈர்த்து
அந்த நீராக வடியச்
செய்கின்றது?
இதையெல்லாம் நமது குருநாதர் காட்டுக்குள் அழைத்துச் சென்று காட்டினார்,
உணர்த்தினார்.
அகஸ்தியன் அவன் சென்ற இடங்களெல்லாம் அவன் எங்கேயெல்லாம் தங்கியிருந்தானோ
அவன் உடலில் விளைந்த உணர்வுகள்
விண்ணுலக
ஆற்றலைத் தனக்குள் கவர்ந்து
மற்றதை நீராக வடியச் செய்யும்
தன்மைகள்.
ஏனென்றால் ஆதியிலே இந்த அணுக்களின் மோதல்களில் மேகங்கள் கூடியிருக்கும் போது
இந்த அணுக்கள் அந்த மேகக் கூட்டத்தில் மோதும்போதுதான் அது நீராக மாறி அதன் வழி
கொண்டு ஒரு பொருளாக மாறுகின்றது.
ஆக நீராக மாறி ஓடும் வேகத்தில் நீரின் தன்மை ஆவியாக மாறுகின்றது. ஆவியாக
மாறியபின் ஒரு பொருளாக உருவாகின்றது.
அதைப் போல இந்த அகஸ்தியன் உணர்வுக்குள் தாய் கருவிலே விளையப்படும் போது அதே
சமயத்தில் இவன் சிறுகச் சிறுக விளைந்ததும் இவன் விண்ணுலக ஆற்றலையும் தனக்குள்
கவரும் ஈர்ப்புத் தன்மை அதிகமாகின்றது.
அதிகமாகும் போது ஜீவ நதியான அதன் எதனுடைய நிலைகள் நீரோட்டங்கள் ஓடுகின்றதோ
இவனால் இவனுக்குள் விளைந்த உணர்வுகள்
அகஸ்தியன் அமர்ந்த பாறைகளில் பாதைகளில் பதிந்து
அது மேகத்தைக் கூட்டி அவனுக்கு நீரின் தன்மை கொடுக்கின்றது.
இதை அகஸ்தியன் சென்றிருக்கக்கூடிய பாகங்களுக்கெல்லாம் போய்ப் பார்த்தோம்
என்றால் அந்தப் பாறையில் அந்த நீர் வரும்.
குருநாதர் ஒரு இடத்தைக்
காட்டுகின்றார்.
அங்கே மேல் மூடி கிடையாது.
அதில் பக்கத்தில்
மரங்களும் கிடையாது.
தனிப் பாறையாக உச்சியில் இருக்கின்றது.
அந்த உச்சிப் பாறையில் அது நீங்கள் எவ்வளவு தண்ணீரை எடுத்தாலும் வந்து
கொண்டேயிருக்கின்றது.
காரணம், அங்கே அகஸ்தியன் அமர்ந்த உணர்வும் அங்கு பதிந்த அணுக்களின் வலிமையும்
அது காற்றுக்குள் இருக்கும் மேகக் கூட்டங்களைக் கவர்கின்றது. மீண்டும் அதன் வழி
கொண்டு வடிகட்டுகின்றது. இந்த நீர் வருகின்றது.
“நீ மற்ற பாறைகளில் வரும் நீரை நுகர்ந்து பார்.., அதைச் சுவைத்துப் பார்.
இதற்கும் அதற்கும் என்ன நிலை?” என்று மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அங்கே அழைத்துச் சென்று அந்த
நீரைப் பருகும் படியும்
சொன்னார்.
ஏனென்றால், அகஸ்தியன் உடலில் விளைந்த உணர்வுகள் இவ்வாறு இருக்கின்றது
அதனின் உணர்வை நீ அறிய உனக்கு உதவும். அவன் கண்டுணர்ந்த உடலில் விளையவைத்த உணர்வை நீ பெற முடியும்
என்று
அதனை நுகரச் செய்து
அதனின்
உணர்வை ருசிக்கச் செய்து
என் உடலுக்குள் பதியச்
செய்தார்.
ஆனால், நான் உனக்குக் காட்டுகிறேன் என்று எல்லோருக்கும் இதைக் காட்டும்
நிலைகள் வந்துவிடாதே.
எல்லோருக்கும் நீ பெறச் செய்.
அதன் வழிகளில் பெற்ற பின்
அவர்கள் நுகர்ந்து அந்த
இடத்திற்குச் செல்லச் செய்.
அதுதான் உகந்ததே தவிர இதை எடுத்தால் மனிதன் இன்று தன்னுடைய ஆசை இந்த உடலின்
இச்சைக்கு மாற்றுவான். தவறுகளையும் பல செய்வார்கள். இதை உனக்குள்
நினைவுபடுத்துகிறேன் என்று சொன்னார் குருநாதர்.