ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 16, 2016

தீமையை நான் பார்க்காது, தீமை எனக்குள் விளையாது, என்னால் பிறருக்கு நன்மை பெறும் சக்தியே வரவேண்டும்

சூரியனிலிருந்து வெளிப்படும் காந்தப் புலனறிவுகள் ஒரு செடியின் மணத்தைக் கவர்ந்து அந்த உணர்வின் சத்தைத் தனக்குள் கவர்ந்து கொள்கிறது.

கவர்ந்த பின் அதை வேறு மாற்றுச் செடிகள் கவர்ந்திடாது, தனக்குள் எந்தச் செடியின் சத்தைக் கவர்ந்து கொண்டதோ அதே செடியில் விளைந்த வித்திற்கு இது (சூரியன்) உணவாகக் கொடுக்கின்றது.
அதனின் அறிவாக அதற்கு உணவாகக் கொடுக்கின்றது.
தெளிவாக எடுத்து அதைக் காக்கின்றது.

ஆக, தன் மணத்தால், அறிவால் வேறொரு செடியின் மணம் அருகிலே வந்தால் தனக்குள் வராது பாதுகாத்துக் கொள்கின்றது.

ஏனென்றால், இன்னொரு செடியின் சத்தை இதே சூரியனின் காந்தச் சக்தி கவர்ந்தால்
இந்தச் செடியில் உள்ள மணத்தின் வலுவைக் கொண்டு
இதிலே அதே சூரியனின் காந்தசக்தி தாக்கி
அந்தச் செடியின் வலுவைக் கூட்டி
இது தனக்குகந்ததல்ல என்ற நிலையை
இதனின் வலுவால் அதனின் விதைக்கு
மணத்தால் அது மீட்டி விடுகின்றது.

சூரியனின் செயலாக்கங்கள் இது.

இதைப் போன்று நமது உயிரோ ஒருவன் கோபப்படுகிறான் என்றால் அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் காட்டுகின்றது, உணர்த்துகின்றது.

அது விளைந்துவிட்டால் அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்து நல்லவைகளைப் பேசவிடாது தனக்குள் தடுத்துக் கொண்டேயிருக்கும்.

இராமலிங்க அடிகள் சொன்னது, அருட்பெரும் ஜோதி நீ தனிப் பெரும் கருணை.

ஒருவன் தீமையை விளைவிப்பதை நான் பார்த்தால் அந்தத் தீமையின் உணர்வின் தன்மையை எனக்குள் உணர்த்திக் காட்டுகின்றாய்.

1.  தீமையை நான் பார்க்காது,
2.  தீமைகள் எனக்குள் விளையாது,
அந்த அருள் பெரும் ஜோதியாக நின்று நீ தனிப் பெரும் கருணையாக பிறரின் நிலை எனக்குள் வளராது,
3.என்னால் பிறருக்கு நன்மை பெறும் சக்தியே என்னில் வர வேண்டும்.

எனக்குள் தீமைகள் வராது
தீமையற்ற உணர்வுகள் என்னிலே விளைய வேண்டும்.

என்னைப் பார்ப்பவருக்கும் என் சொல்லைக் கேட்பவருக்கும்
தீமையற்ற நிலைகள் அவருக்குள் விளையவேண்டும்.

அருள் பெரும் ஜோதி நீ தனிப் பெரும் கருணை என்று சாதாரண மக்களுக்கும் எளிய முறையில் அவர் காவியப் பாடலாகப் பாடியுள்ளார்.

பாடலின் உணர்வை அவர் பதிவு செய்து மனிதன் நீ எதை எண்ண வேண்டும்? என்பதனைத் தெளிவாக இங்கே உணர்த்துகின்றார் இராமலிங்க அடிகள்.