ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 30, 2015

நல்ல குணங்களை நமக்குள் வளர்க்க ஞானிகள் அன்று செய்த நிலைகள

இந்தக் காலத்தில் தாயையே பேய் என்று பேசக்கூடிய நிலைகள் உள்ளன.

தாய் தன் பையனைப் பார்த்து, “நீ நல்ல பையனாக இரு, ஒழுக்கமானவனாக இரு” என்று கூறினால் “என்னை ஏன் நீ பெற்றாய்? நீ எனக்குச் சோறு போடு” என்று தாயையே பேசும் நிலை உருப்பெற்றுவிட்டது.

விஞ்ஞான அறிவால் குழந்தைகளின் உள்ளங்களில் வளர்ந்த நல்ல பண்புகள் சீர்கெட்டு விட்டன.

உலகில் என்னென்ன தவறுகள் நடக்கின்றனவோ அவை அனைத்தையும் படமாக்கி உலகம் முழுவதும் ஒளி பரப்புகிறார்கள். இதை நாம் அனைவரும் டி.வி. முன் அமர்ந்து காண்கிறோம்.

டி.வி.யில் தகாத செயல்களால் தண்டனை பெற்றார்கள் என்று காண்பிக்கப்பட்டாலும்
நம்மிடத்தில் பதிவாகும் உணர்வுகள்
விஞ்ஞான அறிவு கொண்டு
துரித நிலைகளில் திசை மாற்றுகின்றது.

டி.வி.யை எடுத்துக் கொண்டால் முதியவர்களுக்குக்கூடிய டி.வி.யை இயக்கத் தெரிவதில்லை. ஆனால், இரண்டு மூன்று வயதுக் குழந்தை டி.வி.யை இயக்கத் தெரிந்திருப்பது மட்டுமல்லாமல் கலர் சரியில்லை என்றால் அதனைச் சரி செய்யவும் டி.வி. குறைவாக இருக்கிறது என்றால் அதனை அதிகப்படுத்தவும் அறிந்து வைத்திருக்கின்றன.

ஏனென்றால், தாய் தான் கர்ப்பமாக இருக்கும்பொழுது டி.வி.யை உற்றுப் பார்த்து அந்த உணர்வின் தன்மையைப் பதிவாக்கி அந்த உணர்வுகள் கருவில் விளைந்த பின் குழந்தை பிறந்து இந்த நிலைகளில் செயல்படுத்துகின்றான்.

அதே சமயத்தில் டி.வி.யில் தகாத செயல்களையும் அதர்ம நிலைகளையும் காண்பிக்கப்படும் பொழுது மணிக்கணக்கில் இங்கே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்தச் சமயம் வீட்டில் திருடு போனால்கூட தெரிவதில்லை.

டி.வி.யைப் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுது யார் வேண்டுமானாலும் அங்கே புகுந்து எது வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். அந்த அளவுக்குக் கூர்மையாக டி.வி.யில் கவனத்தைச் செலுத்துகின்றனர்.

அந்தச் சமயம் படம் பார்த்ததின் உணர்வுகள் கருவில் வளரும் குழந்தையிடம் பதிவாகிவிடுகிறது. அதன்வழியில் உருவாக்கப்பட்டு அந்தக் குழந்தைகள் பிறக்கப்படும்போது “தாயே நீ என் என்னைப் பெற்றாய்?” என்று கேள்விகளைக் கேட்டும், நல்ல ஒழுக்கங்களைச் சொன்னாலும் அதைக் கேட்பது கிடையாது என்ற நிலைகளும் இருக்கின்றன.

ஏனென்றால், விஞ்ஞான அறிவு அந்த அளவுக்கு வளர்ச்சியைக் கொடுத்துள்ளது.

அன்று, மெய்ஞானிகள் சாதாரண மக்களும் தன் அறிவை எவ்வாறு பெறவேண்டும் என்று தெளிவாக்கினார்கள். அதாவது
சரஸ்வதி என்றால் யார்? லட்சுமி என்றால் யார்?
முருகன் என்றால் யார்? சிவன் என்றால் யார்? என்று உணர்த்தி
இந்த உடலில் நல் உணர்வுகளைப் பெறுவது எவ்வாறு என்று உருவங்கள் மூலம் காண்பித்துள்ளார்கள்.

நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ அது நம்முள் வினையாகி அந்த உணர்வின் சத்து நமது உடலாகும்போது சிவமாகின்றது. இது சிவம்

வினை என்பது வித்து அதனின் உணர்வின் சத்து எப்படி வினையாக நம் முன் இயக்குகின்றது என்பதை நமக்குத் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.

மனிதரின் உடலினுள் மறைந்துள்ள நல்ல குணங்களைச் சிலையாக வடித்து அந்தக் குணஙகளின் சிறப்பைக் காவியமாகப் படைத்து உணர்வின் உண்மைகளை அறியும்படிச் செய்தார்கள்.

எழுத்து வடிவம் இல்லாத அக்காலங்களில் உருவம் அமைத்து
காவியங்களைச் செவிவழி பெறச் செய்து
இதனின் உணர்வுகளை மக்களிடத்தில் பதிவாக்கி
அவர்களிடம் நல்ல குணங்களை வளரும்படி செய்தார்கள்.

நல்லதைச் செய்தால் நல்ல அணுக்கள் நமக்குள் உருவாகும். நல்ல உடலை நாம் பெறுவோம். நல்லதைச் சொன்னால் கேட்போர் உணர்வுகளில் நல்ல உணர்ச்சிகளைத் தூண்டி நன்மை பயக்கும் நிலைகள் உருவாகும்.