Saturday, July 18, 2015

இனம் புரியாத நிலையில் புதிய நோய்கள் இன்றைக்கு வரக் காரணம் என்ன?

இன்று நாம் விஞ்ஞான உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். புவியில் எந்த நிமிடமும் கதிரியக்கங்கள் பரவக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது.

அதனுடன் தீவிரவாதம் என்ற நிலையில் மிகவும் கடும் விஷத்தன்மையான உணர்வுகளை உலகத்தில் பரவச் செய்துகொண்டுள்ளார்கள்.

சில பகுதிகளில் இனம் புரியாத விஷத் துகள்களைப் பரவச் செய்துகொண்டுள்ளார்கள்.

இந்த விஷத்துகள்கள் நாளடைவில் விஷக் கிருமிகளாகி மனிதர்கள் சுவாசிக்கும்போது சுவாசத்தில் கலந்து மனிதர்களின் உடல்களில் இனம்புரியாத நோய்கள் வரும் நிலை உள்ளது.

எலிகள் மீது விஷத்தைப் பாய்ச்சுவார்கள். விஷம் பாய்ச்சப்பட்ட எலி இறந்தபின் செத்த எலியின் உடலிலிருந்து கோடிக்கணக்கான விஷக்கிருமிகள் உருவாகும்.

அந்த விஷக்கிருமிகள் மனிதர்கள் அணிந்துள்ள துணிகளிலோ உடல்களிலோ பட்டுவிட்டால் மனித உடலில் கொப்புளம் கொப்புளமாக வந்து வெடிக்கும். இதனை பிளேக் நோய் என்பார்கள்.

இந்த விஷக் கிருமிகளை குஜராத்தில் சூரத் போன்ற முக்கிய ஜவுளி வியாபார ஸ்தலங்களில் படரச் செய்து இந்த நோய்க் கிருமிகள் உலகம் முழுவதும் படர்வதற்கு வேலை செய்தார்கள்.

ஆனால், இந்திய அரசாங்கம் அதைக் கட்டுப்படுத்தியது. இல்லையென்றால் குஜராத் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் பரவியிருக்கும்.

இப்பொழுது வரக்கூடிய சில நோய்கள் எல்லாம் விஷப்பவுடர்களைத் தூவி விடுவதனால் வரக்கூடிய நோய்கள் ஆகும்.

அந்த விஷப்பவுடர்களை மனிதர்கள் சுவசிக்கும்போது உடலுக்குள் கலந்து மனிதர் உடலிலுள்ள அணுக்களில் அந்த விஷத்தன்மை சேர்ந்துகொள்கிறது. அது வளர்ச்சியடைந்து மனித உடலில் நோயாக மாறுகிறது.

இவர்கள் உடலில் நோயாக விளைந்தபின் இவர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகள் யார் யாரிடம் பேசினார்களோ, பழகினார்களோ அவர்களிடத்திலும் இந்த நோயின் தன்மை பரவுகின்றது.

இது போன்றே இன்றைக்கு டாக்டர்களால் இனம் புரிந்துகொள்ள முடியாத நிலையில் உள்ள நோய்கள் பல.

ஸ்கேன், எக்ஸ்ரே போன்ற கருவிகள் எத்தனை வைத்துப் பார்த்தாலும் இது எந்தக் கிருமி இனத்தைச் சேர்ந்தது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

இவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் இரத்தத்தில்தான் கலக்கின்றன. டாக்டர்களும், விஞ்ஞானிகளும் ஒரு நோயின் தன்மையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றால் நோயால் பாதிக்கப்பட்ட மனிதரின் இரத்தத்தை எடுத்துத்தான் பரீட்சிக்கின்றனர்.

இந்த நோய் எப்படி எதனால் உருவானது?
நோயின் வீரியத்தன்மையான அணுக்களைக் கொல்வது எப்படி?
இரத்தத்திலிருந்து நீக்குவது எப்படி?
இரத்தத்தின் வழி இது எந்தெந்த உறுப்புகளை ஊடுருவுகின்றது?
எந்த உறுப்பைத் துரிதமாகக் கெடுக்கின்றது?
என்ற வகையில்தான் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து நோயை நீக்குவதற்குண்டான மருந்துகளைத் தயார் செய்கின்றனர்.

டாக்டர்கள், விஞ்ஞானிகள் புதுவகையான கிருமிகளைக் கண்டாலும் அதனை அவர்கள் வெளியிடுவதில்லை. இது போன்ற நோய்கள் நிறைய இருக்கின்றன.

வெளிப்படையாக அறிவித்தால் மக்கள் பீதி அடைந்துவிடுவார்கள் என்று புது நோய்கள் பற்றிய விபரங்களை வெளிப்படுத்தாமல் உள்ளனர்.

பீதி என்ற உணர்வுகளை நமக்குள் பதிவு செய்தாலே சில வகை நோய்க் கிருமிகள் வந்து ஒட்டிக் கொள்ளும். எதை எண்ணத்தால் எடுத்து பயம் அடைகின்றார்களோ அந்த உணர்வின் அலைகள் வந்து நோய்கள் பரவுவதற்குச் சந்தர்ப்பம் உருவாகின்றது.

ஆகையினால், விஞ்ஞானிகள் விஷ நோய்கள் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தாமல் உள்ளனர். ஆனால், அந்த நோயைப் பற்றிய ஆராய்ச்சியின் நிலையில்தான் விஞ்ஞானிகள் உள்ளார்கள்.

அதே சமயத்தில், நோய்க் கிருமிகளை ஆடு மாடு போன்றவைகளில் செலுத்துகின்றார்கள். ஆடு மாடுகளின் தசைகளைச் சாப்பிடுபவர்களின் உடலில் இந்த நோயின் அணுக்கள் சேர்ந்து இந்த நோயின் அணுக்கள் அவர்கள் உடலிலும் பெருகத் தொடங்கிவிடுகிறது

இப்படிப் பல ரூபங்களில் பல வழிகளில் புதுப் புது நோய்க் கிருமிகள் பரவிக்கொண்டுள்ளன. இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

எந்தெந்த உணர்வுகள் மனிதரைப் பாதிக்கின்றன? மனிதர்கள் இதிலிருந்து தப்புவதற்கு வழி என்ன என்பதனை நமது குருநாதர் எமக்கு அனுபவப்பூர்வமாக உணர்த்தினார்.

துருவ நட்சத்திரத்தினை எமக்குக் காட்டி, நம் பூமிக்குள் வந்து கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வலைகளைப் பெறக்கூடிய வாய்ப்பை எமக்கு உருவாக்கிக் கொடுத்தார்.

அதைத்தான் யாம் உங்களுக்குக் கொடுக்கின்றோம். ஆகவே, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வினைச் சுவாசித்து உங்கள் உடல் முழுவதும் பரவச்செய்து உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களையும் பெறச் செய்யுங்கள்.

இனி வரும் எத்தகைய கொடிய விஷமான நிலைகளிலிருந்தும் நீங்கள் விடுபட முடியும். விஷத்தை ஒளியாக மாற்றும் அந்த ஆற்றலை நீங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களை நீங்கள் நம்புங்கள்.