உங்களுக்குள் இன்று மட்டுமல்ல என்றுமே இதற்கு முன்னால் அறியாது
சேர்ந்த தீய வினைகளால் விளைந்த நோய்கள் எவை இருப்பினும், "ஈஸ்வரா" என்று உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள்
இரத்த நாளங்களில்
கலக்க வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
பின், எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்; எங்கள்
ஜீவாத்மா
பெறவேண்டும் எங்கள்
ஜீவ அணுக்கள்
பெறவேண்டும் என்று உடலுக்குள் செலுத்தி பத்து நிமிடம் தியானிக்க வேண்டும். அந்தச் சுவாசத்தை உடல் முழுவதும் பரவச்
செய்யுங்கள்.
எங்களை
அறியாது சேர்ந்த
சக்கரைச் சத்து நீங்க வேண்டும்
எங்களை அறியாது
சேர்ந்த வாத நோய் நீங்க வேண்டும்
எங்களை அறியாது சேர்ந்த இரத்தக் கொதிப்பு நீங்க வேண்டும்
எங்களை அறியாது சேர்ந்த கேன்சர் நீங்க வேண்டும்
எங்களை
அறியாது சேர்ந்த
டி.பி நீங்க வேண்டும்
எங்களை
அறியாது சேர்ந்த
சரவாங்கி நோய் நீங்க வேண்டும்
என்ற
இந்த உணர்வினை எடுத்து எண்ணத்தைச் செலுத்திப் பாருங்கள்,
உங்கள் எண்ணம் மாற்றியமைக்கின்றதா... இல்லையா? என்று
பாருங்கள்.
சாமியை
நீங்கள் நம்புகின்றீர்கள்; சாமியாரை நம்புகின்றீர்கள்; உங்கள் எண்ணத்திற்குள் உங்கள்
உணர்விற்குள் இவ்வளவு பெரிய சக்தி இருக்கின்றது. நீங்கள் ஏன் இதைச் செய்ய மாட்டேன்
என்கின்றீர்கள்.
இப்படி
சொல்லிக் கொண்டிருப்போம். அடுத்தாற்போல், "கஷ்டம் என்னை விட்டுப் போகமாட்டேன்
என்கின்றது" என்று சாமியிடம் வரம் கேட்கத்தான் வருகின்றீர்கள்.
நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
இந்த அருள்வாக்கைப்
பெறவேண்டும்.
மகரிஷிகளின்
அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்,
எங்கள்
தொழில் நன்றாக
இருக்க வேண்டும், எங்கள்
நோய் நீங்க
வேண்டும்; நாங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று
இதைக் கேளுங்கள்
என்று சொன்னால் யாரும் கேட்டதில்லை.
மாறாக
எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கின்றது,
குடும்பத்தில்
கஷ்டமாக இருக்கிறது என்று தான் சொல்கின்றீர்கள்.
மகரிஷிகளின்
அருள் சக்தியால் எங்கள் குடும்பத்தில் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
அந்தச் சக்தியை வேண்டும் என்று கேட்டு வாங்கத் தெரியவில்லையே.
காசைக்
கொடுத்துவிட்டு "சரணாகதித் தத்துவம்" என்று கஷ்டத்தையெல்லாம் சொல்லிவிட்டால்
"அவன் பார்த்துக் கொள்வான்" என்று எண்ணும் அந்த எண்ணம் இன்றும் நம்மை விட்டு
நீங்கவில்லையே.
இப்படிச் சொல்லும் பொழுது என்ன நடக்கின்றது?
சாமி நம்மைத்தானே எடுக்கச் சொல்கின்றார்.
இந்தச் சாமியிடம் சென்று என்ன
பண்ணுவது? என்று எண்ணுகிறார்கள்.
ஜோசியக்கார
சாமியாரிடம் சென்றால் பணம் வரும், எல்லாம்
வரும், சொத்து
வரும் என்று சொன்னால் அங்கே ஓடுவார்கள். அதற்கு இவ்வளவு காணிக்கை
செய்ய வேண்டும்; இந்த யாகம் செய்ய வேண்டும் என்றால் அதற்காக காசைக் கொடுத்துவிட்டு
அவர்கள் சொன்னதைக் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
இருந்த இடத்திலேயே
நீங்கள் எதையும் பெறமுடியும்.
இருந்த
இடத்திலேயே வலிமையைப் பெறமுடியும்.
இருந்த
இடத்திலேயே அருள் சக்தி பெறமுடியும்.
இருந்த இடத்திலிருந்தே உங்கள்
எண்ணத்தை உயர்ந்த நிலைக்குக் கொண்டுவர வேண்டும்.
ஆகவே
உங்களை நம்புங்கள்;
உங்கள்
உயிரை ஈசனாக மதியுங்கள்;
உங்கள்
உடலை சிவமாக மதியுங்கள்;
உங்கள் கண்களைக் கண்ணனாக மதியுங்கள்.
உங்கள் எண்ணத்தைச் சீதாராமனாக எண்ணுங்கள்.
நாம்
சேர்த்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் வினையாக
வித்தாக எண்ணுங்கள். எத்தனை கோடி எண்ணங்களை எண்ணுகின்றோமோ அவையெல்லாம்
வித்து.
அவை
அனைத்தும் அருள் ஞான வித்தாக நாம் ஊன்றும் பொழுது தீமைகளை
அடக்கும்
வல்லமை பெறுகின்றது. அதையே வினையாக்கி கணங்களுக்கு அதிபதியாக கணபதியாக்க
வேண்டும்.
அவ்வாறு
ஆக்கிவிட்டால் நமது ஆறாவது அறிவாக கார்த்திகேயனாக மாறுகின்றது.
அண்டம் - பிண்டத்திற்குள் இயக்கும் உணர்வின் ஆற்றலைத் தெளிவாக்கியது
தான் "காவியம்". உணர்வின் தன்மையை காவியமாக்கிக்
கருத்தினை நாம் நுகரும்படி செய்தார்கள் ஞானிகள்.
ஆனால் கோவிலுக்குள் நாம் சென்றாலும் கல்லைக் கடவுளாக்கிவிட்டோம்.
நமது மனதைக் கடவுளாக்கிவிட்டோம். ஏனென்றால்,
கல்லின் ரூபமாக நற்குணங்களை எடுக்கச்
செய்கின்றார்கள்.
கல்லாக
இருப்பது துவைதம்.
கனியாக
இருப்பது துவைதம்.
மலராக
இருப்பது துவைதம்.
சுடராகத்
தெரிவதும் துவைதம்.
நாம்
பார்ப்பது துவைதம். அதனுடைய நிலைகளை எண்ணி
எடுப்பது அத்வைதம், நாம்
நுகர்ந்தறிவது விசிஷ்டாத்வைதம், அந்த
உணர்ச்சிகள் நம்மை இயக்குவது,
அந்த
உணர்வின் சக்தியாக நம் உடலுக்குள் சேர்க்க வேண்டும் மீண்டும் துவைதம். அதாவது "உயர்ந்த குணங்களை உன் உடலாக்கு" என்று தான் ஆலயத்தின் பண்பு.
அதை
நாம் விடுத்து, நம்மை அறியாமலேயே நமக்குள் பக்தி, நம்பிக்கையில்லாத பக்தியாக இருக்கின்றது.
அருள்
ஞான பக்தியுடன் வாருங்கள். நீங்கள் பார்ப்பவர்கள் எல்லாம்
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தி
பெற எண்ணுங்கள்.
ஆலயங்களில் காட்டப்பட்டுள்ள நிலைகளில் அருள் ஒளியால் நமக்குள்
இருளை அகற்றிடும் சக்தி பெறுகிறோம். நாம் ஒளியின் சரீரமாக மாறும் திறன் கிடைக்கின்றது.