ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 22, 2015

உயிரினங்களின் (அணுக்களின்) செயல்களைக் காண்பித்தார் குருநாதர்

ஒரு சமயம், நமது குருநாதர் பீநாறி மரத்தைக் காண்பித்தார். அந்த மரத்தில் ஏராளமான புழுக்கள் இருந்தன. குருநாதர் அந்த மரத்தைக் காண்பித்து ஒரு கிளையை வெட்டு என்று கூறினார்.

குருநாதர் கூறியவண்ணம் யாம் ஒரு கிளையை வெட்டி கீழே வீழ்த்தினோம். வெட்டப்பட்டு கீழே விழுந்த கிளையிலிருந்த புழுக்கள் எவ்வளவு ஆவேசமாக ஆத்திரத்தை வெளிப்படுத்துகின்றன என்று குருநாதர் காண்பித்தார்.

அந்தப் பீநாறி மரத்தில் புழுக்கள் அட்டை அடித்தமாதிரி ஏராளமாக இருந்தன. ஒரு கிளையை வெட்டியவுடனே
அதிலிருந்த புழுக்கள் படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல.
புழுக்கள் ஆத்திரத்துடன் தலையைத் தூக்கி எம்மைப் பார்க்கின்றன.

நீ கிளையை வெட்டிவிட்டாய் என்ற ஆத்திரத்தில் உன்னைப் பார்க்கின்றன. இந்தப் புழுக்கள் இறந்துவிட்டால் அவைகளினுடைய உயிராத்மாக்கள் அனைத்தும் உன் உடலுக்குள்தான் வரும் என்று காண்பித்தார் குருநாதர்.

எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் ஒரு விஞ்ஞானி ஒரு வித்தில் ஒரு உணர்வின் சத்தை இணைத்துப் பூமியில் விதைக்கின்றபொழுது அந்த வித்தில் இணைக்கப்பட்ட உணர்வின் தன்மைக்கொப்பான உணர்வு காற்றிலிருப்பதை அந்த வித்து கவர்ந்து தன்னை வளர்த்துக் கொள்கிறது.

இந்த பூமி ஒரு பரம். இந்தப் பூமியிலிருந்து வெளிப்படும் மணம் பரமாத்மா. பூமியில் விதைக்கப்பட்ட வித்து மனிதனால் உருவாக்கப்பட்டது.

வித்துடன் இணைக்கப்பட்ட உணர்வின் சத்து தன் இனத்தைக் கவர்ந்து தன்னை எப்படி வளர்த்துக் கொள்கின்றது என்பதைக் காண்பித்தார் குருநாதர்.

அங்கே செடி, கொடி, மரங்களுக்கும் ஜீவ அணுக்களுக்கும் உண்டான வித்தியாசத்தைக் காண்பித்தார் குருநாதர்.

பீநாறி மரத்தை குருநாதர் ஏன் வெட்டச் சொன்னார் என்று நினைத்தோம். கிளையை வெட்டியவுடன் புழுக்கள் “கிர்.. கிர்..” என்று சப்தம் போட்டு அவை ஒவ்வொன்றும் செயல்படுத்தக்கூடிய உணர்வினைக் கான்பித்தார் குருநாதர்.

இதுதான் வேதங்கள் கூறுவது நாதங்கள்.

அதாவது ஒரு உயிரணு எந்த உணர்வின் தன்மையை எடுத்ததோ எந்த ஆசையின் தன்மையப் பெற்றதோ அதற்கு எதிர்நிலையான உணர்வுகளைச் சுவாசிக்கும்போது
அந்த உணர்வுகள் உயிரிலே மோதி நாதங்களாகிறது.
இதைத்தான் சங்கு சக்கரதாரி என்பது.

நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே மோதும்போது சப்தம் வருகின்றதுசங்கு. நுகர்ந்த உணர்வின் உணர்ச்சிகள் உடல் முழுவதும் சுழன்று வரும் பொழுது சக்கரம். ஆக, அங்கே அந்தப் புழுக்களின் செயல் என்ன என்பதை குருநாதர் காண்பித்தார்.

நமது உயிரிலுள்ள வெப்பம் மட்டும் விஷ்ணு அல்ல. முதலில் சீதாலட்சுமியாக மாறுகின்றது. பல கோடிச் சுவையின் உணர்வை எடுத்து மனிதராகும் பொழுது மகாலட்சுமியாக மாறுகின்றது.

பல கோடி உணர்வுகள் கொண்டு மனித உயிர் இருப்பதனால் மகாவிஷ்ணுவாக ஆகிவிடுகின்றது. முதலில் விஷ்ணுவாக ஆகிறது. சீதாலட்சுமி ஆகின்றது.

ஒவ்வொன்றும் சேர்த்துக் கொண்ட வினைக்குத்தக்க இயங்கி மனித ரூபம் பெறும்போது எப்படி மகாவாக மாறுகின்றது என்பதை குருநாதர் எமக்கு உணர்த்தினார்.

பீநாறி மரத்தின் கிளையை வெட்டி வீழ்த்தி அதிலுள்ள புழுக்கள் சாகும் வரை அங்கேயே இருக்கச் சொன்னார் குருநாதர். இறந்த புழுக்களின் உயிரான்மாக்களை
எமது உடல் எப்படி இழுக்கிறது?
எமது சுவாசத்திற்கு எப்படி வருகிறது?
எமது இரத்தத்தில் எப்படிக் கலக்கிறது?
என்பதைக் காண்பித்தார் குருநாதர்.

இதையெல்லாம் நாம் தெரிந்துகொள்தல் அவசியம்.