ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 13, 2015

தீமைகளை நீக்கி கடைசி முடிவுக்கு வந்தால் வைகுண்டம் - ஏகாதசி - பத்து

இன்று விஞ்ஞானிகள் ஒரு கருப்பைக்குள் இருக்கக்கூடிய நிலைகளையும் ஒரு அணுவின் தன்மை இரத்தத்திற்குள் உருவான அணுவிற்கு அதனுடைய உற்சாகம் இந்த விஷம் கிடைத்தால் விஷமாக மாற்றுகின்றது.
அதற்கு எதிர் நிலையான உணர்வு வரும்பொழுது
துடிப்பு எப்படி மாறுகின்றது, இதையெல்லாம் கண்டுபிடிக்கின்றார்கள்.

அன்றைக்கு நமது குருநாதர் இதையெல்லாம் சொன்னார். விஞ்ஞானி எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலைகளில் எதையெல்லாம் கண்டுபிடிப்பான்.

ஆனால் இவன் கண்டுபிடித்த உணர்வால் இவனைக் காக்க முடியாது. கண்டுபிடித்த உணர்வெல்லாம் இவனுக்குள் தான் வரும்.

இவன் இறந்தானென்றால் அடுத்த உடலுக்குள் புகுந்து அவன் யாரிடம் பழகுகின்றானோ, அவன் எண்ணினான் என்றால் இந்த ஆன்மா அவனுக்குள் போகும். அவனை அறியாது அற்புதமாகச் செய்வான்.

ஒரு மந்திரவாதியிடம் சினேகிதமாகப் பழகுகின்றானென்றால் அந்த மந்திரவாதிக்கு சீடன் இருந்தால் அவன் உடலுக்குள் வந்து விடுகின்றான்.

இன்று சங்கராச்சாரியாரை குரு என்று சொல்கின்றார்கள், அவர் என்ன செய்கின்றார். கடைசியில் கூடுவிட்டு கூடு பாயச் செய்கின்றார்கள். இன்னொரு உடலுக்குள் செல்லாதபடி தேங்காயை மண்டையில் உடைத்து கபால மோட்சம் அடைகின்றேன் என்று இந்த ஜாதகக் குறிப்பை எழுதி வைத்துவிடுகின்றார்கள்.
அந்த ஜாதகப் பிரகாரம் உயிர் தொக்கி இருக்கும் பொழுது
இவர்களுடைய எண்ணத்தைச் சுருக்கிவிடுகின்றார்கள்.

முதலில் இருந்த பெரியவர் தப்பித்து ஓடி விட்டார். பின்னர் அந்த ஜாதகப்படி இவர் ஜீவசமாதி அடைய வேண்டும், அதற்காக கபால மோட்சத்திற்குக் கொண்டு வருகின்றார்கள்.
அவர் வெளியேறிப் போய்விட்டார்.
நமது குருநாதரே இதைச் சொல்கின்றார்.

அதே சமயத்தில் நம் ஆடிட்டர் (ஜி ஆர்) இருக்கின்றார். அவர் இதையெல்லாவற்றையும் நேரடியாகக் கேட்டேவிட்டார். அவரால் பதில் சொல்ல முடியவில்லை.

ஆகையினால் கடைசியில் ந்த மாதிரி அவர்கள் சீடர்களுக்குக் மந்திரத்தைச் சொல்வார்.

இப்பொழுது யாகத்தீயில் எப்படி மந்திரத்தைத் சொல்கின்றார்களோ இதேமாதிரி கடைசியில் இவரைப்பற்றி எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது இந்த ஆன்மா இவர் எண்ணியபின்  சீடரின் உடலுக்குள் வந்து விடுகின்றது. அவர் கற்றுணர்ந்த உணர்வுகள் எல்லாம் இங்கே பேசுகின்றது.

டலுக்குத்தான் இந்த மதங்கள் எல்லாம் இருக்கின்றதே தவிர, மதத்தின் கடைசி முடிவு சொர்க்கம் என்று சொல்கின்றார்கள். எந்த மதமும் சொர்க்கத்திற்கு வழிகாட்டவில்லை.

அவன் சொன்ன வழியில் சென்றால் நரகத்திற்குத் தான் அனுப்பிக் கொண்டிருக்கின்றோம்.

சொர்க்கம் என்று சொல்வார்கள். நீ சொர்க்கத்துக்குப் போ. வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கத்துக்குச் செல்லும் வழி என்று எல்லாக் கோவில்களிலும் வடக்கு வாசலைத் திறக்கின்றார்கள்.

பெருமாள் கோவிலில் மட்டுமல்ல. கோவில் என்று இருந்தால் எல்லாக் கோவில்களிலும் வடக்கு வாசலைத் திறந்து வைத்து விடுகின்றார்கள். சொர்க்கவாசல் என்பது என்ன? வடக்கு வாசல்.

மாதந்தோறும் ஏகாதசி விரதம் இருக்கச் செய்கின்றார்கள். மாதாமாதம் ஏகாதசி விரதம் எப்படி இருக்க வேண்டும்? காலையில் துருவ நட்சத்திரத்தை எண்ணி எடுத்து சுவாசித்து நம் உடல் முழுவதும் பரவச் செய்ய்யவேண்டும்.

பின், நாம் எத்தனை பேரிடம் பழகுகின்றோமோ, துருவ நட்சத்திரத்தின் பேரொளி அவர்கள் எல்லொருடைய உடலில் உள்ள இரத்த நாளங்களில் கலக்க வேண்டும். அவர்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும் என்று பாய்ச்ச வேண்டும்.

உதாரணமாக, நம் பையனிடம் என்ன செய்கின்றோம்?

அவன் குறும்புத்தனம் செய்திருப்பான், அப்பொழுது அந்த அருள் ஞானம் அவன் பெறவேண்டும். தெளிந்த நிலைகள் பெறவேண்டும். குடும்பத்தில் ஒன்றுபட்டு வாழ வேண்டும். தெய்வீகப் பண்புகள் பெறவேண்டும். தெய்வீக அருளைப் பெறவேண்டும் என்ற உணர்வை அவனுக்குப் பாய்ச்ச வேண்டும்.

இதேபோல் குடும்பத்தில் யாருக்காவது குறைபாடுகள் இருந்தால் அல்லது நண்பர்களுக்குள் குறைபாடு இருந்தால் அதையெல்லாம் நிறுத்திவிட்டு அவர்களுக்கு நல்ல நிலை ஆக வேண்டும் என்ற இப்படி எண்ணி இந்த உணர்வுகளைப் பாய்ச்ச வேண்டும்.

தொழிலிலே நஷ்டம் வருகின்றது என்றால், நஷ்டம் யாரால் வந்தது என்று எண்ணுகின்றோம். நஷ்டம் வருகின்றது என்றால், "தொழில் நன்றாக இருக்க வேண்டும்" என்று எண்ண வேண்டும்..
கெட்டதை எண்ணவே கூடாது. இதுதான் விரதம்
எண்ணிய உணர்வு தான் உமிழ் நீராக மாறுகின்றது.
அது உடலுக்குள் போனவுடன் கெட்டது செய்யும்.

தொழிலில் நல்ல உயர்ந்த நிலைக்குச் செல்ல வேண்டும். நம்மிடம் வேலை செய்பவர்களெல்லாம் இதுபோல் இருக்க வேண்டும். அன்று சங்கடம், சலிப்பு இதையெல்லாம் எடுக்காதபடி இதுதான் ஏகாதசி விரதம்.

அங்கே தொழில் நன்றாக இருக்க வேண்டும். தொழில் செய்பவர்கள் நன்றாக இருக்க வேண்டும். நாம் பொருட்களைப் பயன்படுத்துபவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று இதை எண்ண வேண்டும்.

எதையுமே நமக்கு நஷ்டமாகிவிட்டது என்று எண்ணினால் வேதனை வந்து விடுகின்றது.
நாம் எல்லாவற்றிலும் பகைமையை நீக்கினால் ஏகாதசி.
பத்து - பத்தாவது நிலை. வைகுண்ட ஏகாதசி.

அந்த வருடத்தில் கடைசியில் தீமைகளை நீக்கி கடைசி முடிவுக்கு வந்தோம் என்றால் வைகுண்டம். நாம் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுக்குப் போகின்றோம்.
இதை நாம் எடுத்து பழக வேண்டும்.
இதை எடுத்துச் சுத்தப்படுத்த வேண்டும்.

யாரும் இதைத் தெளிவாக்கவே இல்லை. நம் குருநாதர் காட்டிய வழியில் இப்பொழுது தெளிவாக்கிக் கொண்டு வருகிறோம்.