பல இலட்சம்
ஆண்டுகளுக்கு முன் காடுகளில் வாழ்ந்த அகஸ்தியனின் தாய் தந்தையர்கள்
விஷ ஜெந்துகளிடமிருந்தும் மிருகங்களிடமிருந்தும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள பல
பச்சிலைகளையும் மூலிகைகளையும் அரைத்து தங்கள் உடலிலே முலாமாகப் பூசிக்
கொண்டார்கள்.
அந்த மணத்தை நுகரும் உயிரினங்கள் அவர்களைத் தாக்காது
விலகிச் செல்கின்றன. இவ்வாறு தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் சந்தர்ப்பத்தில்
கருவிலிருக்கும் குழந்தைக்குப் (அகஸ்தியனுக்கு) பூர்வ புண்ணியமாக அமைந்துவிட்டது.
அந்தக் குழந்தை வளர்ச்சியில் வர வர இவர்கள் கடுமையான
விஷத்தன்மை கொண்ட தாவர இன்ங்களை நுகரும்பொழுது, அதிகமான அந்த விஷங்களை இவர்கள் உடல் ஏற்றுக் கொள்ளாது
மடிகின்றது.
ஆனால், கருவில் வளர்ந்த குழந்தைக்கு
இந்த உணர்வின் தன்மை அது கலந்த
நிலைகள் வளர்ச்சியின் தன்மை பெறுகின்றது.
இந்தத் தாய் தந்தையர் உடலில் முழுமையான விஷத்தன்மை
அடைந்தபின் செல்கள் குறைந்து மடிகின்றது. அப்பொழுது தாய் தந்தையர்கள் இறந்துவிடுகின்றார்கள்.
அகஸ்தியன் ஐந்து வயதில் தாய் தந்தையரை ஏக்கத்துடன்
எண்ணுகின்றான். அவர்களும் தன்னுடைய குழந்தையை எண்ணி ஏங்கியதால் அந்த இரண்டு ஆன்மாக்களும்
அகஸ்தியனின் உடலுக்குள் புகுந்துவிடுகிறது.
ஏக காலத்தில் இறந்ததால் இரண்டு ஆன்மாவும் தன் பிள்ளை மேல்
இருக்கும் பற்றால் இங்கே வருகிறது. காத்திடும் உணர்வு கொண்டு அது வளர்ந்தபின் அதே
ஏக்க அலைகளில் விண்ணை நோக்கி ஏங்குகிறான்.
பேய் பிடித்தவர்களை நீங்கள் மிளகாய்த் தூளைப் புகையாகப்
போட்டுச் சுவாசிக்கச் செய்யுங்கள். அந்த நெடிக்கு அது தும்மாது. அதைப் போல விஷத்தன்மைகளைச்
சுவாசிக்கச் செய்யுங்கள். அதற்கு
ஒன்றும் செய்யாது.
ஏனென்றால் விஷத்தைக் குடித்து இறந்த ஆன்மா அது இன்னொரு
உடலுக்குள் இருக்கும்போது விஷத்தை அதனிடம் காண்பித்தால் அதற்கு ஆனந்தமாக
இருக்கும்.
இதைப் போல அகஸ்தியன் உடலில் இருக்கப்படும்போது விண்ணின்
ஆற்றலை அவன் அதிகமாகப் பெறுகிறான். சூரியனை உற்றுப் பார்க்கும் பொழுது அதற்குள்
நடக்கும் நிகழ்ச்சிகள் அனைத்தையும் அவன் அறிகின்றான் அனைத்துமே அவனுக்குள்
பதிவாகிறது.
இன்று ஒரு டேப்பில் எப்படிப் பதிவு ஆகிறதோ அதைப் போல் சூரியனுக்குள் நடக்கும்
நிகழ்ச்சிகள் எல்லாம் அகஸ்தியனுக்குள் பதிவாகிவிடுகிறது.
அதிலிருந்து பரவும் நிலைகளையும் அதன் தொடர்வரிசையில் உள்ள
அனைத்தையும் இந்தப் பிரபஞ்சத்தையே உற்றுப் பார்க்கும் ஆற்றல் அந்த முதம் மனிதனான
அகஸ்தியனுக்குக் கிடைக்கின்றது.
இந்தப் பிரபஞ்சத்தை முழுமையாக அறிந்து விண்ணை நோக்கி ஏகும்
பொழுதுதான் நம் பூமி விண்ணிலிருந்து துருவப் பகுதியின் வழியாகக் கவர்வதை உற்றுப்
பார்க்கிறான்.
ஆனால், அதை அவன் நுகர்கின்றான்
உணர்வை அறிவாக அறிகின்றான்.
அந்த உணர்வின் அணுக்கள் அவனுக்குள் விளைகின்றது.
பின் விண்ணின் ஆற்றல் இவனுக்குள் வலுபெற்றபின் அதே
உணர்வுகள் தன்னையறியாமலே
நஞ்சின் தன்மையைத் தனக்குள் ஒளியாக மாற்றும் நிலைகள் வருகிறது.
ஏனென்றால், தாயின் கருவில் அந்த நஞ்சின் தன்மையை அடக்கும்
தன்மைகள் வந்ததால் அதன் உணர்வின் தன்மை கொண்டுவரப்படும் பொழுது இவனுக்கு அந்தத்
தாய் தந்தையே கடவுளாகின்றனர்.
இதன் வழி கொண்டுதான் இந்த விண்ணின் ஆற்றலை இவன் பற்றி துருவ
மகரிஷியாகின்றான். அந்த விண்ணின் ஆற்றலைப் பெற்று உயிரான்மா வலுப்பெற்றபின் அங்கே
போகின்றான். துருவ நட்சத்திரமாகின்றான்.
அகஸ்தியனுடைய தாய் தந்தையரோ தன் குழந்தையின் பாசமாகும்போது
குழந்தையின் உடலுக்குள் வருகின்றது.
அகஸ்தியன் தன்
உணர்வின் தன்மையில் தன்னைச் சார்ந்த தாய் தந்தையை விண்ணுக்கே
அழைத்துச் செல்கின்றான்.
அகஸ்தியன் அவன் மனைவி அகஸ்தியன் தாய் தந்தை இந்த நான்கும் சேர்ந்தது தான் துருவ நட்சத்திரம்...!
இது தான் இயற்கையின் நிலை என்று மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குக் காட்டினார்.
அகஸ்தியன் அவன் மனைவி அகஸ்தியன் தாய் தந்தை இந்த நான்கும் சேர்ந்தது தான் துருவ நட்சத்திரம்...!
இது தான் இயற்கையின் நிலை என்று மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குக் காட்டினார்.