ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 27, 2014

யாகம் என்றால் என்ன?

1. யாகம் என்றால் என்ன?
யாகம் என்பது, நமது உயிரின் ஓட்டத்தைத் துரிதப்படுத்துவதுதான். நெருப்பைக் கூட்டுவது அல்ல.

ஆனால், அந்த நெருப்புக்குள் இருக்கக்கூடிய
காந்தத்தின் துரித ஓட்டத்திற்குள்,
அந்த அலைகளின் நிலைகள் கொண்டு,
நமக்குள் இருக்கும் காந்தசக்திகளை இயக்கச்செய்வதே அந்த நிலை.
அதுதான், ஓம் என்ற பிரணவத்தின் தத்துவம்.

பூமி சுழலும் பொழுது, “....ம்என்ற நாதத்தில் சுற்றுகின்றது, அந்த ஓம் என்ற நாதத்தை நாம் உயிருடன் ஒன்றி, நமக்குள் இந்த உணர்வு உராயும் தன்மைதான் ம்”. அவ்வாறு உராயப்படும் பொழுது ஏற்ப்டும் நாதத்தின் தன்மையே அது.
ஆக, ஓம் ஈஸ்வரா என்று நமக்குள் அந்த உணர்வைத் தூண்டி, ஓம் என்ற அந்த உணர்வின் தன்மை நமக்குள் ஈர்க்கப்படும் பொழுது, உணர்வின் வேக காந்த ஈர்ப்பைக் காட்டுகிறது. இதுதான், ஜீவனுள்ளது. சக்திவாய்ந்த நிலையை ஜீவன் உள்ளது என்பார்கள்.

எவ்வாறு ஜீவனுள்ளது?
எதனுடன் சேர்ந்தால் ஜீவன் உள்ளது?
எதை ஜீவன் பெறுவது?
என்று அதைப் பிரித்தாண்டு அந்த ஞானிகள் சொல்லியிருந்தாலும், இவர்கள் அறிந்து கொள்வதில்லை.

இவர்கள் விளக்கத்திற்குத் தக்க, இவர்கள் உணர்விற்கொப்ப ஒவ்வொருவரும், ஒவ்வொரு காவியமாக எழுதியிருக்கின்றார்கள். எமக்கு படிப்பு இல்லாததால், எழுதுவதற்கு நேரமில்லாமல் போய்விட்டது. எழுதி முழுவதையும் வெளியிட்டால், இந்த இரகசியம் எல்லாம் தெரியும்.
2. இராமலிங்க அடிகள் தன் உயிரைப் பற்றித்தான் பாடினார்
இன்று விஞ்ஞான உலகம். நாம் எதை வெளியிட்டாலும் முடியாது. முன்பு, அரச காலங்களில் உண்மையை வெளியிட்டால், தலை தப்பாது. இராமலிங்க அடிகள் சொன்ன பின், அவரது கதி என்ன ஆனது?

முதலில் தெய்வ பக்தியைப் பற்றிப் பாடிக் கொண்டு வந்தார். அந்த நிலை பிறகு ஒன்றுமே இல்லை. இந்த உணர்வின் அலையை எப்படி எடுக்க வேண்டுமென்று சொன்னார்.

யாம் இப்பொழுது உபதேசிப்பதெல்லாம், அவர் அன்றே வெளியிட்டிருந்தார். அவரைப் பேச விடாதபடி, எல்லாம் தடைப்பட்டுப் போனது. அதன்பின், அவர் எங்கே போனார்? சொர்க்கத்திற்கு அனுப்பி விட்டார்கள்.

நீ போடா., இந்தச் சரீரத்தை நீ பிடித்துக் கொள்.
இந்தச் சரீரத்திற்குள், நல்ல உணர்வை ஒளியாக மாற்றிக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.

அதனால்தான், “அருட்பெருஞ்சோதி, தனிப் பெரும் கருணைஎன்ற நிலைகளில், இந்த உயிரான நிலைகள் கொண்டு, நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அனைத்துமே சமைத்து, “தனிப் பெரும் கருணை
எனக்குள் நீ சிருஷ்டித்து,
உன்னுள் ஒளியாக நான் சேருகிறேன்
என்ற நிலைகளில்தான்அருட்பெருஞ்சோதி, தனிப் பெரும் கருணைஎன்று அவர் பாடினார்.

அவர் வேறொன்றையும் பற்றிப் பாடவில்லை
தனக்குள் இருக்கும் உயிரைப் பற்றிப் பாடினார். 
இவைதான் மெய்ஞானத்தின் தத்துவங்கள்.